Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

21 November 2016

உலக தொலைக்காட்சி தினம்


உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் எடுத்து சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைகாட்சி கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் தேதியை உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.

உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை பு+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று தொழில்நுட்ப சாதனம் மூலம் கண் முன்னே காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.

பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்களை அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சி தான் முன்னிலை வகிக்கின்றது.

No comments: