Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

27 June 2017

ஜூன் 29-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17

தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வருகிற 29-ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதை, அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றபோதும், சமீப நாள்களாக தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்திவருகிறது இஸ்ரோ. தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.

அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது.

No comments: