உலக அரங்கில், விண்வெளித் துறையில் தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், தன் அடுத்தடுத்த பாய்ச்சல்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக, முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 டி-1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணைத் தளத்திலிருந்து, இன்று மாலை 5: 28 மணிக்கு விண்ணில் செலுத்த இருக்கிறது. நேற்று மாலை 3 :58 மணிக்கு அதற்கான கவுன்ட்-டவுண் தொடங்கிவிட்டது.
ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கனரக ராக்கெட் இது. 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ ஆகும். ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் வெற்றி, இந்திய விண்வெளித்துறையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment