Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

24 June 2017

செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்: சோதனையில் ’ஸ்பேஸ் எக்ஸ்’ வெற்றி!


விண்வெளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியப் பின்னர் அதே ராக்கெட் பூமிக்கு திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது

ஒரு விமானத்தை தரையிறக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. மணிக்கு பல மைல் வேகத்தில் சீறிப்பாயும் ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால், அதனை வெற்றிகரமாக இரண்டாவது முறையாக நடத்திக் காட்டியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் செயற்கைக்கோளை நிறுத்திவிட்டு மீண்டும் வெடித்துச் சிதறாமல் பாதுகாப்பாக பூமியிலேயே தரையிறங்கும் இத்திட்டத்தால் பல செலவுகள் குறைக்கப்படும். 

இந்தப் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டம், நேற்று கென்னடி விண்வெளி மையத்தில் நடைபெற்றது. 'ஃபால்கன் 9' என்ற இந்த ராக்கெட் நேற்று பல்கேரியாவின் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது. ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் பின்னர், செயற்கைக்கோளை விட்டுப்பிரிந்த ராக்கெட் ஃபுளோரிடா மாகாணத்தில் தரையிறங்கியது. இதன்மூலம் இரண்டாவது முறையாக விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றினை மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்பதை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நிரூபணம் செய்துள்ளது.

No comments: