NDTV இந்தியா, பழமையான மற்றும் பெருமதிப்பு வாய்ந்த இந்தி செய்தி சேனல்களில் ஒன்றாக திகழும் சேனல், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அதற்கு காரணம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை (I&B) அமைச்சகம்… கேபிள் டிவி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் நவம்பர் 9 ஆம் நாளன்று 00:01 மணி முதல், 10 நவம்பர் 2016 00:01 மணி வரை தடை ஒளிபரப்பை தடை செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது .இந்த தடை அமுலுக்கு வரும் பட்சத்தில் இந்தியா முழுவதுதிலும் கேபிள்டிவி, DTH, IPTV, HITS என அனைத்து தளத்திலும் NDTV இந்தியா சேனலின் ஒரு நாள் ஒளிபரப்பு மற்றும் மறு ஒளிபரப்பு தடை செய்யப்படும்.
எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா அமைப்பு இதற்கு கடுமையாக கண்டித்ததுடன், பத்திரிகை சுதந்திரத்தை “நேரடியாக மீறும் வகையில் உள்ளது என தெரிவித்தனர். இதற்கிடையே NDTV தகவல் அமைச்சகம் இந்த முடிவை கைவிடவேண்டும் என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இதனிடையே ஒரு சில விளம்பரத்துறை நிபுணர்களிடம் பேசுகையில்… NDTV இந்தியா ஒரு நாள் ஒளிபரப்பு ரத்து செய்வதால் எவ்வளவு விளம்பர வருவாய் நஷ்டம் ஆகும் என கேட்கையில்…..
நிபுணர்கள் கூறியது NDTV இந்தியா சேனல் ஒரு நாள் ஒளிபரப்பு ரத்து செய்தால் சுமார் ரூ 18-20 லட்சம் வரையிலான விளம்பர வருவாயை இழக்க நேரிடும் என தெரிவித்தனர். “இது ஒரு உத்தேச தொகை ஆகும். NDTV இந்தியா சேனலில் சுமார் 30% அளவிலான விளம்பரம் நேரங்கள் காலியாக செல்கிறது. அதனால் அவர்களின் ஒரு நாள் ஒளிபரப்பு ரத்தை , அவர்கள் பின்வரும் நாட்களில் விளம்பரதாரர்களுக்கு கூடுதல் நேரத்தை கொடுத்து அவர்களால் ஈடு செய்ய முடியும் எனவும்… தெரிவித்துள்ளனர்.
மதிப்பீடுகளின் விவரங்கள் படி NDTV இந்தியா சேனலின் ஒரு 10 விநாடி விளம்பர கட்டணம் சுமார் ரூ 1000-1500 என வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் இந்த ஒளிபரப்பு ரத்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புவதாகவும் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment