Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

30 June 2017

SUVARNA HDStarted OnAsiaSat-7 @105.5E

SUVARNA HD
Started On
AsiaSat-7 @105.5E
TP: 4020 V 28096
MPEG2/SD/FTA Test


Z BioskopChinasat-10@110.5E on Replace Wisal TV

New Channel
"Z Bioskop"
Chinasat-10 (110.5E)
TP.3560 V 30000
MPEG-4/FTA
Replace Wisal TV


29 June 2017

New channel update

SUVARNA HD
Started On
AsiaSat-7 @105.5E
TP: 4020 V 28096
MPEG2/SD/FTA Test

IR TV RZ1
Started On
YahSat-1A @52.5E
TP: 12073 V 27500
MPEG2/SD/FTA

ASTRO SAVET
Started On
EutelSat-16 @16.E
TP: 11678 H 30000
MPEG4/HD/FTA

TMC TV HD
Started On
HotBird-13D @13.E
TP: 11680 H 27500
MPEG4/HD/FTA

FANA TV
Started On
NSS-12 @57.0E
TP: 11565 H 10740
MPEG4/HD/FTA

27 June 2017

New channel update

TIJI KIDS TV
On
EutelSat-36B @36.E
TP: 11881 V 27500
MPEG2/SD/FTA Started

ஜூன் 29-ம் தேதி விண்ணில் பாய்கிறது ஜிசாட்-17

தொலைத்தொடர்புக்கான செயற்கைக்கோள் ஜிசாட்-17, வருகிற 29-ம் தேதி விண்ணில் பாயும் என இஸ்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் 8 முதல் 10 பிஎஸ்எல்வி ராக்கெட்களையும், தலா 2 ஜிஎஸ்எல்வி மார்க்-3, மார்க்-2 ராக்கெட்டுகளையும் விண்ணில் ஏவ வேண்டும் என இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதை, அதிகாரபூர்வமாகச் செயல்படுத்தத் தொடங்கவில்லை என்றபோதும், சமீப நாள்களாக தொடர்ச்சியாகச் செயற்கைக்கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாகச் செலுத்திவருகிறது இஸ்ரோ. தற்போது, தொலைத்தொடர்பு மேம்பாட்டுக்காக ஜிசாட்-17 என்ற செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.

அதிக எடைகொண்ட இந்த ஜிசாட்-17 செயற்கைக்கோள், அனுப்புவதற்கான மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்பு இன்னும் இஸ்ரோ ஏவுதளத்துக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால், ஃப்ரெஞ்ச் கயானாவிலிருந்து ஜிசாட்-17 செலுத்தப்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 5,425 கிலோ எடைகொண்ட ஜிசாட்-17, ஏரியன் ராக்கெட் மூலம் வரும் 29-ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் விண்ணில் பாய்கிறது.

26 June 2017

ஸ்கை டிவி புதிய ஹிந்தி திரைப்படம் தொலகை்காட்சி தொடக்கம்

ஸ்கை டிவி புதிய ஹிந்தி திரைப்படம் தொலகை்காட்சி தொடக்கம்
சாட் :105.5 சி பேண்டு
டிபி :4067 H 4294
MPEG 2

24 June 2017

New channel update

VIZYON 58 TV
On
TurkSat-4A @42.E
TP: 11824 V 8000
MPEG2/SD/FTA Started

CCTV 13
CHINA MOVIES
On
LaoSat-1 @128.5E
TP: 3622 H 30000
MPEG2/SD/FTA Started

செயற்கைக்கோளை நிலைநிறுத்திவிட்டு பூமிக்கு திரும்பும் ராக்கெட்: சோதனையில் ’ஸ்பேஸ் எக்ஸ்’ வெற்றி!


விண்வெளியில் செயற்கைக்கோளை நிலைநிறுத்தியப் பின்னர் அதே ராக்கெட் பூமிக்கு திரும்பும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது

ஒரு விமானத்தை தரையிறக்கலாம் என்பது அனைவரும் அறிந்ததே. மணிக்கு பல மைல் வேகத்தில் சீறிப்பாயும் ராக்கெட்டை வெற்றிகரமாக தரையிறக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால், அதனை வெற்றிகரமாக இரண்டாவது முறையாக நடத்திக் காட்டியிருக்கிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட் செயற்கைக்கோளை நிறுத்திவிட்டு மீண்டும் வெடித்துச் சிதறாமல் பாதுகாப்பாக பூமியிலேயே தரையிறங்கும் இத்திட்டத்தால் பல செலவுகள் குறைக்கப்படும். 

இந்தப் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டம், நேற்று கென்னடி விண்வெளி மையத்தில் நடைபெற்றது. 'ஃபால்கன் 9' என்ற இந்த ராக்கெட் நேற்று பல்கேரியாவின் செயற்கைக்கோளை சுமந்துகொண்டு விண்ணில் பாய்ந்தது. ஒரு குறிப்பிட்ட தூரத்துக்குப் பின்னர், செயற்கைக்கோளை விட்டுப்பிரிந்த ராக்கெட் ஃபுளோரிடா மாகாணத்தில் தரையிறங்கியது. இதன்மூலம் இரண்டாவது முறையாக விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஒன்றினை மீண்டும் பாதுகாப்பாக தரையிறக்க முடியும் என்பதை ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் நிரூபணம் செய்துள்ளது.

பி எஸ் எல் வி - சி 38 குறித்த 8 முக்கிய தகவல்கள்

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இஸ்ரோவின் பி எஸ் எல் வி - சி 38 ராக்கெட் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல்கள் இவை.

பி எஸ் எல் வி ராக்கெட்டுகளை கொண்டு இஸ்ரோ தொடர்ச்சியாக 39ப் வெற்றி பயணங்களை மேற்கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தின் போது, மொத்தம் 31 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டன. அதில், 30 செயற்கைக்கோள்கள் வாடிக்கையாளர் செயற்கைக்கோள்கள்.

பி எஸ் எல் வி சி 38 தரையிலிருந்து புறப்பட்டு அரைமணி நேரத்திற்குள்ளாக அனைத்து செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக ராக்கெட்டிலிருந்து பிரித்தது.

712 கி்லோ எடை கொண்ட இந்தியாவின் கார்டோசாட்-2 தொடர் செயற்கைக்கோள் பூமியின் சுற்று வட்டப்பாதையில் முதலில் நிலைநிறுத்தப்பட்டது.

கார்ட்டோசாட்டில் உள்ள கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை உணரும் கேமரா மற்றும் பிற நிறங்களை உணரும் கேமராக்களை பயன்படுத்தி தொலை உணர்வு சேவைகளை இனிவரும் தினங்களில் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமைISROImage captionபி எஸ் எல் வி - சி 38ஏவப்பட்ட பிற 30 செயற்கைக்கோள்களில் 15 கிலோ எடை கொண்ட நியுசாட் செயற்கைக்கோளும் ஒன்று. இது தமிழகத்தில் உள்ள நுருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மற்றும் கல்வி நிறுவன செயற்கைக்கோள் ஆகும்.

இஸ்ரோவின் சர்வதேச வாடிக்கையாளர்களான அமெரிக்காவின் 10 செயற்கைக்கோள்களும், பிரிட்டன், பெல்ஜியம் மற்றும் இத்தாலி நாடுகளின் தலா மூன்று செயற்கைக்கோள்களும், ஆஸ்திரியா, சிலி, செக் குடியரசு, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், லாட்வியா, லித்துவேனியா மற்றும் ஸ்லோவேகியா ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் இதில் அடங்கும்.

இஸ்ரோவின் இந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பி எஸ் எல் வி மூலம் ஏவப்பட்ட வாடிக்கையாளர் செயற்கைக்கோளின் எண்ணிக்கை 209 ஐ எட்டியுள்ளது.

23 June 2017

புதிய சேனல்கள் லியோசாட்  @ 128.5E இல்

புதிய சேனல்
கே பிளஸ் (K Plus) 2 HD
மேக்ஸ் டூன் (MaxToon) சேனல் HD
Laosat.1 (லியோசாட்  1)@ 128.5E
TP.3496 V 8975
MPEG.4 / HD FTA


22 June 2017

டி.டி.எச் ஸ்லாட்டுகளுக்கான 36 வது ஆன்லைன் மின் ஏலம்

டி.டி. இலவச டிஷ் இந்தியாவின் ஒன்றாகும். பிரசார் பாரதி, தூர்தர்ஷன் மட்டுமே இலவச சேவை. இந்த நேரத்தில் டிடி ஃப்ரெரிதி 80 தொலைக்காட்சித் தொலைக்காட்சிகளை விடவும் தூர்தர்ஷன் மற்றும் தனியார் டிவி சேனல்கள் உள்ளிட்டவை.

DTH SLOT விலை வகை வாரியானது

செய்தி மற்றும் நடப்பு விவகாரங்களுக்கான ரிசர்வ் விலை ரூ. 6.50 கோடியாகும்.

செய்தி அல்லாத மற்றும் நடப்பு விவகாரங்கள் பிரிவினருக்கு ரூ. 8.00 கோடி.

இந்த மின்-ஏலத்தில் ஆர்வமுள்ள தனியார் டிவி சேனல்கள் பங்கேற்கலாம். வெற்றிகரமான சேனல் DD Free Dish மேடையில் தங்கள் சேனலை வைக்க முன்கூட்டியே தங்கள் IRD பெட்டி ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் தகவலுக்கு தூர்தர்ஷாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு வருகை தரவும்.

04-07-2017 அன்று (செவ்வாய்க்கிழமை) 36 வது மின்-ஏலத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

04-07-2017 அன்று (செவ்வாய்க்கிழமை) 36 வது மின் ஏலத்தின் விளம்பரம்

Today New channel update

MYME TV HD
LAONE TV HD
Added On
YahSat-1A @52.5E
TP: 11843 V 27500
MPEG4/HD/FTA
Started On West Beam

ELIPA TV
SALDAE TV
GOURAYA TV
& More Channels
Added On
YahSat-1A @52.5E
TP: 12130 H 27500
MPEG2/SD/FTA
Started On West Beam

SAUDI 1 TV HD
SAUDI 2 TV HD
SAUDI SPORT1 HD
SAUDI SPORT2 HD
Added On
MonacoSat-1 @52.E
TP: 12417 V 27500
MPEG4/HD/FTA Started

நாளை விண்ணில் நிலைநிறுத்தப்படும் கார்டோசாட்-2...  கவுன்டவுண் தொடங்கியது

கார்டோசாட் -2 (Cartosat-2 series) செயற்கைக்கோளை தாங்கிச்செல்லும் பிஎஸ்எல்வி  சி–38 (PSLV C-38) ராக்கெட்டுக்கான கவுன்டவுண் இன்று காலை தொடங்கியது.
இஸ்ரோ வடிவமைத்துள்ள கார்டோசாட் -2 செயற்கைக்கோள், பூமியைக் கண்காணித்து ஆராய்ச்சிசெய்ய உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஏவப்பட உள்ளது.  712 கிலோ எடைகொண்ட கார்டோசாட் -2 செயற்கைக்கோள் வானிலை ஆராய்ச்சி, கடல்சார் ஆராய்ச்சி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. மேலும் இந்த செயற்கைக்கோள், அடுத்த 5 ஆண்டுகளுக்கு விண்ணில் ஆராய்ச்சி மேற்கொள்ளுமாம். இந்த செயற்கைக்கோளைத் தாங்கிக்கொண்டு, நாளைக் காலை விண்ணில் ஏ‌வப்பட உள்ள பிஎஸ்எல்வி சி–38 (PSLV C-38) ராக்கெட்டுக்கான 28 மணி நேர கவுன்டவுண் தொடங்கிவிட்டது. கார்டோசாட் -2 செயற்கைக்கோளுடன் சேர்த்து 14 நாடுகளின் 29 நானோ (Nano) செயற்கைகோள்களும் நாளை ஏவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

31 செயற்கைக்கோளுடன் PSLVC38 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது

31செயற்கைக்கோளுடன் PSLVC38 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுன்டவுன் இன்று காலை 5.30மணிக்கு தொடங்கியது ISRO

'பிஎஸ்எல்வி - சி 38' ராக்கெட், 31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் ஏவப்படுகிறது. 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோளை, பிஎஸ்எல்வி., - சி 38 ராக்கெட் மூலம் இன்று காலை, 9:29 மணிக்கு, ஶ்ரீஹரிகோட்டா சதீஷ்தவாண் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைக்கோள், புவியின் செயல்பாட்டைக் கண்காணிக்க இருக்கிறது.
மேலும், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 29 செயற்கைக்கோள்களும், இந்தியாவைச் சேர்ந்த ஒரு நானோ செயற்கைக்கோளும் சேர்ந்து, மொத்தம் 31 செயற்கைக்கோள்களுடன் இன்று காலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி38 ராக்கெட். இதற்கான கவுன்ட்டவுண் நேற்று காலை 5.29 மணிக்குத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின் மதிப்பு 160 கோடி ரூபாய். 

Today New channel update

HBC CHANNEL
Added On
MeaSat-3A @91.0E
TP: 3716 H 7500
MPEG4/HD/FTA Started

New-Channel
"UNIRE-SAT-HD"
MEASAT.3A(91.5E)
TP.3788 V 2090
MPEG-4 HD FTA STARTED

New-Channel
HAMARA-NEWS
PAKSAT.1R(38.0E)
TP.4037 V 4800
MPEG-4 HD FTA STARTED
REPLACE AT HAMRA-TV

DURONTO TV
APSTAR7@76.5East
TP.4065 H 4000
MPEG4 HD FTA Started

21 June 2017

New channel update

M FAMILY TV
Added On
Express-AM6 @53.E
TP: 12720 V 27500
MPEG2/SD/FTA Started

NTV MIR
Added On
Astra-5B @31.5E
TP: 12070 H 30000
MPEG2/SD/FTA Started

YAHASAT_1A_52,E
New_Channels
Tameshk_ TV
11958 H 27500
MPEG 2 FTA

Cartoon_Network
12132 H 27500
MPEG 4 HD FTA

20 June 2017

TG-NORBA-24 STARTED ON HOTBIRD-13D

New-Channel
"TG-NORBA-24"
HOTBIRD-13D(13.0E)
TP.11541 V 22000
MPEG-2 SD FTA STARTED

மேனேஜ்மென்ட் டுடே டிவி இன்டெல்சாட் 20 @ 68.5E இல் தொடக்கம்


மேனேஜ்மென்ட் டுடே டிவி (Management today TV)
இன்டெல்சாட்  20 @ 68.5E
டிபி: 4182 H 16296
MPEG4 / HD / FTA

சேனல் எஸ் அப்ஸ்டார் -7 @ 76.5E இல் தொடக்கம்

சேனல் எஸ்
அப்ஸ்டார் -7 @ 76.5E
டி.பி: 3693 எச் 9230
MPEG4 / HD / FTA

19 June 2017

டிஸ் டிவி இல் STAR MOVIES ACTION சேனல் நீக்கம்


BAD NEWS
NSS6 (95E) DISHTV PKG
STAR MOVIES ACTION REMOVED
FROM DISHTV

இந்தியாவின் முதல் தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனல்


ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுதான் மொழியைத் தாண்டி அனைவராலும் பார்த்து ரசிக்கக்கூடியது. மொழி இதற்கு அவசியமில்லை என்றாலும்கூட, கிரிக்கெட் கமென்ட்ரியைத் தமிழில் கேட்டு ரசித்த பொழுதுகள் மிகவும் அலாதியானவை. சென்னை வானொலி நிலையத்துக்கு அடுத்தபடியாக கிரிக்கெட் கமென்ட்ரியைத் தமிழில் தந்தது சோனி இ.எஸ்.பி.என்-தான். அது தவிர `விஜய் சூப்பர்' சேனலிலும், தமிழ்நாடு ப்ரீமியர் லீக் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளுக்கு தமிழில் கமென்ட்ரி வழங்கப்பட்டுவந்தது. ஆனால், தற்போது அது விஜய் டிவி-யின் பழைய நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் சேனலாக முற்றிலும் மாறிவிட்டது. இதனால் கவலைகொண்ட ரசிகர்களுக்காகவே, தற்போது 24 மணி நேரமும் தமிழ் கமென்ட்ரி, தமிழுக்கான எக்ஸ்க்ளூசிவ் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சிகள், குறிப்பாக தமிழ்நாட்டின் பாரம்பர்ய விளையாட்டுகளை மையமாகவைத்து தொகுக்கப்பட்ட நிகழ்ச்சிகள் என அசத்தலான பல ஐடியாக்களுடன் கடந்த மே 28-ம்  தேதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது `ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்'. இதுதான் இந்தியாவின் முதல் தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனல். 
இந்த சேனலில் தற்போது `இது எங்க ஆட்டம்' என்ற நிகழ்ச்சி, மதியம் 1.40 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இதில் தமிழ் விளையாட்டு வீரர்கள், தங்களது மறக்க முடியாத அனுபவங்களைப் பகிர்ந்துவருகின்றனர். மேலும், மேட்ச் ஹை-லைட்ஸ், விளையாட்டு வீரர்களைப் பற்றிய தொகுப்பு, முன்னாள் வீரர்களின் அனுபவங்கள் எனப் பல ஆவணப்படங்களும் தொகுக்கப்பட உள்ளன. காலை 11.40 மணிக்கு ஒளிபரப்பாகும், `மச்சி... ஆர்  யூ ரெடி?' என்ற நிகழ்ச்சியை ஆர் ஜே பாலாஜி தொகுத்து வழங்குகிறார். இதில் 2017-ம் ஆண்டு நடைபெறும் விளையாட்டு  நிகழ்ச்சிகளின் முழு தொகுப்பும் ஆவணங்களுடன் காண்பிக்கப்படுகிறது.  
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிவேகத்தில் பந்தைக் கையாளும் விக்கெட் கீப்பர், பந்துகளை மைதானத்துக்கு வெளியே பறக்கவிடும் தலைசிறந்த பேட்ஸ்மேன், குறிப்பாக இவர் இல்லை என்றால் `சென்னை சூப்பர் கிங்ஸ்' ஆட்டம் கண்டுவிடும் என்ற அளவுக்கு விளையாடிய மகேந்திர சிங் தோனியின் பெருமைகளையும் சாதனைகளையும் கூறிக்கொண்டே போகலாம். இந்த சேனலில் `நம்ம தல தோனி 2017' என்ற நிகழ்ச்சி வாரத்துக்கு மூன்று நாள்கள் ஒளிபரப்பப்படுகிறது. இதில்  தோனி, அவரது அனுபவங்களையும், 2017-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் திட்டங்களைப் பற்றியும் பகிர்ந்துவருகிறார். 20 நிமிடம் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கான தனிப்பட்ட நேரம், இதுவரை ஒதுக்கப்படவில்லை. தோனியின் இந்த எஸ்க்ளூசிவ் ஷோ, நிகழ்ச்சிகளுக்கு இடையில் வரும் ஃபில்லர்ஸாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது. மேலும், மேட்ச் இறுதியில் வீரர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதைத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சப்-டைட்டிலாகவும் போடப்பட்டு வருவது ரசிகர்களுக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
``இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி இருப்பினும், தமிழில் ஸ்போர்ட்ஸ் சேனல் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் பின்னணி என்ன?'' என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மற்றும் கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அவர்களிடம் கேட்டபோது...
``விளையாட்டுக்கு, அதுவும் கிரிக்கெட்டுக்கு எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். 1900-ங்களிலிருந்தே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட், டென்னிஸ், கபடி, கோ-கோ, ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. மேலும், கிரிக்கெட் பார்ப்பதற்காகக் கூடும் கூட்டம் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அதிகம். தமிழ் ரசிகர்களின் இந்த வரவேற்புதான் சேனல் ஆரம்பிக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம். இந்த சேனலில் தமிழ்நாட்டின் பாரம்பர்ய விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்படி நிறைய நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் சேனலின் முழுநேர நிகழ்ச்சிநிரல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் பதிலளித்தார். 
மேலும், இந்த மாதம் ஜூலை 22-ம் தேதி, `தமிழ்நாடு ப்ரீமியர் லீக் மேட்ச்' மற்றும் ஜூலை 28-ம் தேதி, `விவோ ப்ரோ கபடி லீக்' போன்ற இரண்டு போட்டிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு ப்ரீமியர் லீக் விளையாட்டு வீரர்கள் மற்றும் சென்னையின் FC அணி வீரர்கள் நிகழ்ச்சியைத் தொகுப்பதில் முக்கியப் பங்காற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், எல்.சிவராமகிருஷ்ணன், எஸ்.பத்ரிநாத், எஸ்.ஸ்ரீராம், எஸ்.ரமேஷ் மற்றும் ஹேமங் பதானி போன்ற முன்னாள் விளையாட்டு வீரர்கள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதலிலும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு கமென்ட்ரி கொடுப்பதிலும் பங்கேற்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. 
எனவே, வரும் ஆண்டில், `விளையாட்டுக்கான கூடுதல் முக்கியத்துவம், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலால் கொடுக்கப்படுமா?' என்ற ஆவல் அனைத்து விளையாட்டு ரசிகர்களிடமும் காணப்படுகிறது. தமிழ்ப் பாரம்பர்ய நிகழ்ச்சிகளுக்கான முக்கியத்துவம் எந்த அளவுக்குக் கொடுக்கப்படும் என்பதற்கான விடையை, பொறுத்திருந்து காணலாம்.
இதுபோன்ற முயற்சிகள் தமிழில் தொடர வாழ்த்துகள். 

New channel update

S TV
New Added On
AsiaSat-7 @105.5E
TP: 4150 V 5315
MPEG2/SD/FTA Started
Replace On STAR ACTION

CTL TV
HOTBIRD13D@13East
TP.12520 V 27500
MPEG2 FTA Started

18 June 2017

GRAND TV Added On AsiaSat-7 @105.5E

GRAND TV
Added On
AsiaSat-7 @105.5E
TP: 4150 V 5315
MPEG2/SD/FTA Started
Replace On MUSIC MASTI

New channels update

I FILM
HD FILM
META TV
CINE MAX
MOVIE MAX
NAVA ACTION
& More Channels
Added On
TurkSat-4A @42.E
TP: 12685 H 30000
MPEG4/HD/FTA Started

HINDI KHABAR
Added On
InSat-4A @83.0E
TP: 3805 H 28500
MPEG4/HD/FTA Started
Replace On 9X BAJAO

Medi 1 TV HD
Medi 1 TV Afrique HD
Added On
ArabSat-5A @30.5E
TP: 12520 H 6560
MPEG4/HD/FTA Started

17 June 2017

New channels update

TV & TV
Added On
HotBird-13D @13.E
TP: 11642 H 27500
MPEG2/SD/FTA Started

5 MOVIES
New Added On
Thaicom-5A @78.5E
TP: 12405 V 45000
MPEG4/HD/FTA Started

BEST TV
MAYA TV
Added On
TurkSat-4A @42.E
TP: 11975 H 27500
MPEG2/SD/FTA Started

N MUSIC
META TV
MOVIE MAX
MUSIC VOX TV
Added On
TurkSat-4A @42.E
TP: 12685 H 30000
MPEG4/HD/FTA Started

NEO SPORTS Temporary FTA Again

NEO SPORTS
IntelSat-20 @68.5E
TP: 3900 V 10370
MPEG4/HD
Temporary FTA Again

16 June 2017

டிஷ் டிவில் புதிய அலைவரிசை இணைப்பு

டிஷ் டிவில் புதிய அலைவரிசை இணைப்பு 

சாட் : SES 8 / G-Sat 15 @ 95 °E
டி.பி : 11296 வி 13020

இந்த அலைவரிசையில்
ATN பங்களா
சித்தாரா டிவி
பிபிஎஸ் 1/2
RTV பங்களாதேஷ்
 சேனல்கள் இயக்கப்படுகின்றன.

15 June 2017

BARKAT TV Added on AsiaSat.7@ 105.5

New Channel
BARKAT TV
AsiaSat.7@ 105.5°E
TP.3903 V 2960
MPEG.4/HD FTA

SONY GEMAdded OnChinaSat-10 @110.5E

SONY GEM
Added On
ChinaSat-10 @110.5E
TP: 3560 V 30000
MPEG4/HD/FTA Started


CNC HIGH MOVIES HD & HOME THEATER HD FTA Started

CNC HIGH MOVIES HD 
CNC HOME THEATER HD  CHINASAT10@110.5East
TP.4100 V 27500
MPEG4 HD FTA Started

14 June 2017

New channel update

KLIK MUSIC
Started On
Palapa-D @113.E
TP: 3600 V 31000
MPEG4/HD/FTA

MANARA TV
Started On
Badar-4 @26.0E
TP: 11976 V 27500
MPEG2/SD/FTA

New Channels
"Sun TV" (Hong Kong)
"Sahar Urdu"
Asiasat-7 (105.5°E)
TP.3760 H 26000
MPEG-2/FTA

12 June 2017

ஆங்கில செய்திச் சேனலாகிறது டிடி இந்தியா


மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் "டிடி இந்தியா' விரைவில் சர்வதேச ஆங்கில செய்திச் சேனலாகிறது. இதேபோல், "டிடி நியூஸ்' சேனல், ஹிந்தி செய்திச் சேனலாகிறது.

இதுதொடர்பாக, மத்திய அரசு வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நிதி தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சர்வதேச அளவில் முன்னணி சேனலாக வர முடியாமல் "டிடி இந்தியா' சேனல் போராடி வருகிறது. "டிடி நியூஸ்' சேனலில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மாறி மாறி செய்திகள் ஒளிபரப்பு செய்யப்படுவதால், அதன் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், இவ்விரு சேனல்களின் வடிவத்தை மாற்றுவது தொடர்பான யோசனையை பிரசார் பாரதியின் ஆலோசனைக் கூட்டத்தில் அதன் தலைவர் சூரியபிரகாஷ் முன்மொழிந்தார்.

அதையடுத்து, பலகட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு "டிடி இந்தியா' சேனலை சர்வதேச ஆங்கில செய்திச் சேனலாக மாற்றவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, "டிடி இந்தியா' சேனலில் உள்ளூர் மற்றும் சர்வதேச செய்திகளும், நிகழ்கால நடப்புகளும் ஒளிபரப்பப்படும். "டிடி நியூஸ்' சேனலில் ஹிந்தி செய்திகள் மட்டும் ஒளிபரப்பப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

8 June 2017

Ten Sports Fta now on Intelsat20@68.5E

Ten Sports channels Tem Fta now
TEN 1
TEN 2
TEN 3
TEN Sports Pak
TEN Cricket
Temporary FTA
On
Intelsat 20 @68.5East
C, band
3712 H 14454
MPEG4/HD/FTA




NEWS X Added On GSat-15 @93.5E

NEWS X
New Added On
GSat-15 @93.5E
TP: 11550 V 29500
MPEG2/SD/FTA Started
Replace On MULTIPLEX

7 June 2017

6 June 2017

ZEE TALAK ZEE SALAAM Added On IntelSat-20 @68.5E

ZEE TALAK
ZEE SALAAM
Added On
IntelSat-20 @68.5E
TP: 4165 H 7500
MPEG4/HD/FTA Started

5 June 2017

DNN Channel 29 Added On Insat 4A@83

DNN Channel 29
Added On
InSat-4A @83.0E
TP: 4055 H 13230
MPEG4/HD/FTA Started

இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி மார்க் 3

உலக அரங்கில், விண்வெளித் துறையில் தனிப் பெரும் சக்தியாக உருவெடுத்துவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், தன் அடுத்தடுத்த பாய்ச்சல்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்துவருகிறது.  அதன் ஒரு பகுதியாக, முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஜிஎஸ்எல்வி மார்க் 3  டி-1 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டா  ஏவுகணைத் தளத்திலிருந்து, இன்று மாலை 5: 28 மணிக்கு விண்ணில் செலுத்த இருக்கிறது. நேற்று மாலை 3 :58 மணிக்கு அதற்கான  கவுன்ட்-டவுண்  தொடங்கிவிட்டது. 

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட், உள்நாட்டிலேயே கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கனரக ராக்கெட் இது. 4,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறனுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்கைக்கோளின் மொத்த எடை 3,136 கிலோ ஆகும்.   ஜிசாட் 19 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்  இன்று  விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதன் வெற்றி, இந்திய விண்வெளித்துறையை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.