இன்சாட் 4எ@83 டிகிரி மற்றும் ஆப்ஸ்டார் 7 @ 76.5 டிகிரி இரண்டு சாட்லைட் சிக்னல்களையும் ஒரு எட்டு அடி டிஷ்இல் எப்படி எடுக்கலாம் என்பதை பார்போம்.
இந்த முயற்சியை மேற்கொள்ள ஒரு எட்டு அடி சி பேண்ட் டிஷ், இரண்டு சி பேண்ட் டுஅல் போல் LNB, டிஸ்க்கு சுவிட்ச் ஒன்று. இந்த டிஷ் 2.4 மீட்டர் சுற்றளவு உள்ள இருக்கும். இந்த டிஷ் இல் முதல் சாட்லைட் இன்சாட் 4பி@ 83 டிகிரி இல் மைய புள்ளியாக வைத்துக் கொள்ளுங்கள். அதனுடன் இரண்டாவது சாட்லைட் ஆப்ஸ்டார் 7@ 76.5 டிகிரி ஐ பொறுத்த முதல் LNB இன் மைய புள்ளியில் இருந்து இரண்டாவது LNB மைய புள்ளி 16 சென்டி மீட்டர் தொலைவு இருக்குமாறு அமைத்து கொள்ளவும். பின்பு இரண்டு LNB ஒயர்களையும் டிஸ்க்கு சுவிட்ச் 1 மற்றும் 2 இல் கொடுக்கவும். இதன் மூலம் இரண்டு சாட் லைட் சிக்னல்களையும் ஒரே டிஷ் இல் எடுக்க முடியும்.
எவ்வாறு இந்த சிக்னலை எடுக்கலாம் என்பதை இந்த படங்களை பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.
நன்றி : திரு.நல் அவர்களுக்கு.
No comments:
Post a Comment