கார்டோசாட் -2 (Cartosat-2 series) செயற்கைக்கோளை தாங்கிச்செல்லும் பிஎஸ்எல்வி சி–38 (PSLV C-38) ராக்கெட்டுக்கான கவுன்டவுண் இன்று காலை தொடங்கியது.
இஸ்ரோ வடிவமைத்துள்ள கார்டோசாட் -2 செயற்கைக்கோள், பூமியைக் கண்காணித்து ஆராய்ச்சிசெய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட உள்ளது. 712 கிலோ எடைகொண்ட கார்டோசாட் -2 செயற்கைக்கோள் வானிலை ஆராய்ச்சி, கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு விண்ணில் ஆராய்ச்சி மேற்கொள்ளுமாம். இந்த செயற்கைக்கோளைத் தாங்கிக்கொண்டு, நாளைக் காலை விண்ணில் ஏவப்பட உள்ள பிஎஸ்எல்வி சி–38 (PSLV C-38) ராக்கெட்டுக்கான 28 மணி நேர கவுன்டவுண் தொடங்கிவிட்டது. கார்டோசாட் -2 செயற்கைக்கோளுடன் சேர்த்து 14 நாடுகளின் 29 நானோ (Nano) செயற்கைகோள்களும் நாளை ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment