Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

26 October 2017

டிடிஎச் சேவையை இழுத்து மூடுகிறார் அனில் ஆம்பானி


மும்பை: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கயூனிகேஷன்ஸ் வருகின்ற நவம்பர் 18ம் தேதி முழுமையாக டிடிஎச் சேவையினை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. டிடிஎச் சேவைக்கான உரிமம் முடியப்போவதாகவும் மேலும் சேவையினைத் தொடர்ந்து அளிக்க முடியவில்லை என்பதாலும் ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவை நிறுவனத்தினை மூடப்போகின்றது என்ற செய்தியினையும் நிர்வாக உறுதி செய்துள்ளது. 

 சந்தை நிலவரம் :
ஆர்காம் நிறுவனத்தின் கீழ் 2 சதவீத டிடிஎச் சந்தை மட்டுமே உள்ளது. டிஷ் டிவி நிறுவனத்திடம் 24 சதவீத சந்தையும், டாடா ஸ்கை நிறுவனத்திடம் 23 சதவீதமும் அதிகபட்சமாக உள்ளது. 

வாடிக்கையாளர்கள் நிலை :
டிடிஎச் சேவை வழங்குவதில் இருந்து விலகுவதால் தங்களது வாடிக்கையாளர்களைப் பிற சேவை வழங்குனருக்கு மாறக் கோரிக்கை வைத்து வருகிறது ஆர்காம். அதுமட்டும் இல்லாமல் மூன்று முக்கிய டிடிஎச் நிறுவனத்திடம் தங்களது வாடிக்கையாளர்களை மைகிரேட் செய்யவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. 

ஊழியர்கள் :
ஆர்காம் நிறுவனத்திற்குச் சிக்கல் இதோடு முடியவில்லை. வருவாய்ச் சரிந்துகொண்டு வந்ததால் 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 800 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது. 

சன் டிடிஎச் :
2013-ம் ஆண்டுச் சன் டிடிஎச் நிறுவனத்துடன் தனது சேவையினை இணைக்க ஆர்காம் முடிவு செய்தது, ஆனால் மதிப்பீட்டில் இருந்து வித்தியாசத்தால் அது சாத்தியம் இல்லாமல் போனது.  

 அன்மையில் ஆர்காம் நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி செய்து ஏர்செல் நிறுவனத்துடன் இணைய எடுக்கப்பட்ட முடிவுகள் சட்ட சிக்கலால் முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது. 

No comments: