3 முதல் 6 மாதங்களுக்கு இலவச ஜியோ டிடிஎச் சேவை, ரெடியா இருங்க.!
பாதி விலைக்கு பிரபல நிறுவனங்கள் வழங்கும் அதே சேவைகள். ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட், ஆறு மாதம் வரை இலவச சேவை, மாதம் ரூ.185/-க்கு சேவை, மேலும் என்னென்ன.?
நீங்கள் ஏர்டெல், டாடா ஸ்கை, வீடியோகான் போன்ற டிடிஎச் சேவைக்கு ரீசார்ஜ் செய்து செய்து அழுத்துப்போனவராக இருந்தாலும் சரி அல்லது இன்னமும் கேபிள் டிவிக்கு மாதந்தோறும் பணம் செலுத்துபவராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.ரிலையன்ஸ் ஜியோவின் தொலைத்தொடர்பு சேவைகளே அதற்கு மாபெரும் எடுத்துக்காட்டாகும். தொலைத்தொடர்பு துறையில் ஒரு விலைக்குறைப்பு புரட்சியை உண்டாக்கிய ரிலைன்ஸ் ஜியோ இப்போது அதன் டிடிஎச் சேவை விரைவில் அறிவிக்கவுள்ளது என்பதை உறுதி செய்யும் ஆதாரங்கள் வெளியாகியுள்ளது.!
அதாவது ஜியோ டிடிஎச் சேவையின் செட் டாப் பாக்ஸ் சார்ந்த முதல் பட விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த ஜியோ செட் டாப் பாக்ஸில் டிடிஎச் சேவை பட விவரங்களில் இருந்து ஜியோவின் சாத்தியமான டிடிச் சேவை வெளியீடு உறுதி செய்யப்படுகிறது.
நேற்று வரை ஜியோ டிடிச் சேவை சார்ந்த பல தகவல்கள் கிடைத்திருந்தாலும் அவைகள் வதந்திகளாகவும் யூகங்களாகவும் தான் இருந்தன ஆனால் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் புகைப்படங்கள் கிட்டத்தட்ட ஒரு அதிகாரப்பூர்வமான படமாகவே தெரிகிறது.
மும்பையில் உள்ள சில பகுதிகளில் பரிசோதனை நடவடிக்கையிலான சேவைகளை ஜியோ டிடிஎச் வழங்கி வருகிறது என்று முன்பு வெளியான தகவல்கள் கூற வேறெந்த நகரத்திலும் இந்த சேவை தொடங்கப்படவில்லை ஆனால் வரும் மாதங்களில் ஒரு சாத்தியமான வெளியீடு நிகழும் என்று வெளியான தகவல்கள் மூலம் அறியப்படுகிறது.
ஜியோ டிஜிட்டல் லைஃப் என்ற லோகோ கொண்ட ஒரு எளிய ப்ளூ பெட்டி வடிவத்தில் இருக்கும் இந்த ஜியோ செட் டாப் பாக்ஸ் ஆனது முன்பக்கம் சுத்தமாகவும் மற்றும் இடது மூலையில் போர்ட்கள் அமைந்துள்ளதையும் காட்சிப்படுத்துகிறது.
லீக்ஸ்ட்டர் என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியான இந்த புகைப்படத்தில் இருந்து அதன் பின்பகுதியில் ஆடியோ கேபிள் போர்ட்கள் மற்றும் மெயின் கேபிள் கம்பி ஆகியவைகள் இருப்பதும், யூஎஸ்பி மற்றும் ஒரு ஆர்ஜே-45 ஈதர்நெட் போர்ட் இணைந்த எச்எம்டிஐ (HDMI) போர்ட் கொண்டுள்ளதையும் காட்டுகிறது.
அதுமட்டுமின்றி சேவை நிறுவல்களுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கலாம் மற்றும் செட்-டாப் பாக்ஸ்-ற்கு மட்டும் குறைந்தபட்ச கட்டணம் இருக்கக் கூடும் என்றும் வெளியான தகவலில் அறியப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலில் எந்த விதமான ஜியோ டிடிச் திட்டங்கள் சார்ந்த விவரங்களும் வெளியாகவில்லை என்றாலும் கூட முன்பு வெளியான தகவலின் கீழ் ஜியோ டிடிஎச் சேவையானது தோராயமாக மாதம் ரூ.185/- என்பதை விட குறைவாகத் தான் இருக்கும்.
குறிப்பாக, மற்ற டிடிஎச் சேவைகள் ரூ.275/-ல் முதல் ரூ.300/- வரையிலாக திட்டங்களை வழங்கி கொண்டிருக்கும் போது ரூ.185/- என்பது மிகவும் குறைவான விலையாகும். இருப்பினும் சரியான விலையயை ஜியோதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஜியோ சேவையில் அப்படி இருக்காது, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒரு வார காலம் வரை பதிவு செய்யும் திறனை ஜியோ டிடிஎச் சேவை வழங்கும் என்றும் முன்னர் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ டிடிச் சேவை எப்போது வெளியாகும் என்பதில் மட்டும் தான் சந்தேகம் உள்ளதே தவிர டிஜிட்டல் டிவி துறையை தற்போதைக்கு ஆளும் டாடா ஸ்கை மற்றும் டிஷ் டிவி போன்ற முன்னணி நிறுவனங்களை ஜியோவின் மிக மலிவான கடனஸ் சேவை பின்னுக்குதள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதாவது ஜியோ டாப் பாக்ஸ் சேவை தொடங்கினால் உறுதியாகக் டிடிச் கட்டண சேவைகளின் விலை 50% குறையும். ஆக அடுத்த விலைக்குறைப்பு போட்டிக்கு ரெடியாக இருங்க.!
No comments:
Post a Comment