பேச்சு வாக்கில் இருந்த செய்தி, தற்போது அதிகாரப்பூர்வமாகியுள்ளது. 45 சதவீதத்தை நெருங்கிய ஒரு சந்தை பங்களிப்பை கொண்டதாக மாறியுள்ளது தற்போதை செய்தி… Videcon D2H மற்றும் டிஷ் டிவி இரு பிராண்ட் DTHகளும் தற்போது இணைந்து ஒன்றாகியுள்ளது
டிஷ் டிவி மற்றும் வீடியோகான் d2h நிறுவனங்களின் டையரக்டர்களின் கூட்டத்தில் இந்த இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கபட்டது. ஒவ்வொரு வீடியோகான் பங்கிற்கும் 2.021 அளவில் புதிய டிஷ் டிவி வீடியோகான்னுடன் பங்குகளை பெறுகின்றனர் எனவும். டிஷ் டிவி பங்குதாரர்களுக்கு 55.4% எனவும் மீதம் உள்ள பங்குகள் வீடியோகான் பங்குதாரர்களுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
டிஷ் டிவியில் இருந்து வெளியிட்ட செய்தி படி, டிஷ் டிவி வீடியோகான்னுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குராக ஜவஹர்லால் கோயல் இருப்பார். இந்த இணைப்பின் மூலம் இந்தியாவில் உள்ள ஒரு முதன்மையான கேபிள் மற்றும் செயற்கைக்கோள் விநியோகம் தளம் உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.
டிஷ் டிவி, வீடியோகான்னுக்கு இந்தியாவில் மொத்தமுள்ள 175 மில்லியன் டிவிகளில், 27.6 மில்லியன் நிகர சந்தாதாரர்களை கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த நிறுவனத்தின் வருவாய், மார்ச் 31, 2016 வரை, ரூ. 5,915 கோடி எனவும் மேலும் செயல்பாட்டு லாபம். ரூ .1,826 கோடி எனவும் தெரிவித்துள்ளனர்.
“இந்தியாவில் நாங்கள் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் தொழில் வேகமாக டிஜிட்டல் மயமான பாதையில் முன்னேறி வருகிற, இந்த தருணத்தில் இந்த இணைப்பை அறியத்தருகிறோம். இந்தப் பரிவர்த்தனை, கேபிள் மற்றும் செயற்கைக்கோள் தொழிலில் இரண்டு அதிகாரமுள்ள பிராண்டுகள் சேர்ந்துள்ளது, ” என திரு.கோயல் தெரிவித்துள்ளார்.
சவுரப் தூத் , Vd2h நிறுவனத்தின் செயல் தலைவர் கூறுகையில்: “ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீடியோகான் d2h வர்த்தகத்தை துவக்கினோம் என்பதால், நாம் ஒரு திட அடித்தளத்தை கொண்டு மிகவும் வெற்றிகரமான, உயர் வளர்ச்சியை DTH வணிகத்தில் உருவாக்கியுள்ளது. இதை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து ஒரு முன்னணி, புதுமையான மற்றும் மிகவும் இலாபகரமான இந்திய ஊடகத்துறை அரங்கை வெளிப்படுத்த ஒரு பார்வையாக NASDAQ சென்றோம். இன்று நம் முன் தீர்க்கமான மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமையுடன் ஒரு திட தளம் உருவாக்க அனைத்து பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், மற்றும் எங்கள் பங்குதாரர்களின் பெறுமதியை உருவாக்க வழிவகுக்கும் டிஷ் டிவியுடன் வீடியோகான் இணைந்தது மிகவும் உற்சாகமாக உள்ளது என கூறினார்.
போட்டிகள் நிறைந்த இந்திய DTH துறை இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறதோ…!!?
No comments:
Post a Comment