Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

10 November 2016

3 ஆம் கட்ட டிஜிட்டலாக்க காலக்கெடு தடையை நீக்கியது – டில்லி உயர்நீதிமன்றம்…!!

டில்லி உயர் நீதிமன்றம்… கட்டாய டிஜிட்டலாக்கம் DAS 3 வது கட்ட அமலாக்கத்திற்கு வெவ்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் விதித்த தடை ஆணையை ரத்து செய்து டிஜிட்டலாக்கத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.  4 மாநிலங்களில், தொடுக்கப்பட்ட 9 வழக்குகளுக்கு தடை ஆணையை விலக்கி டிஜிட்டலாக்கத்திற்கான தடை உத்தரவை நீக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2015 டிஜிட்டலாக்கம் 3ஆம் கட்ட அமலாக்க காலக்கெடுவை எதிர்த்து  பல்வேறு மாநில உயர் நீதி மன்றங்களின் மூலம் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளினால் டிஜிட்டலாக்கம் அமல்படுத்துவது மிகுந்த பாதிபிற்கு உள்ளானது. பின்னர், ஏப்ரல் மாதம் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (MIB) பரிந்துரையின் மீது, உச்ச நீதிமன்றம் DAS 3 ஆம் கட்ட அமலாக்கம் காலக்கெடு நீட்டிப்பு குறித்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றிவிட்டது. இதனால் டிஜிட்டலாக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் ஒரு நியமிக்கப்பட்ட நீதிமன்றமாக செயல்படும்.

நவம்பர் 3 தேதியில் பிறப்பித்த தனது உத்தரவில், தில்லி உயர் நீதிமன்றத்தின் ஒற்றை பெஞ்ச் நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, டிஜிட்டலாக்கம் பற்றி தங்கள் நெட்வொர்க்குகளில் அனலாக் சிக்னல்களை நிறுத்தப்படுவது குறித்து ஒரு ஸ்க்ரோலிங் விளம்பரத்தை 3 வாரங்களுக்கு ஒளிபரப்ப வேண்டும்.. எனவும் குறிப்பிட்ட நீதிபதி…  அனைத்து 9 மனுதாரர்களும் நீட்டிப்பு தேடினார்கள்… அவர்களுக்கான நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது மேலும் நீட்டிப்பு அந்த தேதிகளில் நிறைவேற்றப்பட்டது எனவே இந்த வழக்குகள் பலனளிக்காத ஒன்று என கூறினார்.

9 வழக்குகளுக்கு இந்த கட்டளை வழங்கப்பட்டது …4 மாநிலங்களில், – கர்நாடகா (Riddhi Vision, Victory Digital, Sri Chowdeshwary Cable Network, Yogesh Cable Networks, Amma TV), கேரளா (Athulay Infomedia), ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா (Panchajanya Media) , உத்தரப் பிரதேசம் (Sai Cable TV Network, Sunil Kr Singh).

VD வாத்வா, தலைமை செயல் அதிகாரி ,சிட்டி நெட்வொர்க்ஸ் லிமிடெட் கூறுகையில், ” மாண்புமிகு டில்லி உயர் நீதிமன்றம் டிஜிட்டலாக்கத்திற்கான பாதை வகுத்து, 9 வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது என்பது ஒரு மிக முக்கியமான தீர்ப்பு. இந்த உத்தரவு வெறும் DAS 3ஆம் கட்ட  பகுதிகளுக்கு மட்டுமல்லாமல்,  டிஜிட்டலாக்கத்தின் 4ஆம் கட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது” என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் டிஜிட்டல் மயம் என்பது குறிப்பாக தரமான சேவை சேனல் தொகுப்புகளில் இன்னும் அதிக தேர்வு கிடைக்கும்.. என சந்தாதாரர்களுக்கு மட்டும்மல்லாமல். உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், MSO மற்றும் ஒளிபரப்பாளர்கள் என அனைவருக்கும் மிக முக்கியமானது என்றும் கூறியவர். “இது டிராய் வழிகாட்டுதலின் படி வருவாய் பகிர்வு செய்தலை அனுமதிக்கும். மேலும் இந்த வகையில் இணைய ஊடுருவல் அதிகரித்து இதனால் டிஜிட்டல் இந்தியா கனவு நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். நான் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்ககின்றேன்… கெளரவமான நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றி டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ்களை உடனடியாக நிறுவுங்கள்… மேலும் 3 வார காலத்தில் அனலாக் சிக்னல்களையும் நிறுத்த வேண்டும், “எனவும் அவர் தெரிவித்தார்.

     

No comments: