Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

7 July 2017

செட் டாப் பாக்ஸ்... தெரிந்துகொள்ள வேண்டிய சில பிரச்னைகளும் தீர்வுகளும்..!

தகவல் : விகடன்

எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களின் அசுர வளர்ச்சியில் மொபைல் போன்களுக்கு அடுத்து இருப்பது டிவியும் செட் டாப் பாக்ஸும்தான். இப்போது வருகிற தொலைக்காட்சிகளில் இருந்து செட் டாப் பாக்ஸ்கள் வரை அனேக தொழில் நுட்பங்கள் வந்துவிட்டன. தொலைக்காட்சிகளில் TV, HD, HDMI, USB, MULTI MEDIA, VIDEO GAME, WIFI, INTERNET என்று வித விதமான இன்புட்கள் வந்துவிட்டன. D2H என்கிற செயற்கைக்கோள் ஒளிபரப்புக்குப் பயன்படும் செட் டாப் பாக்ஸுகளும் கையடக்க அளவில் நவீன வசதிகளுடன் வந்துவிட்டன. ஆனால் கேபிள், செட் டாப் பாக்ஸ், டிஷ் ஆண்டனா என இதில் ஒரு சிறு பிரச்னை என்றாலும் அவற்றை எப்படிச் சரி செய்வதெனத்  தெரியாமல் இருப்பவர்கள் நம்மில் ஏராளம். தொழில்நுட்ப தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் இன்றைய தலைமுறையில் கூட ஒளிபரப்பு தடைபட்டால் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார்கள். 

டீவியில் ஒளிபரப்பு இல்லை என்றதும் நுகர்வோர் குறை தீர்ப்பு மையங்களுக்குப் போன் செய்வதைத் தவிர்த்து, முதலில் டீவியின் சோர்ஸ் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆண்டனாவில் இருந்து வருகிற கேபிள் சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பது முக்கியம். காரணம் எலி கடித்து விட வாய்ப்பிருக்கிறது. குடை வடிவத்தில் இருக்கும் டிஷ் ஆண்டனா பயன்படுத்துபவர்களின் முக்கியப் பிரச்னையே அலைவரிசை மாறி விடுவதுதான். காற்றிலோ, பறவைகளின் அசைவிலோ கூட அலைவரிசை மாறிவிட வாய்ப்பிருக்கிறது. சேமித்து வைக்கப்பட்டிருக்கிற அலைவரிசைகளில் ஒரு புள்ளி மாறினாலும் கூட 200 சேனல்களில் ஐம்பது சேனல்கள் எடுக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. டீவி தெரியவில்லை என்பதற்காக வடிவேலுவைப் போல மாடியில் நின்று ஆண்டனாவைத் திருப்பி கெத்துக் காட்டுவதெல்லாம் தேவையில்லாத வேலை. காரணம் தப்பிப் பிழைத்து வந்துக்கொண்டிருக்கிற மீதிச் சேனல்களும் வராமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆண்டனாவை வாங்கும் போதே எந்தப் பாதிப்பும் வராத இடத்தில் பொருத்துவதே சிறந்தது. ஹான்டனா சார்ந்த பிரச்னை எனத் தெரியவந்தால் டெக்னீஷியனை அணுகுவதே சிறந்தது. 

மழை நேரங்களில் சேட்டிலைட் ஒளிபரப்பில் சிறிது தடங்கல் இருப்பது உண்மைதான். டீவியில் படம் வரவில்லை என்று செப்டாப் பாக்ஸை ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்வது, கேபிள் வயரைத் துண்டித்து மீண்டும் இணைப்பது எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள். சேவை வழங்கும் நிறுவனங்களைப் பொறுத்து ERROR CODE  எண்கள் மாறுபடும். செட்டாப் பாக்ஸ் ERROR E 48-32 எனக் காட்டுகிறது என வைத்துக் கொள்வோம். பாக்ஸை ஆப் செய்துவிட்டு  ஸ்மார்ட் கார்டை வெளியே எடுத்து ஒரு முறை துடைத்து மீண்டும் செலுத்தி ஆன் செய்தால் பிரச்னை சரியாக வாய்ப்பிருக்கிறது. அப்படியும் சரியாகவில்லை என்றால்  செட் டாப் பாக்ஸை ரீசெட் செய்து ஆட்டோ ஸ்கேன் செய்தால் பிரச்னை சரியாக வாய்ப்பிருக்கிறது. எல்லா நிறுவன செட் டாப் பாக்ஸ்களிலும் பாஸ்வேர்ட் என்பது 0000 அல்லது 1234 ஆகத்தான் இருக்கும். அப்போதும் பிரச்னை சரியாகவில்லையெனில் கஷ்டமர் கேரைத் தொடர்பு கொள்ளுங்கள். மழை நேரங்களில்  கேபிள் வயர்களில் குறைந்த அழுத்த மின்சாரம் பாயவும் வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். 

கேபிள் வயர் வழியாக செட்டாப் பாக்ஸ்க்குள் தண்ணீர் போக வாய்ப்பிருக்கிறது. அப்படித் தண்ணீர் போக நேர்ந்தால் பாக்ஸ் பழுதாகிவிடும். அப்படியான நேரங்களில் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பழைய பாக்ஸை பெற்றுக் கொண்டு புதிய பாக்ஸை மாற்றித் தருகிறார்கள். கடையில் புது பாக்ஸ் வாங்கிக் கொள்கிறேன் என்பவர்கள் ஒரு நிமிடம் கவனிக்கவும். உங்களின் ஸ்மார்ட் கார்ட் எண் உங்களின் செட் டாப் பாக்ஸ் எண்ணோடு இணைக்கப்பட்டிருக்கும். பாக்ஸ் பழுதானால் நிறுவனங்களே புதிய பாக்ஸை பழைய ஸ்மார்ட் கார்டோடு இணைத்துத் தருகிறார்கள். அப்படியான பிரச்னைகளைச் சரி செய்வதற்கு சில D2H நிறுவனங்கள் அந்த வேலையைச் சில தனியார் ஏஜென்சிகளுக்குக் கொடுத்து விடுகிறார்கள். ஏஜென்சியில் வேலை செய்கிற சிலர்  செட்டாப் பாக்ஸ் பிரச்னை எனச் சொல்லி பாக்ஸ் வாங்கி போகவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிப் போகிற பாக்ஸ் திருப்பித் தர கால தாமதமாகலாம். பாக்ஸில் ஏதேனும் பிரச்னை என்றால் நீங்களாகவே சர்வீஸ் செண்டர்களுக்குக் கொண்டு செல்வதுதான் நல்லது. இல்லையெனில் வீண் மன உளைச்சல்களுக்கு ஆளாகவும் வாய்ப்பிருக்கிறது. 

ஆண்டானாவில் பொறுத்தப்பட்டிருக்கிற LNP  (LOW NOISE BLOCK) பழுதாகவில்லை என்றாலும் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றி விடுவது நல்லது. கேபிள், செட்டாப் பாக்ஸ், டிஷ் ஆண்டனா என இதில் ஒரு சிறு பிரச்னை என்றாலும் முதலில் நாமே சரி செய்து கொள்ள முயல்வதுதான் சிறந்தது. ஏனெனில் ஒளிபரப்புதான் வானத்தில் இருந்து வருகிறது. அதற்குச் செலவாகிற பணம் நம் உழைப்பில் இருந்து வருகிறது.

No comments: