Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

29 October 2016

Target Rating Point (TRP)  -  டி.ஆர்.பி ரேட்டிங் தொலைக்காட்சிகள் நடத்தும் தேர்தல் கருத்துக்கணிப்பு

Target Rating Point (TRP)  -  டி.ஆர்.பி ரேட்டிங் , தொலைக்காட்சிகள் நடத்தும் தேர்தல் கருத்துக்கணிப்பு மாதிரிதான்...இந்தியாவில் TAM Media Research எனும் நிறுவனம்தான் இதை செய்கிறது.தேர்ந்தெடுத்த நகரங்களில் சில வீடுகளை தேர்ந்தெடுத்து மீட்டரை பொருத்துவார்கள். இந்த மீட்டர் நம் தொலைக்காட்சி பெட்டியுடன் இணைப்பட்டிருக்கும் நாம் பார்க்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை குறித்துக் கொண்டே வரும்.. அந்த தகவல்களை சாம்பிளாக கொண்டு கணக்கிடுவார்கள்...

உதா. சென்னையில் 1000 மீட்டர்கள் பொறுத்தி இருக்கிறார்கள் என்றால் அதை சாம்பிளாக கொண்டுதான் மொத்த சென்னைக்கும் டி ஆர் பி கணக்கிடுவார்கள்.

சில வருடங்களுக்கு முன்னால் , இந்த டி ஆர் பி யை பெற சாம்பிளிங் எடுக்கும் வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு பணம் தந்து தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஓடவிடுவதாக தொலைக்காட்சி நிறுவனங்களின் மேல் குற்றச்சாட்டு வந்த்து...இப்போது டி ஆர் பி கணக்கிடும் நிறுவன அதிகாரிகள் கையூட்டு பெற்றுக் கொண்டு டி ஆர் பி யை மாற்றியதாக என் டி டி வி வழக்கு தொடர்ந்துள்ளது...அதன் தொடர்ச்சியாக டி ஆர் பி கணக்கிடும் வழிமுறையில் பல மாற்றங்கள் வர இருக்கிறது...

No comments: