தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.
சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் இதனை தெரிவித்துள்ளார்.
கேபிள் விநியோகத்தை முறைப்படுத்த தமிழக அரசு கேபிள் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
இக்கழகத்துக்கு டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்து சேனல்களையும் கண்டுகளிக்க செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும்.
உள்ளூர் கேபிள்களை ஒளிபரப்ப ஏலமுறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இணையம் வழியாக அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு பலப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக நமது அரசு இணைய தளம் தொடங்கப்பட உள்ளது.
ரூ.88.37கோடியில் கிராமங்களில் கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டரில் இலக்கண திருத்தமாக தமிழ் எழுதுவதற்கு சிறப்பு மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment