Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

24 June 2017

பி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி - சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல்கள் இவை.

பி எஸ் எல் வி ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரோ தொடர்ச்சியாக 39ப் வெற்றி பயணங்களை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன. அதில், 30 செயற்கைக்கோள்கள் வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள்.

பி எஸ் எல் வி சி 38 தரையிலிருந்து புறப்பட்டு அரைமணி நேரத்திற்குள்ளாக அனைத்து செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக ராக்கெட்டிலிருந்து பிரித்தது.

712 கி்லோ எடை கொண்ட இந்தியாவின் கார்டோசாட்-2 தொடர் செயற்கைக்கோள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் முதலில் நிலைநிறுத்தப்பட்டது.

கார்ட்டோசாட்டில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை உணரும் கேமரா மற்றும் பிற நிறங்களை உணரும் கேமராக்களை பயன்படுத்தி தொலை உணர்வு சேவைகளை இனிவரும் தினங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமைISROImage captionபி எஸ் எல் வி - சி 38ஏவப்பட்ட பிற 30 செயற்கைக்கோள்களில் 15 கிலோ எடை கொண்ட நியுசாட் செயற்கைக்கோளும் ஒன்று. இது தமிழகத்தில் உள்ள நுருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவன செயற்கைக்கோள் ஆகும்.

இஸ்ரோவின் சர்வதேச வாடிக்கையாளர்களான அமெரிக்காவின் 10 செயற்கைக்கோள்களும், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளின் தலா மூன்று செயற்கைக்கோள்களும், ஆஸ்திரியா, சிலி, செக் குடியரசு, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் இதில் அடங்கும்.

இஸ்ரோவின் இந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பி எஸ் எல் வி மூலம் ஏவப்பட்ட வாடிக்கையாளர் செயற்கைக்கோளின் எண்ணிக்கை 209 ஐ எட்டியுள்ளது.

No comments: