Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

4 January 2018

உலகின் முதல் 8k டி.வி-யை அறிமுகப்படுத்தியது எல்ஜி


சாதாரண கறுப்பு வெள்ளையில் தொடங்கிய தொலைக்காட்சி, இன்று எல்இடி டி.வி வரை பெரிதாக வளர்ச்சியடைந்திருக்கிறது. எல்இடி டி.வி-க்கள் வந்த பிறகு திரையின் அகலம் அதிகரித்ததோடு மட்டுமன்றி, அதில் தெரியும் காட்சிகளின் தரமும் படிப்படியாக அதிகரித்து வந்தது. எல்சிடி மற்றும் எல்இடிகளின் சிறப்பே, காட்சிகளின் துல்லியத்தை அதிகமாகக் காட்டுவதுதான். அதன்பிறகு எல்இடி டி.வி-க்களே சற்று மேம்படுத்தப்பட்டு, OLED டி.வி-க்கள் அறிமுகம் செய்யப்பட்டன. OLED டி.வி-க்கள் மின்திறனை குறைவாகப் பயன்படுத்தக்கூடியவை. இந்த OLED டி.வி-க்கள், இதுவரை அதிகபட்சமாக 4K தரத்தில் காட்சிகளை அளிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுவந்தன.
இந்நிலையில், உலகின் முதல் 8k OLED  டி.வி-யை அறிமுகப்படுத்தியிருக்கிறது, எல்ஜி. 88-இன்ச் திரையைக்கொண்டிருக்கும் இந்த டி.வி-தான் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே அதிக ரெசொல்யூஷனைக் கொண்டதாகும். இதற்கு முன்னர், இந்த ரெசொல்யூஷனில் இவ்வளவு பெரிய திரையைக்கொண்ட டி.வி வெளியானதில்லை. விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இதன் விலை, இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments: