💥 ஜியோ மொபைல் போன் இலவசமாக, ஜியோ சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் என ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார். அத்துடன் ஜியோ மொபைல் கேபிள் டிவி என்ற சாதனத்தையும் முகேஷ் அம்பானி அறிமுகம் செய்து வைத்துள்ளார். இது செட்-ஆஃப் பாக்ஸ்சினை இணையதளம் மூலம் இணைக்கப்பட்டுக் கேபிள் டிவி சேவையினை வழங்கும்.
💥 ஜியோவின் இந்த இலவச போனின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமனான டிவி, திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சேவைகளை மொபைல் போன் மூலமாகப் எளிதாகப் பார்த்து மகிழலாம்.
💥 இந்தியாவில் உள்ள பல கிராமங்களில் கேபிள் டிவி மற்றும் இணையதளச் சேவைகள் கிடைப்பது இல்லை. இதனால் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் டிவி மற்றும் இணையதள சேவையை பயன்படுத்த சிரமப்படுகின்றனர். இந்த சிரமத்தில் இருந்து விடுபட எங்களது தொழில்நுட்ப பொறியாளர்கள் புதிய திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளனர். அதுதான் ஜியோ போன் டிவி என்றும் தெரிவித்தார் முகேஷ் அம்பானி.
💥 ஜியோ போன் டிவி ஸ்மார்ட் டிவி மட்டும் இல்லாமல் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஜியோ போன் இணைப்பின் மூலம் தொலைக்காட்சி சேவைகளை பெற்று மகிழலாம். இதற்காக ஜியோ பயனர்கள் புதிய டிவி ஒன்றை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
💥 அனைத்துத் தொலைக்காட்சி சேனல்களும் தற்போது தங்களது சேவையினை இணையத்தளத்திலும் நேரடியாக வழங்கி கொண்டு வருகின்றனர். நீங்கள் ஜியோ போன் டிவி கேபிள் சேவையினைப் பயன்படுத்தி, அதனை எளிமையாக உங்கள் டிவி உடன் இணைத்துப் பயன்பெறலாம்.
💥 உங்கள் போனை டிவி உடன் இணைக்கக்கூடிய செட் ஆஃப் பாக்ஸ் போன்று சாதனம் வேண்டும்.
💥 ஜியோ போனை டிவி உடன் இணைத்து மொபைல் திரையில் என்ன செல்கின்றதோ அதனை அப்படியே தொலைக்காட்சி பெட்டிகளில் பார்க்கலாம். எனவே மொபைல் போனில் டிவி பார்க்க விரும்பினால் ஜியோ போனை இணைத்து அதனை டிவி-லும் பார்த்து மகிழலாம்.
💥 4 முதல் 5 மணி நேரம் வரை ஜியோ போன் உதவியுடன் டிவி பார்க்க 4ஜி இணையம் மற்றும் 512 எம்பி தரவு இருந்தால் டிவி பார்க்க முடியும்.
💥 ஜியோ மொபைல் கேபிள் டிவி சாதனத்தை ஸ்மார்ட் டிவி மட்டுமல்லாமல், பழைய சிஆர்டி தொலைக்காட்சிகளிலும் இணைத்துக் கொண்டு, 3 முதல் 4 மணி நேரங்களுக்கு டிவி திரையில் விருப்பப்பட்ட வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம்.
💥 ஜியோ மொபைல் கேபிள் டிவி சாதனம் யார் அதிகமாக டிவி பார்க்க மாட்டார்களோ அவர்களுக்கு இது டிடிஎச் கட்டணங்களைக் குறைக்க உதவும்.
No comments:
Post a Comment