Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

29 November 2018

டிடிஹச் உபயோகிப்பவரா!!! டிடிஹச் சேவைகளில் கட்டண மாற்றம்

நன்றி : தமிழன்DTH

நீங்கள் டிடிஹச் உபயோகிப்பவரா ? நாளை முதல் டிடிஹச் சேவைகளில் சில பல மாற்றம் நடைபெறவுள்ளது. மத்திய அரசின் ட்ராய் உத்தரவுப்படியும் அரசின் அறிவுறுத்தல் அடிப்படையில் நாளை  முதல் உலகின் அதிகமான *DTH* சேவைகள் வழங்கி கொண்டிருக்கும் இந்தியாவில்  ஆஃப்ர் , விலை சலுகை என எந்த தனியார் நிறுவனமும் வழங்க கூடாது என சுற்றரிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது. இனிமேல் வாடிக்கையாளர்கள் ஒரு வருடம் ரீசார்ஜ் செய்தால் விலையில் சலுகை கிடைக்கும் என யாரும் செய்யமுடியாது அப்படி செய்ய நினைத்தால் அதற்கான சமயம் இன்றும்  நாளை  மட்டுமே ( அதாவது 29 , 30 / 11 / 2018 வரை ) இனி ஒரு வாடிக்கையாளர் ஒரு வருட சந்தா இலவசத்துடன் புதிய இணைப்பு வாங்க நினைத்தால் வாங்க முடியாது. DTH நிறுவனங்களும் இனிமேல் ஒரு வருட சந்தா ஏன் ஆறு மாத சந்தா என வசூல் செய்ய முடியாது மாதம் மாதம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் . இனி புதிய இணைப்பு அனைத்தும் ஒரு மாதம் இலவசத்துடன் மட்டுமே கிடைக்கும். இந்த தகவலை அனைத்து நிறுவனங்களும் தங்கள் டீலர் , டிஸ்ட்ரிபூட்டர்களுக்கு தெரியபடுத்தி உள்ளது. முதல் கட்டமாக *Airtel DTH , TataSky , Dish Tv , Videocon D2H* ஆகிய நிறுவனங்கள் Traiயின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது . சன் டரைக்ட் மட்டும் இன்னும் ஒரு வாரம் அல்லது நாளையே கூட வர வாய்ப்புள்ளது. ஆகையால் தாங்கள் யாரேனும் இருப்பீன் ஒரு வருட சந்தா ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள் உதாரனமாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூபாய் 899 ரீசார்ஜ் செய்தால் போதும் ஒரு வருடம் முழுமையாக பார்க்கலாம். அதுவே டிசம்பர் 1 நீங்கள் ஒரு மாதம் பார்க்க ரூபாய் 180 முதல் 200 செலுத்த வேண்டும். ஏன் புதிய இணைப்பு பாக்ஸ் மட்டும் மாதம் ரூபாய் 100 என்ற கணக்கில் 12 மாத சந்தாவுடன் ரூபாய் 1200 க்கு புதிய பாக்ஸ்களும் வழங்கி கொண்டு உள்ளனர் . இந்த அறிய வாய்ப்பை யாரும் நலுவ விடவேணாம்.

No comments: