Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

4 September 2017

வானாெலி


வானொலி (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்களைக்கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும். மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான் வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி(அ) ரேடியோ என்பர். இந்த மின்காந்த அலைகள் கண்களால் காணக்கூடிய ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்ணைக் கொண்ட மின்காந்த அலைகளைக் கொண்டு இயங்குகிறது. 



ஒலி அலைகளுடன் மின்காந்த அலைகளைக் கலந்து வானொலி நிலையங்களிலிருக்கும் மிக உயரமான கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனுப்பும் கருவிகள் மூலம் வான்வெளியில் மின்காந்த அலைகளாக ஒலிபரப்பப்படுகின்றது. இப்படி ஒலிபரப்பப்பட்ட மின்காந்த அலைகளை பயனர்கள் தங்களிடம் உள்ள ஒலி வாங்கிகள் எனப்படும் வானொலிப் பெட்டியின் மூலம் கேட்டு மகிழ்கிறார்கள். வானொலிப் பெட்டிகள், வானொலி நிலையங்களில் ஒலிபரப்பப்பட்ட மின் காந்த அலைகளை உள்வாங்கி, அதனூடே கலந்திருக்கும், ஒலி அலைகளை மட்டும் பிரித்தெடுத்து சத்த ஒலிபெருக்கி ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

No comments: