Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

28 December 2018

விருப்ப சேனல்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவு - கெடு நீட்டிப்பு

விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்'யின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்க கேபிள் ஆப்ரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற டிராய்-யின் புதிய உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30-ம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ம் தேதி டிராய் அறிவிப்பாணை வெளியிட்டது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட் டாப் பாக்ஸ்-க்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்'யின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக ஜனவரி 31-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் டிராய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments: