JINVANI TV
CHANNEL WIN
NEWS 11 BHARAT
On
InSat-4B @83.0E
TP: 3805 H 28500
MPEG4/HD/FTA Started
POWER TV
On
GSat-15 @93.5E
TP: 4085 V 30000 (C)
MPEG4/HD/FTA Started
Replace On LOK SHAHI
கட்டணமில்லா தொலைக்காட்சிகளை எப்படி பார்க்கலாம் என்பதை பற்றி தகவல்கள் கொடுப்பதற்காக தொடங்கப்பட்டது. சட்டத்திற்கு புறம்பான தொலைக்காட்சி செய்திகள் பற்றி எங்கும் பதிவிடப்படாது. இலவச சேனல்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே இடம்பெறும்.
JINVANI TV
CHANNEL WIN
NEWS 11 BHARAT
On
InSat-4B @83.0E
TP: 3805 H 28500
MPEG4/HD/FTA Started
POWER TV
On
GSat-15 @93.5E
TP: 4085 V 30000 (C)
MPEG4/HD/FTA Started
Replace On LOK SHAHI
COMEDY ACTIVE
SONY BBC EARTH
On
NSS-6 @95.0E
On DISH TV INDIA
TP: 12402 H 43000
MPEG2/SD/CONAX
Start On New Frequency
COMEDY CENTRAL
On
NSS-6 @95.0E
On DISH TV INDIA
TP: 12464 H 43000
MPEG2/SD/CONAX
Start On New Frequency
EVERGREEN CLASSIC ACTIVE
On
NSS-6 @95.0E
On DISH TV INDIA
TP: 12646 H 30000
MPEG2/SD/CONAX
Start On New Frequency
தமிழ் செய்தி தொலைக்காட்சி களில் ஒன்றான நியூஸ் ஜே சேனல் தற்பொழுது சன் டைரக்ட் டிடிஎச்சில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த சேனலை காண இதற்கு தனியாக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.இது ஒரு இலவச சேனல் FTA பேக்கில் வரும்.
நியூஸ் ஜே சேனலின் அலைவரிசை எண்:
சேனல் பெயர்: நியூஸ் ஜே
டி.டி.எச்: சன் டைரக்ட்
Freq : 12437
P : H
SR : 32000
வீடியோ பிஐடி: 110
ஆடியோ பிஐடி: MPEG PID 80
சர்வீஸ் ஐடி: 271
இந்தியாவின் 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், வெள்ளிக்கிழமை, ஜனவரி 17ம் தேதி அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
தென் அமெரிக்காவில், பிரெஞ்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும். இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.
ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐ.எஸ்.ஆர்.ஓ. தலைவர் கே.சிவன் கூறும்போது, “இந்தியாவுக்கும் தீவுகளுக்கும் கியூ பேண்ட் மூலமும் வளைகுடா நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் சி பேண்டு மூலமும் தொடர்புச் சேவைகளை வழங்கும்” என்றார்.
ஜிசாட் -30 மிகவும் கனமானது என்பதால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அயல்நாட்டு லாஞ்சரைப் பயன்படுத்தியது. இது 4,000 கிலோ எடைவரை தூக்கும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) இன்று ஒரு இன்ப செய்தியை வெளியிட்டுள்ளது. கட்டண சேனல்களின் அதிகபட்ச கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட ரூ .19 இனி ரூ .12 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இனிமேல், ரூ .12 அல்லது அதற்கும் குறைவான தொகைதான், கட்டண சேனல்களுக்கு வசூலிக்க வேண்டும். "முன்னதாக ரூ .19 உச்சவரம்பாக இருந்தது, ஆனால் இப்போது ரூ .12 க்கும் குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்க வேண்டும்" என்று டிராய் தலைவர் ஆர்.எஸ். சர்மா இன்று கூறினார்.
"ரூ .130 க்கு 100 சேனல்கள் வழங்கப்பட்டன, அதில் பிரசார் பாரதி ஒளிபரப்பிய கட்டாய சேனல்களும் அடங்கும். இப்போது பிரசார் பாரதி சேனல்களைத் தவிர ரூ. 130 கட்டணத்தில், 200 சேனல்கள் ஒளிபரப்பாக வேண்டும் என விதிமுறை மாற்றப்பட்டுள்ளது" என்று டிராய் தலைவர் மேலும் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு இப்போது சன் டிவிக்கு 19 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஸ்டார் ஸ்போர்ட்சுக்கும் அவ்வாறே. இனி அவர்கள் ரூ.12 வரைதான், நிர்ணயிக்க முடியும். இதன் மூலம், ஒட்டுமொத்தமாக, டிடிஎச் கட்டணம் குறையும் வாய்ப்புள்ளது.
அதேநேரம், சில குழுமங்கள், தங்களிடமுள்ள பிற சேனல்களின் கட்டணங்களை இப்போதுள்ளதைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த இழப்பை அவர்கள், அதில் ஈடுகட்ட முயலக்கூடும். உதாரணத்திற்கு இப்போது ரூ.6 என்ற விலையில் வழங்கப்படும் தங்கள் சேனலின் கட்டணத்தை அவர்கள் ரூ.10 ஆக அதிகரிக்க கூடும்.
முன்பு ஒட்டுமொத்தமாக டிடிஎச்சுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், பல மாதங்கள் முன்பு, டிராய் தனது உத்தரவில், ஒவ்வொரு சேனலும் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதன்பிறகு கட்டணங்கள் அதிகரித்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.