
சென்னையில்
மெட்ரோ சேனலாக ஒளிபரப்பாகிவந்த என்.டி.டிவி – இந்து தொலைக்காட்சி இனி
தமிழ்நாடு முழுவதும் ஒளிபரப்பாகும் என்று அந்த தொலைக்காட்சியின்
நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
என்.டி.டி.வி. இந்து சேனல் இதுவரை சென்னையில் மட்டுமேஒளிபரப்பாகி
வந்தது.இப்போது அரசு கேபிள், எஸ்.சி.வி. கேபிள் மற்றும் டி.டி.எச். மூலமாக
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் என்.டி.டி.வி. இந்து சேனலை பார்க்கும்
வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இதுவரை
ஆங்கிலத்தில் ஒளிபரப்பாகி வந்த இந்த சேனல், இப்போதுதமிழிலும்
செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.
தமிழ் செய்திகள் காலை 7.30 மணிக்கு தொடங்கி, 8.30, 9.30, முற்பகல் 11 மணி,
மதியம் 12 மணி, 1.30, பிற்பகல் 3 மணி, மாலை 6.30, இரவு 7.30,8.30 ஆகிய
நேரங்களில் ஒளிபரப்பாகின்றன. என்.டி.டி.வி இந்து தொலைக்காட்சியில் செய்தி
தவிர பல சுவாரசிய நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில்
`கோடம்பாக்கம் அக்கம்பக்கம்' நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. இதில்
தமிழ்த்திரை உலகின்படவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள்மற்றும் திரை பிரபலங்கள்
பற்றி இந்த நிகழ்ச்சியில்ரசிக்கலாம். ரேவதி ஞானமுருகன் தொகுத்து
வழங்குகிறார்.
No comments:
Post a Comment