இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 137 சேனல்கள் (112 செய்தி அல்லாத சேனல்கள் மற்றும் 25 செய்தி சேனல்கள்) மார்ச் 28, 2016 முதல் ஜூன் 26, 2016 இடையிலான காலகட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட விளம்பரம் என்ற TRAI யின் வரையறை மீறியுள்ளதாக அறிவித்துள்ளது.
செய்தி அல்லாத சேனல்களில் B4U மூவிஸ் சேனல் (B4U பிராட்பேண்ட் இந்தியா பிரைவேட். லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது) பிரைம் டைம் நேரமான (இரவு 7 மணி மற்றும் இரவு 10 மணி) அதிகபட்சமாக சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு விளம்பரங்களை 24.54 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யபப்பட்டதாக டிராய் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து தரவு வெளியிட்டுள்ளது.
செய்தி சேனல்களில், ETV ராஜஸ்தான் (பனோரமா தொலைக்காட்சி லிமிடட்.நிறுவனத்திற்கு சொந்தமான) சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 21.96 நிமிடங்கள் என்ற அளவில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
மேலும் இந்த பட்டியலில் சன் டிவி, ஸ்டார் பிளஸ்,SAB மற்றும் Colors சேனல்களும் NDTV Profit மற்றும் CNN IBN போன்ற ஆங்கில கட்டண செய்தி சேனல்கள் உள்ளிட்ட பிரபலமான GECs சேனல்களும் பட்டியலில் உள்ளது
மேலும் இந்த அட்டவணையில் Movies Now,Star Movies, Zee Cinema மற்றும் SET MAX போன்ற சேனல்களும் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட விளம்பரம் என்ற வரையறைக்கு இணங்கவில்லை என்பதை தனது வலைதளத்தில் தரவுகளுடன் குறிப்பிட்டுள்ளது.
டிராய் மற்ற பிற கட்டண சேனல்கள் (Non NEWS மற்றும் News சேனல்கள் ) பிரைம் டைம் எனப்படும் 7 pm-10pm வரையிலான காலத்தில் விளம்பரங்களை ஒரு மணிக்கு 12 நிமிடங்கள் (10 நிமிடம் வணிகவிளம்பரம் மற்றும் 2 நிமிடம் நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரம்) என சராசரி கால அளவவிற்கு குறைவாக கொண்டுவருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி மற்றும் செய்தி அல்லாத சேனல்களில் ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடங்கள் விளம்பரம் என்ற வரையறையை.. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI 2013 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் சவாலுக்குட்படுத்தப்பட்ட பிறகு, விளம்பரம் வரையறை விஷயம் டில்லி உயர் நீதிமன்றத்த்தின் விசாரணையில் உள்ளது.
No comments:
Post a Comment