Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

30 September 2017

Temporary FTA on Horizon 2@85

FX TV
FOX THAI
FOX CRIME
FOX FAMILY
FOX ACTION
FOX MOVIES
STAR WORLD
ANIMAL SHOW
ON
HORIZONS @85.E
11758V45000
11838V45000
MPEG4/HD/TEMP FTA

PPTV, STAR MOVIES CHINIES
Just For Fun HD, Fox Movies Premium HD, Animal Show HD, Fox Crime HD, FX HD, Star World HD, Fox Family Movies HD, Baby TV HD, Mysci HD, Fox Action Movies HD, Fox Thai HD, & more Fta

29 September 2017

ஆசியாசாட் 9 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது


AsiaSat 9 ஆசியாசட் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் ஆகும், ஆசியாசாட் 4@122 டிகிரி கி க்கு மாற்றாக ஆசியாசாட் 9@122 டிகிரி கிழக்கு  ஏவப்பட்டது. 

28 சி-பேண்ட் மற்றும் 32 குயூ-பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள் மற்றும் ஒரு கா-பேண்ட்  ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் DTH, வீடியோ விநியோகம், தனியார் நெட்வொர்க்குகள் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கூடுதல் திறன், மேம்பட்ட ஆற்றல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் காென்டு AsiaSat 9 ஐ வடிவமைக்கப்பட்டது.

உலகின் முதலாவது  கு பேண்ட் மியான்மர் பீம், இந்தோனேசியா மற்றும் மங்கோலியா ஆகியவற்றிற்கான புதிய கு-பேண்ட் பீம்ஸ், மலேசியா மற்றும் கிழக்கு ஆசியாவைச் சார்ந்த இரண்டு மேம்பட்ட கு-பேண்ட் பீம்ஸ் மற்றும் ஆசிய- பசிபிக் பகுதி. மொத்தம்  ஐந்து  கு பேண்ட்  பீம்கள்  ஆசியசாட் 9 இல் உள்ளது.

ஆசியாசட் 9 வெற்றிகரமாக 2017 செப்டம்பர் 29 ஆம் தேதி கஜகஸ்தான், பைக்கோனூரிலிருந்து வெற்றிகரமாக அனுப்பட்டுள்ளது.









சாட் லிங்ஸ்ன் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது ஆத்மார்த்தமான சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்.

கலைமகள்- திருமகள்- மலைமகள் அருளாசியால் உங்கள் அனைவரின் வாழ்விலும் எல்லா வளங்களும், நலன்களும் மென்மேலும் பெருகட்டும்...
 நீடூழி வாழ்க...
வாழ்க வளமுடன்.



New Channel Added on Measat 3@91.5E

New Channel
Sony One HD Indonesia
MeaSat.3@ 91.5E
TP.4120 V 29720
MPEG.4/HD PowerVu


டிவி5 கன்னடா சோதனை ஔிபரப்பு தொடக்கம்

டிவி5 கன்னடா
இன்டல்சாட் -17 @ 66.0E
அலவைரிசை : 3845 V 28800
MPEG4 / எச்டி / கட்டணமில்லா
சோதனை ஔிபரப்பு தொடக்கம்
மொழி : கன்னடம்

28 September 2017

சன் டைரக்ட்ல்  5 தமிழ் சேனல்களை இனைப்பு

சன் டைரக்ட்ல்  5  தமிழ் சேனல்களை இனைப்பு
1.கேப்டன் நியூஸ்
2.மெகா டிவி
3.கலைஞர் முரசு
4.சாய் டிவி
5.திருமலை திருப்பதி தேவஸ்தானம்


New channels update...

SULD TV
EDUCAION TV
ERYYI MEN TV
ON
ABS-2A @75.0E
MPEG4/HD/FTA
NEW TP: 12533 V 45000
Started On Russian Beam

27 September 2017

New channel update

TV K
VTV 4
BVN TV
MUSIC BOX
NETVIET TV
ON
HOTBIRD-13D @13.0E
FREQ: 11200 V 27500
MPEG2/SD/FTA STARTED

OSH PIRIM HD
ON
AZERSPACE-1 @46.0E
FREQ: 11015 H 13000
MPEG4/HD/FTA STARTED

26 September 2017

New channel update

COMEDY 1
ON
ASIASAT-7 @105.5E
FREQ: 3745 V 6520
MPEG4/HD/FTA STARTED
REPLACE ON JOY TV

FMAG TV
ON
MONACOSAT-1 @52.0E
FREQ: 11045 H 27500
MPEG2/SD/FTA STARTED

C MUSIC
CHANNEL 1
ON
ASIASAT-5 @105.5E
FREQ: 4040 H 29720
MPEG4/HD/FTA STARTED

TPO TV
ON
ABS-2A @75.0E
FREQ: 11605 V 43200
MPEG2/SD/FTA STARTED

NEW CHANNEL ADD FTA ON INTELSAT 68E

SHUBH TV
SKYSTAR MOVIE
SANDESH NEWS
SHUBH CINEMA
INSYNC

TP-4006 V 7204

MPEG2 FTA STARTED

25 September 2017

New channel update

NEW-CHANNEL
"SUFI-TV"
ASIASAT-7(105.5E)
TP.4065 H 4295
MPEG-4 HD FTA STARTED

DUBAI SPORT 3
ON
ASIASAT-5 @100.5E
FREQ: 3660 V 28500
MPEG4/HD/FTA STARTED

23 September 2017

New channels update

VOJK TV
AsiaSat.7@ 105.5E
TP.3750 V 2333
MPEG.4/HD FTA
Replace  MY TV

BADRSAT-4,5,6/26.E
KSA TV-HD
MPEG_4/HD/FTA
STARTED
FREQ:12148 H 27500
KU-BAND

360 NOVOSTI (Russia)
Abs 2 @ 74.9 East
FREQ: 12152 v 45000
MPEG-4/HD/FTA

19 September 2017

26 Channels added On YahSat-1A @52.5E


YahSat-1A @52.5E
FREQ: 11862 V 27500
MPEG4/HD/FTA Started

92 News
Dawn news
Sama tv
Duniya news
Express news
News one
AbbTak
Channel 24
Metro One
Bol tv
Channel 7
Neo news
Jaag tv
Pak tv
Waqt tv
Express entertainment
Tv one
Aaj entertainment
Khyber news
Avt Khyber
Pushto One
K2
Ktn Entertainment
Ktn news
Sindh news
Sindh entertainment
Aruj
Jalwa
8xm

அட்மாஸ், ஆரோ 3டி, 4k... திரையரங்குகளும் புதிய தொழில்நுட்பங்களும்.

நன்றி : விகடன்

இப்போதெல்லாம் வாரம் முடிந்தால் ரிலாக்ஸ் செய்ய பெரும்பாலும் பலர் தியேட்டரையே தேர்வு செய்கின்றார்கள். பாகுபலி மாதிரியான ஒரு பெரிய படம் கண்டிப்பாக ஊருக்கு இரண்டு திரையரங்கிலாவது ரிலீஸ் ஆகும். சென்னையைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. அதனால் ரசிகனுக்கு என்ன படம் பார்ப்பது என்பதில் இருக்கும் குழப்பதைவிட எங்கு பார்ப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக உள்ளது. குடும்பத்துடன் செல்பவர்கள் நல்ல தொழில்நுட்பத்தைவிட நல்ல சூழலையே எதிர்பார்கின்றனர். மற்றவர்கள் கொடுத்த பணத்திற்கான தரத்தையே எதிர்பார்கிறார்கள். ஆனால் அந்தத் தரம், தொழில்நுட்பம் பற்றி அறிந்துகொள்ள பெரிதாக யாரும் முனைவதில்லை. முக்கால்வாசி பேருக்கு ’காரசிங்கம் ஏ/சி’ காமெடி போல் தியேட்டர் பெயருக்கு பின் எதாவது அடைமொழி இருந்தால் போதும். அட்மாஸ், ஆரோ 3டி, 4k இன்னும் ஏராளமான அடைமொழிகள் தியேட்டர்களுக்கு உண்டு. அவை என்ன?

டால்பி அட்மாஸ்

மாநகர தியேட்டர்கள் பலவற்றுக்கு பின் டால்பி அட்மாஸ் என்ற அடைமொழியை பார்க்கலாம். சமீபகாலமாக, சென்னை என்று இல்லாமல் மதுரை, ஆலங்குளம்வரை அட்மாஸ் ஊடுருவி வந்துவிட்டது. 

தொடக்க காலத்தில் படங்களுக்கு ஒலி ‘மோனோ’ (mono) தொழில்நுட்பத்தில்தான் வெளிவந்தது. அதாவது ஒரே சவுண்ட் சேனல்தான் பல்வேறு ஸ்பீக்கர்களுக்கு செல்லும். பின்பு 'ஸ்டிரியோ'(stereo) தொழில்நுட்பம் வந்தது. இதில் இடது, வலது என இரு சேனல்கள் இருந்தன. வலதுபுற ஸ்பீக்கர்களுக்கு வலது சேனல் ஒலியும் இடதுபுற ஸ்பீக்கர்களுக்கு இடது சேனல் ஒலியும் அனுப்பப்பட்டது. பின்பு Surround தொழில்நுட்பங்கள் வர ஆரம்பித்தன. டிடிஎஸ் (DTS), டால்பி டிஜிட்டல், ஆர்டிஎக்ஸ் (RDX) போன்றவை சில உதாரணங்கள். இதை அறிமுகப்படுத்தியது டிடிஎஸ்(DTS) தான். மேலே கூறப்பட்டிருக்கும் மற்ற சரவுண்ட் தொழில்நுட்பங்கள் இதற்குப் போட்டியாக அரம்பிக்கப்பட்டதே. இதில் வலது, இடது சேனல்கள் சேர்த்து சரவுண்ட் சேனல்கள் இருக்கும். இது இயற்கை சத்தங்கள், வாகன சத்தங்கள் போன்று காட்சியில் நடக்கும் பல சரவுண்ட் ஒலிகளை கொண்டு இருக்கும். இந்த சேனல்களில் இருந்து ஆடியோ தியேட்டரின் பின் பக்கம் இருக்கும் சரவுண்ட் ஸ்பீக்கர்களுக்கு லெப்ட், ரைட் என அனுப்பபடும். அது நமக்கு காட்சி நடக்கும் இடத்தில் இருக்கும் உணர்வைதர முயற்சிக்கும். ரைட், லெப்ட், சென்டர், சரவுண்ட் லெப்ட், சரவுண்ட் ரைட், வுஃபர் என்று 5+1 சேனல்கள் இருப்பதால்தான் இதை 5.1 என்று கூறுவர்.

இதில் மிகவும் அட்வான்ஸ் அட்மாஸ் தொழில்நுட்பம். கிட்டத்தட்ட 64 சேனல்களை கொண்டது அட்மாஸ். இவை அனைத்திலும் வேறு வேறு ஒலி இருக்கும். இவை தலைக்கு மேல் இருக்கும் ஸ்பீக்கர்கள், தரையில் இருக்கும் ஸ்பீக்கர்கள் என தியேட்டரின் அனைத்து பகுதிகளில் இருக்கும் ஸ்பீக்கர்களுக்கும் அந்த இடத்திற்கான பிரத்யேக சேனல் ஒலியை அனுப்பும். இதனால் ஹெலிகாப்டர் பார்க்கும் சீன் என்றால் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் தலைக்கு மேலும் தண்ணீர் போகும் சத்தம் காலுக்கு கீழ் கேட்கும் உணர்வை தரவல்லது அட்மாஸ். அட்மாஸ்பியர்(atmosphere) என்பதே அட்மாஸ் பெயர்க்காரணம்.

ஆரோ 3டி

இது அட்மாஸ்க்கு முந்தையே தொழில்நுட்பம் என்று கூறலாம். இதில் 11+1 சேனல்கள் உண்டு (இப்போது கூடுதலாகவும் வருவதுண்டு). இவை சரவுண்ட் மட்டும் அல்லாமல் காதுக்குமேல் கேட்கும் ஒலியையும், கீழ் கேட்கும் ஒலியையும் வித்யாசப்படுத்தவல்லது. இதை ஆடியோவில் 3டி என்றே கூறலாம். அதனால்தான் ஆரோ 3டி. தமிழில் விஸ்வரூபம் படம் மூலம் அறிமுகமானது. 
வீடியோவில் 3டி போன்று ஆடியோவில் ஆரோ 3டி என்றால் ஆடியோவில் விர்சுவல் ரியாலிட்டி டால்பி அட்மாஸ் என்று சொல்லலாம்.

7.1

இது 5.1க்கு ஒருபடி மேலே சென்று 2 சேனல்கள் கூடுதலாக சேர்த்து, மற்றும் ஒரு கோணத்தை ஆடியோவுக்குச் சேர்த்தது. இது பீட்சா படம் மூலம் தமிழுக்கு வந்தது. ஆரோ 3டிக்கு முந்தைய தொழில்நுட்பம் இது.

இன்னும் ஒரு முக்கியமான விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பங்கள் இருப்பது மட்டும் நல்ல அனுபவத்தை தர போதாது. படங்களும் இந்த தொழில்நுட்பத்தில் சரியாக மிக்ஸ் செய்யப்பட்டிருக்கவேண்டும். இன்று பெரும்பான்மை படங்கள் அட்மாஸில் வர ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்த தொழில்நுட்பத்தின் முழு திறனையும் அவை பயன்படுத்துகின்றனவா என்பது கேள்விக்குறிதான். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக மிக்ஸ் செய்வதால் முக்கால்வாசி படங்கள் பெயரளவில்தான் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றன. 

4k, 2k

இவை ஒளி சமந்தப்பட்டது. இது நாம் சாதாரணமாக கூறும் HD மாதிரியான ரெசொல்யூசன்தான். 1080p யை விட 4 மடங்கு பெரியது தான் 4k(4096 x 2160). இப்போது எல்லாப் படங்களும் 4kவில் தான் வெளியாகின்றன. 2k ரெசொல்யூசன் 1080pயை விட இரண்டு மடங்கு என்று சொல்லலாம். தமிழகத்தில் பாதிக்கும் மேல் தியேட்டர்கள் 2k ப்ரொஜெக்டர் தான் பயன்படுத்துகின்றனர். 

டூயல் ப்ரொஜெக்ஷன் (Dual projection)

இதை சில தியேட்டர்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை பார்க்கலாம். இரண்டு ப்ரொஜெக்டர்கள் கொண்டு படம் ஒளிபரப்படுவதே இத்தொழில்நுட்பம். இது வீடியோவின் டெப்த்தை அதிகரிக்கும். அதனால் வீடியோ மிகவும் தெளிவாக இருக்கும்.

கியூப்(Qube), பிஎக்ஸ்டி(PXD), UFO போன்ற அடைமொழிகள் தியேட்டரில் படங்கள் எந்த டிஜிட்டல் டிஸ்டரிபூஷன் நடைமுறையில் ஒளிபரப்புகின்றன என குறிப்பிடும். 

இப்படி தொழில்நுட்பங்கள் பல இருக்க உங்கள் ஊர் தியேட்டரில் என்ன தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை தெளிவாக அறிந்துகொண்டு படங்களை ரசிக்கலாம். அது நமது அனுபவத்தை கூடுதல் சுவாரஸ்யம் ஆக்கும்.

15 September 2017

New channels update

NEW CHANNEL
NET DRAMA
YAHSAT 1A @52.5°E
TP: 12054 H 27500
MPEG4/HD/FTA.

New Channel
"Naaptol Malayalam"

Intelsat-20 (68.5°E)
TP.4184 V 21600
MPEG-4/FTA
Replace Draham Sangeet

13 September 2017

New channels update....

& PRIVE HD
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3820 V 27500
MPEG4/HD/Not FTA
Scrambled Started

SUNSHINE TV
On
AsiaSat-7 @105.5E
FREQ: 3880 H 27500
MPEG2/SD/FTA Started

SUNSHINE TV
ASIASAT7@105.5East
TP.3880 H 27500
MPEG2 FTA
Started

H TV
On
PakSat-1R @38.0E
FREQ: 3806 V 1444
MPEG4/HD/FTA Started
Replace On HEALTH TV

MIFA MUSIC HD 
YAHSAT1A@52.5East
TP.12034 V 27500
MPEG4 HD FTA
Started

12 September 2017

🇦🇺Australia Tour Of 🇮🇳India 2017

📅17 Sep, 1st 🏏ODI, 🕜01:30 PM
📅21 Sep, 2nd 🏏ODI, 🕜01:30 PM
📅24 Sep, 3rd 🏏ODI, 🕜01:30 PM
📅28 Sep, 4th 🏏ODI, 🕜01:30 PM
📅01 Oct, 5th 🏏ODI, 🕜01:30 PM
.
📅07 Oct, 1st 🏏T20I, 🕖07:00 PM
📅10 Oct, 2nd 🏏T20I, 🕖07:00 PM
📅13 Oct, 3rd 🏏T20I, 🕖07:00 PM

Live channels
💻Star Sports 1
Star Sports 1 Hindi

New channels update

G TV
On
AsiaSat-5 @100.5E
FREQ: 12623 H 2768
On KU Band LNB
MPEG4/HD/FTA Started

ECCLESIA TV
ALBAYANE TV
LA SOURCE TV
On
YahSat-1A @52.5E
FREQ: 11843 V 27500
MPEG-4/HD/FTA
Started On West Beam

"SAMA-NEWS"
PAKSAT.1R(38.0E)
TP.12683 V 1300
MPEG-4 HD FTA STARTED.
#LNB_KU_BAND
It's Not Feed

11 September 2017

New channels update

RED DIAMOND TV
GOLD DIAMOND TV
On
ChinaSat-11 @98.0E
FREQ: 12495 V 43200
MPEG4/HD/FTA Started

NSS 12 57' East
added 2 new Channal
TVT 1 Tajikistan
TV Sinamo
HD now
FREQ: 11565 H 10740
DVB-S2/8PSK MPEG-4
Central Asia
FTA.

CGNTV 1
CGNTV 2
CGNTV 3
On
KoreaSat-5 @113.0E
FREQ: 12299 V 10740
MPEG4/HD/FTA Started

New channels update

GTV HD
On
ABS-2A @74.7E
TP: 12588 V 45000
TP: 12533 V 45000
MPEG4/HD/FTA Started

ABS.2A/75.E
TV FILMY
GOPLUS TV
MPEG_4/HD/FTA
STARTED
FREQ:3659 V 9170
FREQ:3671 V 1583
        (C-BAND)

HOTBIRD-13D/13.E
FILM BOX Premium
MPEG_4/HD/FTA
STARTED
FREQ:10796 V  27500

9 September 2017

New channels Started on NSS 12@57E

TVT 1
TV SINAMO HD
TAJIKISTAN HD
On
NSS-12 @57.0E
TP: 11566 Н 10742
MPEG4/HD/FTA Started

7 September 2017

STAR CINEMA HD New Logo Added

STAR CINEMA HD
New Logo Added On
AsiaSat-7 @105.5E
TP: 3913 V 7260
MPEG2/SD/FTA Runing

4 September 2017

வானாெலி


வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக்கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி(அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. 



ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து சத்த ஒலிபெருக்கி ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

SEA TV STARTED ON LAOSAT1@128.5East

SEA TV 
LAOSAT1@128.5East
TP.10790 H 40000
MPEG4 HD FTA Started

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை பெற்றது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம்






ஸ்டார் இந்தியா இந்தியாவில் ஐபிஎல் ஊடக உரிமையை 16,347.5 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளது. ஸ்டார் இந்தியா மற்றும் உலகின் மற்ற பகுதிகளுக்கான ஐந்து ஆண்டு தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமைகளும். ஐபிஎல் மீடியா உரிமையை வென்றதற்கு தகுதி பெற்ற 13 பேரில் ஸ்டார் இந்தியா மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியவை முன்னதாக பிசிசிஐ அறிவித்தது. இரண்டு ஒளிபரப்பாளர்கள் தவிர, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், டைம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் இந்தியாவுக்கு டிஜிட்டல் உரிமைகள் வழங்கப்பட்டன. SuperSport, Yupp TV, Econet, OSM (Gulf DTH) தொழில்நுட்ப மதிப்பீட்டிற்குப் பிறகு உலகின் மற்ற பகுதிகளுக்கு தகுதியுடையவர்கள். கத்தார் அரசின்  சட்டங்களின் காரணமாக BeIN ஸ்பாேட்ஸ் அதன் நிதி அறிக்கையை வழங்கவில்லை என்பதால், அரசாங்க விதிகளின் காரணமாக ஆவணத்தை வழங்க முடியாது என்று கூறி ஒரு மின்னஞ்சலை அனுப்பி உள்ளது. சாத்தியமான 14 ஏலத்தில், BamTech தகுதியற்றது, ஏனெனில் பல அடிப்படை ஆவணங்கள் தங்கள் முயற்சியில் இருந்து காணாமல் போனது.

3 September 2017

New channel updates

VAANI TV
On
InSat-4A @83.0E
TP: 3805 H 28500
MPEG4/HD/FTA Started
Replace On AASHIRWAD

MAHUA PLUS
On
IntelSat-17 @66.E
TP: 3895 H 13840
MPEG4/HD/FTA Started
Replace On AGRA ROYAL

ESKAROCK TV
On
HotBird-13C @13.E
TP: 10796 V 27500
MPEG4/HD/FTA Started

New Channel
"Aashirwad"

Insat-4A (83.0°E)
TP.3805 H 28500
MPEG-4/FTA

2 September 2017

இந்திய வானொலி வரலாறு


இந்தியாவின் முதல் வானொலி நிலையம் 1927ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் வானொலி நிகழ்ச்சிகளை மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரே நேரத்தில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும் போது 6 வானொலி நிலையங்களும், 18 டிரான்ஸ் மீட்டர்களும் இருந்தன. வர்த்தக நோக்கில் விவித்பாரதி என்ற சேவை 1957ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டது.

சென்னையில் முதல் பண்பலை நிலையம் 1977ம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் நாள் தொடங்கப்பட்டது. ரெயின்போ, கோல்டு என்ற இரண்டு அலைவரிசைகளில் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்களில் அகில இந்திய வானொலி பண்பலை ஒலிபரப்புகிறது. பொதுவாக, ஒரு பண்பலை வானொலியின் ஒளிபரப்பு எல்லை 40முதல் 50 கிலோமீட்டர்களாகும். இதில் விதிவிலக்காக கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம் உள்ளது. இதன் டிரான்ஸ் மீட்டர் என்கிற ஒலிபரப்பு கோபுரம் மலையின் உச்சியில் அமைந்திருப்பதால், இதன் ஒலிபரப்பு எல்லை, கிட்டத்திட்ட 250 முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை சென்றடைகிறது.

மின்னல் எப்.எம் ஒரு பார்வை

மின்னல் எப். எம். (Minnal FM) என்பது மலேசிய அரசாங்கத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். அதன் பழைய பெயர் வானொலி 6 (Radio 6). உலகிலேயே 24 மணி நேர முதல் தமிழ் ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கிய பெருமையும் இதற்கு உண்டு.

ஒலிபரப்புப் பகுதி
 மலேசியா
சிங்கப்பூர்
இந்தோனேசியா
தாய்லாந்து
சிலி
பொலிவியா
வெனிசுவேலா

வணிகப்பெயர்மலேசிய ஒலி,

ஒளிபரப்புச் சேவை

அதிர்வெண்கோலாலம்பூர் 92.3
குவாந்தான் 103.3
ஈப்போசித்தியவான்98.9
மலாக்கா, கிழக்கு பகாங் 103.3
ஜொகூர்சிங்கப்பூர்101.1
தென்பேராக்சிலாங்கூர் 96.3
தாய்லாந்து 96.7
தாப்பா 96.3
தைப்பிங், வடபேராக், கோலாகங்சார் 107.9
நெகிரி செம்பிலான்90.5

1938 முதல் ஒலிபரப்பு வானொலி முறைதிரைப் பாடல்கள், உலகச் செய்திகள், அறிவிப்புகள், நாட்டு நடப்புஉரிமையாளர்மலேசிய அரசாங்கம்இணையதளம் மின்னல் எப்.எம். இணையத்தளம்

மலேசிய இந்தியர்களுக்காக இந்தச் சேவை தொடங்கப் பட்டது. மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரி தலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.

ஈப்போவில் இருந்து 98.9 அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. இப்போது திரு குமரன் என்பவர் அதன் தலைவராகப் பணிபுரிகின்றார். அதற்கு முன்னர், 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பி.பார்த்தசாரதி தலைவராகச் சேவை செய்து வந்தார்.

1930 – 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து, கஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப் பட்ட தமிழர்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் தகவல் ஊடகமாக நீடித்து வருகின்றது.

WORLD OF CHINA Started On AsiaSat-5 @100.5E

WORLD OF CHINA
On
AsiaSat-5 @100.5E
TP: 12620 H 4465
On KU Band LNB
MPEG2/SD/FTA Started

1 September 2017

வானொலி பற்றிய தகவல்கள் இந்த இணைதளத்தில்

http://tamilvanoli.blogspot.in/?m=0

http://sarvadesavaanoli.blogspot.in/2008/08/?m=1

http://yaazhsuthakar.blogspot.in/2008/06/blog-post.html?m=1

http://olivaanki.blogspot.in/2006/02/blog-post.html?m=0

இந்த இணைதளத்தை தமிழர்க்கு கொடுத்தமைக்கு நன்றிகள் பல

KATYUSHA TV Started New Russian Channel

KATYUSHA TV
On
AsiaSat-5 @100.5E
TP: 3840 H  29720
MPEG4/HD/FTA Started
New Russian Channel

வானாெலி நினைவில் நிற்கும் குரல்கள்

வானொலி ரசிகர்களின் மலரும் நினைவுகளும், வானொலிக் கலைஞர்களுக்கு மரியாதையும்...

இலங்கை வானொலி நினைவலைகள்
வலைப் பூவில் எழுதிய ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள் பல

எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தென் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள் இதன் பாதிப்பில்லாமல் வாழ்ந்திருக்க முடியாது. தமிழ்சேவை ஒன்று, தமிழ்சேவை இரண்டு என்று இருவிதமான ஒளிபரப்பினை நடத்தி வந்த இலங்கை வானொலி என் வாழ்க்கையில் நான் தொலைத்து விட்ட நண்பன்.
83 ம் ஆண்டு இனக்கலவரங்களில் அவன் கடுமையாக காயமுற்று விட்டான் . அதன் பின்பு அவனை முழுமையான வீச்சில் நான் பார்க்கவில்லை.

தமிழர்களிடம் வானொலி கேட்கும் வழக்கத்தையும், நல்ல தமிழ் பேசக் கூடிய ஆர்வத்தையும் வளர்த்தது இலங்கை வானொலி. இப்போது சென்னை FM வானொலி நிலையங்களை கேட்கும் போது தரமான, வித்தியாசமான நிகழ்ச்சிகளை தர இயலாத கற்பனைப் பஞ்சம் எரிச்சல் மூட்டுகிறது. பாடல்களை ஒலிபரப்புவதையும் பல்வேறு சுவைகள் கலந்து செய்யலாம் என்பதை நிரூபித்துக் காட்டியது இலங்கை வானொலி.

முதலில் நிகழ்ச்சிக்கு தரப்பட்ட அழகிய தமிழ் பெயர்கள் இன்றும் நினைவில் நிற்பவை.

1. பொங்கும் பூம்புனல் ( காலை 7.00)

2. நேயர் விருப்பம்

3. நீங்கள் கேட்டவை ( காலை 9.30 -10.00, மாலை 5.30-5.58)

4. அன்றும் இன்றும்

5. புது வெள்ளம்

6. மலர்ந்தும் மலராதவை

7. இசைத் தேர்தல்

8. பாட்டுக்கு பாட்டு

9. இசையும் கதையும்

10. இன்றைய நேயர்

11. விவசாய நேயர் விருப்பம்

12. இரவின் மடியில் ( இரவு 10.30)

இவ்வாறான தமிழ்பெயர்களை நம் நாட்டில் வைப்பார்களா? 

ஞாயிறன்று பகல் 1.30க்கு எழுபதுகளின் இறுதியில் 'இசைத் தேர்தல்" என்ற பாடல்களைத் தரப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இப்பாடல்தான் முதலிடத்திற்கு வரும் என பந்தயம் கட்டி, ஆவலுடன் தமிழகமே காத்திருந்தது அந்த காலம். "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் வரும் "என்னடி மீனாட்சி" பாடல் ஓராண்டுக்கும் மேலாக முதலிடத்தில் இருந்தது.

இன்று 'கவுண்ட்டவுன்" என்பதே தமிழ் வார்த்தையாகி விட்டது.
காமெடி டைம், சினிமா டைம் என்று தமிழில்லாத தமிழ்.
பெயர்களை விட்டுத் தள்ளுங்கள். 

இவ் வானொலி நிலையத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கும், அறிவிப்பாளர்களுக்கும் இருந்த கற்பனைத்திறன் அலாதியானது.நிகழ்ச்சித் தயாரிப்பை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு, ஒரு நிமிடம் தமிழ், அன்றும் இன்றும் போன்ற , இன்றும் பல்வேறு கல்லூரி விழாக்களிலும், தொலைக் காட்சி சானலிலும் பார்க்கும் நிகழ்ச்சிக்களை உருவாக்கியவர்கள் இவர்கள்.

கே.எஸ். ராஜா என்ற புகழ்பெற்ற அறிவிப்பாளர் "திரைவிருந்து" என்ற இலங்கையில் ஓடும் திரைப்பட விளம்பர நிகழ்ச்சியை நடத்துவார். 

நீயா படத்தில் " என்னை விட்டுட்டு போறீங்களா ராஜா? என ஸ்ரீபிரியா அலறுவதாக வசனம் வரும். 

அந்த வசனத்தைப் போட்டுவிட்டு "போக மாட்டேன், அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன். அது வரை உங்களிடமிருந்து விடை பெறுவது கே.எஸ். ராஜா" என அசத்தலாக சொல்வார்.

இதே காலத்தில்தான் நம் திருச்சி வானொலி நிலையத்தில் பகலில் ஓர் இரவு படப் பாடலை போடுவதாக சொல்லி விட்டு, காளி கோவில் கபாலி படப் பாடலைப் போட்டுவிட்டு, தவறுக்கு வருந்தக் கூட மாட்டார்கள்.

இலங்கைக் கலவரத்தின் போது, கே.எச் ராஜா இறந்து விட்டதாக புரளி வந்தது. அப்துல் ஹமீதைப்பற்றியும் அதே புரளி வந்தது. ஆனால் இருவரும் நலமாகவே இருந்த

இன்னும் பல நிகழ்ச்சிகள் உண்டு. என் நினைவில் இருப்பதை எழுதுகிறேன். எனக்குப் பிடித்த அறிவிப்பாளர்களையும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் நினைவுகூற விரும்புகிறேன்.

அப்துல் ஹமீதை அனைவரும் அறிவீர்கள். கே.எஸ். ராஜா, மயில் வாகனம் சர்மானந்தா,ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர் என்னைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்.

இதைத் தவிர "திரைக் கதம்பம்" என்று மாற்றுச் சனிக்கிழமைகளில் காலை 9.30 க்கு நிகழ்ச்சி நடத்துவார் ஒரு அறிவிப்பாளர். அவரது பெயர் மறந்து விட்டது. யாராவது சக நண்பர்கள் நினைவு படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். கண்ணதாசனின் பிரியரான இவர் சுவையான நிகழ்வுகளையும் பாடல்களையும் பகிர்ந்து கொள்வார்.

கண்ணதாசன் மறைந்தவுடன், இலங்கை வானொலியில் இரண்டு மணிநேரம் அவரை நினைவு கூர்ந்து பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ஏழாம் வகுப்பு சிறுவனான நான்,கண்ணதாசன் என்ற கவிஞனின் வீர்யத்தை முழுமையாக உணரவைத்த நிகழ்ச்சி.

பாடல்களை ஒளிபரப்பும் போது இசையமைப்பாளர் மற்றும் கவிஞர்களின் பெயரையும் சேர்த்து சொல்லும் மிக நல்ல வழக்கத்தை இவர்கள் கடைபிடித்தார்கள், இதனாலேயே பல கவிஞர்களின் பாடல்கள் நினைவில் இருக்கிறது.

உதாரணமாக 'கத்தியைத் தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு" என்று ஒரு பாடல் உண்டு. பாட்டின் தொனியை வைத்து நிறைய பேர் பாடல் எழுதியது கண்ணதாசன் என்று சொல்வார்கள். ஆனால் இப்பாடலை எழுதியது ஆலங்குடி சோமு. இதை நான் அறிந்தது இலங்கை வானொலி மூலமாகத்தான்.

துப்பறியும் ரத்தினம் என்ற தொடர் நாடகம் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும். வாரவாரம் ஒரு கொலையை ரத்தினம் துப்பறிந்து கண்டுபிடிப்பார். அவர் எவ்வாறு கண்டுபிடித்தார் என்பதை வாசகர்கள் யூகித்து தபால் அட்டையில் எழுத வேண்டும். பல வாரங்கள் வந்த நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் ரத்தினம் இறந்து விட்டார் என்றார்கள்.உண்மையா என்பது தெரியவில்லை.

அக்டோபர் இரண்டாம் தேதி நம் வானொலி நிலையத்தில் டி.ஆர் பாப்பாவின் மெல்லிசைகள் காந்தியின் புகழ் பரப்ப, தமிழ்சேவை ஒன்றில் காந்தியின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பேச்சை ஒளிபரப்பி மகாத்மாவை நினைவு கூர்ந்தார்கள் .உடல் சிலிர்த்தது மகாத்மாவின் பேச்சைக் கேட்டதும்.
82ம் ஆண்டு ,7.30க்கு இரவு ஒளிபரப்பையும் துவக்கினார்கள்.அன்றைய இரவு அனைவர் வீட்டிலும் அலறியது இலங்கை வானொலி. இவ்வொலிபரப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே இலங்கைக் கலவரம் வெடித்தது.யாழ்ப்பாணம் ஒளிபரப்பு நின்று போனது.

இந்தி தெரியாவிடினும், என்னை இந்திப் பாடல்களை ரசிக்க வைத்தது இலங்கை வானொலி. இப்பொழுது சென்னையில் இருப்பதால் இலங்கை வானொலி கேட்க இயலவில்லை. இவர்களிடம் இல்லாத பாடல்களே இல்லை எனலாம்.

மெல்லிசை , துள்ளிசை என வகைப்படுத்தி பாட்டுப் போடுவார்கள்.

நம்ம ஊர் மாதிரி முதல் பாடல் " கண்ணே கலை மானே" இரண்டாம் பாடல் " ஆள்தோட்டா பூபதி" என தாவ மாட்டார்கள்.

எந்தப் பாடல், எங்கிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்பதற்காகவும் ஒரு நிகழ்ச்சி வைத்திருந்தார்கள். "மேகமே மேகமே" பாடல் ஜப்பானிய இசையை தழுவி எடுத்ததாக அந்த இசையையும் ஒளிபரப்பினார்கள்.

முன்பு சொன்னதைப் போல நண்பனை இழந்து விட்டேன். இருப்பது நினைவுகள் மட்டுமே.