மின்னல் எப். எம். (Minnal FM) என்பது மலேசிய அரசாங்கத்தின் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆகும். அதன் பழைய பெயர் வானொலி 6 (Radio 6). உலகிலேயே 24 மணி நேர முதல் தமிழ் ஒலிபரப்புச் சேவையைத் தொடங்கிய பெருமையும் இதற்கு உண்டு.
ஒலிபரப்புப் பகுதி
மலேசியா
சிங்கப்பூர்
இந்தோனேசியா
தாய்லாந்து
சிலி
பொலிவியா
வெனிசுவேலா
வணிகப்பெயர்மலேசிய ஒலி,
ஒளிபரப்புச் சேவை
அதிர்வெண்கோலாலம்பூர் 92.3
குவாந்தான் 103.3
ஈப்போ, சித்தியவான்98.9
மலாக்கா, கிழக்கு பகாங் 103.3
ஜொகூர், சிங்கப்பூர்101.1
தென்பேராக், சிலாங்கூர் 96.3
தாய்லாந்து 96.7
தாப்பா 96.3
தைப்பிங், வடபேராக், கோலாகங்சார் 107.9
நெகிரி செம்பிலான்90.5
1938 முதல் ஒலிபரப்பு வானொலி முறைதிரைப் பாடல்கள், உலகச் செய்திகள், அறிவிப்புகள், நாட்டு நடப்புஉரிமையாளர்மலேசிய அரசாங்கம்இணையதளம் மின்னல் எப்.எம். இணையத்தளம்
மலேசிய இந்தியர்களுக்காக இந்தச் சேவை தொடங்கப் பட்டது. மின்னல் எப்.எம் ஒலிபரப்பு கோலாலம்பூரில் உள்ள அங்காசாபுரி தலைமையகத்தில் இருந்து 92.3 / 96.3 அலைவரிசைகளில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது.
ஈப்போவில் இருந்து 98.9 அலைவரிசையில் ஒலிபரப்பு செய்யப் படுகிறது. இப்போது திரு குமரன் என்பவர் அதன் தலைவராகப் பணிபுரிகின்றார். அதற்கு முன்னர், 2013 டிசம்பர் 31-ஆம் தேதி வரை பி.பார்த்தசாரதி தலைவராகச் சேவை செய்து வந்தார்.
1930 – 1940-ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து, கஞ்சிக்கூலிகளாக அழைத்து வரப் பட்ட தமிழர்களின் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இப்போது ஐந்தாம் தலைமுறையினரின் தகவல் ஊடகமாக நீடித்து வருகின்றது.
No comments:
Post a Comment