Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

19 January 2020

பழைய இன்சாட் 4-ஏ-வுக்குப் பதிலியாக ஐ.எஸ்.ஆர்.ஓ.-வின்  ‘ஜிசாட்-30’ செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது


இந்தியாவின் 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், வெள்ளிக்கிழமை, ஜனவரி 17ம் தேதி அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தென் அமெரிக்காவில், பிரெஞ்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும். இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.

ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவர் கே.சிவன் கூறும்போது, “இந்தியாவுக்கும் தீவுகளுக்கும் கியூ பேண்ட் மூலமும் வளைகுடா நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் சி பேண்டு மூலமும் தொடர்புச் சேவைகளை வழங்கும்” என்றார்.

ஜிசாட் -30 மிகவும் கனமானது என்பதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அயல்நாட்டு லாஞ்சரைப் பயன்படுத்தியது. இது 4,000 கிலோ எடைவரை தூக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No comments: