Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

4 December 2018

விண்ணில் ஏவப்படுகிறது 'ஜி சாட்-11' செயற்கை கோள்


அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜி சாட் - 11 செயற்கை கோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜி சாட்-11 என்ற செயற்கை கோளை 'இஸ்ரோ' வடிவமைத்துள்ளது. பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து 'ஏரைன் - 5' என்ற ராக்கெட் மூலம் 'ஜி சாட்-11' செயற்கைகோள் நாளை ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2 மணி அளவில் விண்ணுக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த செயற்கைகோள் 74 டிகிரி கிழக்கில் நிலை நிறுத்தப்படும். இது இந்தியா மற்றும்  இந்தியாவிற்க்கு அருகாமையில் உள்ள தீவுகளில்  தகவல் தொடர்புக்கு சேவைக்காக  வடிவமைக்கப்பட்டுள்ளது. 16 Gbps இணைய சேவையை இந்தியா முழுவதும்  வழங்கும் திறன் கொண்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 4 ஆயிரம் கிலோ எடை வரையிலான செயற்கை கோள்களை மட்டும் அனுப்ப முடியும் என்பதால் பிரான்சில் இருந்து இந்த செயற்கை கோள் அனுப்பப்படுகிறது. 5 ஆயிரத்து 894 கிலோ எடை கொண்ட இந்த செயற்கை கோளை, 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 'இஸ்ரோ' தயாரித்துள்ளது. 
செயற்கைகோள்:  GSAT11
செலவு: 500 கோடி
எடை: 5,854 கிலோ
சுற்றுப்பாதை: ஜியோஸ்டேஷனரி
ராக்கெட்: ஏரியன் -5 VA246
வாழ்நாள்: 15 ஆண்டுகள்
ஏவு தளம்: கயானா ஸ்பேஸ் சென்டர்
டிரான்ஸ்பாண்டர்ஸ் : 40 Ku / ka பேண்ட்

No comments: