ஸ்ரீஹரிகோட்டா: இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி'.- எப்11 ராக்கெட் புதன்கிழமை மாலை ஏவப்பட உள்ளது. அதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளின் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.. ஜிசாட் 7ஏ செயற்கைகோளானது இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment