Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

30 August 2019

Jio Set-Top-Box & ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?

முதன்முறையாக, ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதற்கான ஆதாரம் தற்பொழுது வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. ஜியோஃபைபர் பயனர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது? என்பதையும் பார்க்கலாம்.





ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ்
ட்ரீம் டிடிஎச் என்ற பயனர் பெயரின் வழியாக இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் இன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள தகவலின்படி ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் நீல நிறத்தில், ஜியோ பிராண்டிங் லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செட் டாப் பாக்சில் உள்ள போர்ட்கள்
இந்த புதிய செட் டாப் பாக்சில் MSO Coaxial cable, ஒரு HDMI போர்ட், ஒரு Ethernet RJ45 போர்ட் மற்றும் ஒரு USB 2.0 மற்றும் ஒரு USB-3 போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஹைப்ரிட் செட் தாப் பாக்ஸ், Custom UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு OS இயங்குதளத்தின் கீழ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5 முதல்
புதிய Reliance Jio GigaFiber broadband, ஜியோஃபைபர் சேவை மக்களின் பயன்பாட்டிற்குச் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மாதாந்திர சந்தாதாரர் திட்டம் துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும் என்று முகேஷ் அம்பானி நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.
இலவச 4K டிவி மற்றும் 4K செட்டாப் பாக்ஸ்
ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பயனர்களுக்கு இலவசமாக லேண்ட் லைன் கனெக்ஷன் மற்றும் செப்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் நீண்ட நாள் திட்டமான, வருடாந்திர திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இலவச 4K டிவி மற்றும் இலவச 4K செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோஜிகாஃபைபர் சேவை முன்பதிவு
இந்த புதிய ஜியோ ஜிகாஃபைபர் சேவை செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில்பயன்பாட்டிற்கு வருகிறது, அதற்கு முன்னால் முன்பதிவு செய்ய விரும்பும் பயனர்கள் இந்த முறைப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஜியோஃபைபர் முன்பதிவு செய்வது எப்படி?
Jio GigaFiber Online Registration என்ற வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

முன்பதிவு செய்ய மூன்று கட்ட பதிவுகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

முதல் நிலை பிரிவில், உங்கள் வீட்டின் முகவரி அல்லது உங்கள் அலுவலகத்தின் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாம் நிலை பிரிவின் கீழ் உங்கள் பெயர், தொலைப்பேசி எண் மற்றும் உங்கள் ஈமெயில் ஐடி விபரங்களைச் சரியாக என்டர் செய்ய வேண்டும்.

உங்கள் தகவல்களை என்டர் செய்த பின் Generate OTP கிளிக் செய்யவும்.

ஜியோ ஜிகாஃபைபர் OTP எண்
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணைச் சரியாக என்டர் செய்யவும்.
அதற்குப் பின் நீங்கள் RWA/Society Developer Township போன்ற எந்த மாதிரியான குடியிருப்பில் உள்ளீர்கள் என்ற விபரத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
மூன்றாம் நிலை பிரிவின் கீழ், மீண்டும் ஒரு முறை உங்களின் முகவரி, பின் கோடு எண் விபரங்களை என்டர் செய்து ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனிற்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரி
இதைச் சரியாகச் செய்தால் ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அழைத்துப் பேசுவார். உங்கள் தகவலைச் சரி செய்தபின், ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான தகவல்களை உங்களுடன் பகிரப்படும்.
ஜியோ ஜிகாஃபைபர் இன்ஸ்டாலேஷன்
உங்கள் அனுமதியுடன் உங்கள் வீட்டிற்கே ஜியோ அதிகாரிகள் வந்து ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான இன்ஸ்டாலேஷனை செய்து கொடுப்பார்கள்.

No comments: