இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி - எஃப்08 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியுள்ளது.
இன்று (வியாழக்கிழமை) மாலை 04.56 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக ஜிசாட்-6ஏ என்ற செயற்கோளை புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
ஜிஎஸ்எல்வி - எஃப்08 ராக்கெட் பயணம் குறித்த ஐந்து சுவாரஸ்ய தகவல்கள்
ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் 12வது விண்வெளி பயணம் இது. உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் பயன்படுத்தப்பட்ட ஆறாவது விமானப்பயணமாகும்.
ஜிஎஸ்எல்வி சுமந்து சென்ற ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இதற்குமுன்பு அனுப்பப்பட்ட ஜிசாட்-6 வகையை போன்றது.
அதிக திறன் கொண்ட எஸ்-பேண்ட் தகவல்தொடர்பு செயற்கைகோள்தான் ஜிசாட்-6.
ஜிசாட்-6ஏ விண்வெளியில் செயல்படும் காலஅளவு சுமார் 10 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது.
செயற்கைகோள் சார்ந்த மொபைல் தொடர்பு பயன்பாடுகளுக்கு பயனுள்ள வகையில் வலைபின்னல் அமைப்பு மேலாண் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இச்செயற்கைகோள் உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட்டின் நீளம் 49.1 மீட்டர், எடை 415.6 டன்.
No comments:
Post a Comment