விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில்புதிய தொலைக்காட்சி துவக்க தேவையான
நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாக கூறப்படுகின்றது.
கடந்த சில வருடங்களில் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சிகளில் ஒன்றாகவும்,
குறிப்பாக தலித் மக்களிடையே மிகவும்பிரபலம் அடைந்து வரும் கட்சிகளில்
விடுதலை சிறுத்தைகளில் முன்னணியில் உள்ளது.
மேலும், ஈழத் தமிழர்களுக்கு துணிந்து குரல் கொடுக்கும் அமைப்பாகவும்
விடுதலை சிறுத்தைகள் இயங்கிவருவதால் தமிழ் ஆர்வலர்கள் மற்றும்உலகத்
தமிழர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், தங்களுக்கு என தனியாக ஒரு தொலைக்காட்சி தேவைஎன விடுதலை
சிறுத்தைகள் கட்சியில் குரல்கள்ஓங்கி ஓலித்து வருகின்றது.
திமுக-வுக்கு கலைஞர் டிவி, அதிமுகவிற்கு ஜெயா டிவி, பாமகவுக்கு மக்கள்
டிவி, காங்கிரஸ் புகழ் பாட வசந்த் டிவி, மற்றும் மெகா டிவி , மதிமுகவுக்கு
இமயம்டிவி,தேமுதிகவுக்கு கேப்டன் டிவி என கட்சிக்கு ஒரு டி.வி.உள்ளது.
கடந்த காலங்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சி செய்திகளுக்கு
விண்தொலைக்காட்சியும்,தற்போது தமிழன் தொலைக்காட்சியும் மிக
முக்கியத்துவம்கொடுத்து ஒளிபரப்பி வருகின்றது.
தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யாக
உள்ளதால்,தொலைக்காட்சி துவங்க லைசென்ஸ் பெறுவதில் அதிக சிக்கல் இருக்காது
என்பதால், அதற்கான பணிகள் விரைவு பெற்று வருவதாக கூறப்படுகின்றது.
உலகத் தமிழர்களை கவர வேண்டும் என்பதால் தூய தமிழ்ப் பெயரை திருமாவளவன் தேடி
வருகின்றாராம்.
நாடாளுமன்ற தேர்தல்வரும் முன்பு தொலைக்காட்சியை துவங்கி விட வேண்டும் என
முற்சி செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தில்
கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment