Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

25 January 2019

6 அடி சி பேண்ட் டிஷ் வைத்து இருந்தால்  நீங்கள் 40 தமிழ் சேனல்கள் பார்க்கலாம்!!!!

6 அடி சி பேண்ட் டிஷ் வைத்து இருந்தால்  நீங்க  இன்டெல் சாட் 17 செயற்கைக்கோளில் வைத்து 40 தமிழ் சேனல்கள் பார்க்கலாம். என்கிட்ட பழைய 6 அடி டிஷ் இருக்கு  முன்பு சிக்னல் கிடைத்தது இப்பதான் சிக்னல் கிடைக்கறது இல்ல  ரொம்ப நாளா யூஸ் பண்ணிட்டு இருந்தேன் அப்படின்னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க.  அதுக்கு காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா அலைவரிசை மாற்றம்  அதிர்வெண் குறைவு இதன் காரணமாக தான் இப்ப சிக்னல் கிடைக்காத நிலையில் உள்ளது. சிக்னல் கிடைக்க என்ன பண்றது எப்படின்னு உங்களுக்கு சொல்லுகிறேன்.  உங்களுடைய டிஷ் அளவு மேலும் ஓர் அடி கூட்டிக் கொண்டால் சிக்னலை எளிமையாக கிடைக்கும்.
எல்லா பக்கத்திலும் ஒரு அடிக்கு ஒரு தகர சீட்டு வாங்கி நீங்களே  பொருத்திக் கொள்ளலாம்.   இப்படி எல்லா பக்கத்திலும் ஒரு அடி  தகரம் பொருத்தினால் உங்களுடைய டிஷ் அளவு  ஆறு அடியிலிருந்து 8 அடி என்ற நிலையில் இருக்கும். அப்படி பொருத்திவிட்டால்  உங்களுக்கு சிக்னல் எளிமையாக கிடைக்கும்   40க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்கள் பார்க்கலாம். இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவு நீங்க தகரம் மட்டும் வாங்கினால் போதும் வேற எந்த செலவும் உங்களுக்கு இல்லை.

ஒரு சில படங்கள் உங்கள் பார்வைக்கு இந்த படத்தில் உள்ளது போல நீங்களும் முயற்சி செய்தால் நீங்களும் 40 தமிழ் சேனல்களை பார்க்கலாம் இலவசமாக

மேலும் ஏதேனும் உதவிக்கு அழைக்கவும்
8124959706 (வாட்ஸ்அப் எண்)
9500770188



22 January 2019

40 தமிழ் தொலைக்காட்சி சேனல்களை இலவசமாக பார்க்க வேண்டுமா !!!!

நீங்கள் 40க்கு மேற்பட்ட தமிழ் தொலைக்காட்சி சேனல்களை எந்தவித கட்டணமும் இன்றி  பார்க்கலாம். இதற்கு உங்களிடம் சி பேண்ட் டிஷ் வைத்திருக்க வேண்டும். சி பேண்ட் டிஷ் இன் அளவு 8 ஆடி முதல் 12 வரை அடி வரை பயன்படுத்தலாம். புதிய டிஷ் வாங்கும் போது அதற்கு உண்டான செலவுகள் மிகவும் அதிகமாக இருக்கும். புதிதாக சி பேண்ட் டிஷ் வாங்க விரும்புபவர்களுக்கு செலவு ரூபாய் 7000 ஆயிரம் முதல் இது 12000 ஆயிரம் வரை ஆகும். இதனை தவிர்க்க பழைய சி பேண்டு டிஷ் இருந்தால் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் அருகாமையில் உள்ள ஊர்களில் பழைய சி பேண்டு டிஷ் ஏதேனும் கிடைத்தால் அதனை நீங்கள் குறைந்த தொகைக்கு 1000 முதல் 4000 ரூபாய் வரை வாங்கி பயன்படுத்தலாம். அதிகபட்சமாக தமிழில் மட்டுமே 40க்கும் மேற்பட்ட சேனல்களை நீங்கள் கட்டணமின்றி பார்த்து ரசிக்கலாம்.
ரிசிவர் (செட்டப் பாக்ஸ்) - 1000 ரூபாய் முதல் கிடைக்கும்.
எல். என். பி - 400 ரூபாய்
மேலும் விபரங்களுக்கு:  8124959706
9500770188
செயற்கைக்கோள்:  இன்டெல் சாட் 17@66 டிகிரி கோணம் கிழக்கு
தொழில் நுட்பம் : MPEG4 / DVB S2
இலவச சேனல்களின் விபரங்கள்
1.கலைஞர் டிவி
2.கலைஞர் இசையருவி
3.கலைஞர் முரசு
4.கலைஞர் செய்திகள்
5.கலைஞர் சிாிப்பொலி
6.கலைஞர் சித்திரம்
7.பாலிமர் டிவி
8.பாலிமர் செய்திகள்
9.நீயூஸ்7 தமிழ்
10.ஏஜ்ஜல் டிவி ஹெச்டி
11.கேப்டன் டிவி
12.கேப்டன் செய்திகள்
13.புதியதலைமுறை செய்திகள்
14.புதுயுகம் டிவி
15.சத்தியம் செய்திகள்
16.எம்கே தொலைக்காட்சி
17.எம்கே டியூன்ஸ்
18.எம்கே சிக்ஸ்
19.வேந்தர் டிவி
20.மக்கள் தொலைக்காட்சி
21.தீரன் டிவி
22.7S மீயூசிக்
23. வின் டிவி
24. மூண் டிவி
25. சாப்பிங் ஜீன் டிவி
26. ஸ்ரீ சங்கரா டிவி
27. வசந்த் டிவி
28. தமிழன் தொலைக்காட்சி
29. இமயம் டிவி
30. மதிமுகம் டிவி
31. தந்தி டிவி செய்திகள்
32. மீனாட்சி டிவி
33. பெப்பர் டிவி
34. மாலை முரசு செய்திகள்
35. சஹானா டிவி மியூசிக்
36. மாதா டிவி
37. சாய்ராம் டிவி
38. நம்பிக்கை டிவி
39. சாய் டிவி
40. மீயூசிக் ஜின்
41. டியூன்6 மியூசிக்
42. வெளிச்சம் டிவி
43.நியூஸ் ஜெ செய்திகள்

18 January 2019

New channel update

YOUR TIME TV HD
On
Express-AM6 @53.0E
FREQ: 12594 V 27500
MPEG4/HD/FTA StartedSyria Drama 24
Syria Sports TV
Syria Alikhbaria
Syria Satellite TV
Syria Educational TV
On
EutelSat-70B @70.5E
FREQ: 12548 V 7500
MPEG2/SD/FTA Started

CINE BANGLE
On
Apstar-7 @76.5E
FREQ: 3800 H 4280
MPEG4/HD/FTA Started

SUN RTV
On
TurkSat-4A @42.0E
FREQ: 11824 V 8000
MPEG2/SD/FTA Started

YOUR TIME TV HD
On
Express-AM6 @53.0E
FREQ: 12594 V 27500
MPEG4/HD/FTA Started

SHOUF TV
ALAQAR TV
BADRSAT4@26.E
TP.12034 H 27500
MPEG2
FTA Started

9 January 2019

சாலிட் இன் புதிய அறிமுகம் (DVB S2/T2/C - 6600) கோம்போ செட்டாப் பாக்ஸ்

சாலிட் இன் புதிய அறிமுகம் 6600 கோம்போ செட்டாப் பாக்ஸ் இந்த செட்டாப் பாக்ஸ் ஐ பயன்படுத்தி நீங்கள் செயற்கை கோள்கள் சிக்னல்(DVB-S2) மேலும் பழைய முறையில் நாம் பயன்படுத்தி வந்த பட்டர்பிளை ஆண்டனா(DVB -T2)  சிக்னல்கள் மற்றும் கேபிள் (DVB - C) சிக்னல்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சாலிட் 6600 வடிவமைக்கப்பட்டுள்ளது. Youtube பார்க்கும் வசதி உள்ளது.








4 January 2019

மகளிர் மட்டும் புதிய தமிழ் சேனல் சோதனை ஒளிபரப்பு தொடக்கம்

மகளிர் மட்டும் புதிய தமிழ் சேனல் சோதனை ஒளிபரப்பு தொடக்கம்.  இண்டெல் சாட் 20@68.5 கிழக்கு மற்றும் GSAT-17 @ 93.5 கிழக்கில் தொடக்கம்.
ஒரே நேரத்தில் இரண்டு செயற்க்கைகோளில் துவக்கம்.  VIP
நியுஸ் என்ற பெயரில் வருகின்றது.




இண்டெல் சாட் 20 @68.5 கிழக்கு
சி பேண்டு
அலைவரிசை எண் 3868 V 14400
MPEG 4
FTA
GSAT-17 @ 93.5 கிழக்கில்
சி பேண்டு
அலைவரிசை எண் : 4085 V 30000
MPEG 4
FTA

28 December 2018

விருப்ப சேனல்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் புதிய உத்தரவு - கெடு நீட்டிப்பு

விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்'யின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்க கேபிள் ஆப்ரேட்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    


விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற டிராய்-யின் புதிய உத்தரவு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 30-ம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18-ம் தேதி டிராய் அறிவிப்பாணை வெளியிட்டது.

சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட் டாப் பாக்ஸ்-க்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் டிராய்'யின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிசம்பர் 30-ம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பாக ஜனவரி 31-ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் டிராய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

20 December 2018

New TP Added At Bongabandhu-1@119.1E

Running 25 Channels FTA

TP: 10805 V 30000
>BTV National TV
>BTV World TV
>BTV Sangsad TV
>Channel 9 TV
>Independent TV
>Asian TV
>Ekushey TV
>Maasranga TV
>ATN Bangla TV
>ATN News TV
>Boishakhi TV
>Channel 24 TV
>Desh TV
>Mohona TV
>SA TV
>Banglavision TV
>Channel I TV
>Deepto TV
>Ekattor TV
>Gaanbangla TV
>RTV
>Jamuna TV
>My TV
>NTV
>Somoy TV

19 December 2018

ராணுவப் பயன்பாட்டுக்கு அதிநவீன ஜிசாட் - 7ஏ. இன்று விண்ணில் பாய்கிறது.

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய எல்லைப் பகுதிகளில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்துவது உள்ளிட்ட ராணுவப் பயன்பாட்டுக்கான அதிநவீன ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளுடன் 'ஜி.எஸ்.எல்.வி'.- எப்11 ராக்கெட் புதன்கிழமை மாலை ஏவப்பட உள்ளது. அதற்கான கவுண்ட்டவுன் இன்று தொடங்குகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஜிசாட்- 7ஏ என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. ஜிசாட் - 7ஏ செயற்கைக் கோளின் மொத்த எடை 2 ஆயிரத்து 250 கிலோ ஆகும்.. ஜிசாட் 7ஏ செயற்கைகோளானது இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும். விமானப்படைக்கு தேவையான தகவல்களை இந்த செயற்கைகோள் மூலம் பெற முடியும்.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து புதன்கிழமை மாலை 4.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

17 December 2018

கேபிள் டிவி, டிடிஎச் வாடிக்கையாளர்களே உஷார்: ஜனவரி 1 முதல் உங்கள் பட்ஜெட் அதிகரிக்கும் அபாயம்!

டிராய் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சிகளைப் பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

டிராய்க் கொண்டு வந்துள்ள புதிய முடிவினால் இனி நாடு முழுவதும் செட் ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கவே முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் சென்ற வாரம் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்துள்ளது.

கேபிள் நெட்வொர்க்களில் 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட இணைப்புகள் செட்-ஆப் பாக்ஸ் இணைப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. கேபிள் டிவி இல்லாமல் ஐபி டிவி, டிடிஎச், ஓடிடி மூலமாகவும் வாடிக்கையாளர்கள் தொலைக்காட்சிகளைப் பார்த்து வருகின்றனர்.

இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனலகளை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள். புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம்

இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை இங்கு பார்ப்போம்.

திட்டம் 1: 1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க ரூ. 130 + 18% ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

திட்டம் 2: 101 முதல் 125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150+ 18% ஜிஎஸ்டி என 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

திட்டம் 3: 126 முதல் 150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 + 18% ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

திட்டம் 4: 151 முதல் 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 + 18% ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

திட்டம் 5: 176 முதல் 200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 + 18% ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.

மேலே பார்த்த திட்டங்கள் இலவச சேனல்களுக்கு மட்டுமே. சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.

கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் + 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

உதாரணத்திற்கு அடிப்படை திட்டம் 1-ஐ நீங்கள் தேர்வு செய்து இருந்தால் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் மற்றும் சன் செய்தி உள்ளிட்ட 4 சேனல் மட்டும் பார்க்க விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

சன் டிவி = ரூ.19 + விஜய் டிவி = ரூ.17 + ஜீ தமிழ் = ரூ.7+ சன் செய்தி ரூ.1 + அடிப்படை திட்ட கட்டணம் ரூ.130 + 18% ஜிஎஸ்டி என 205.50 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். கேபிள் டிவி என்றால் மாவட்டம் வாரியாக மாறும்.

செட்-ஆப் பாக்ஸ் இல்லாமல் கேபிள் டிவி சேவை பெற்று வந்தவர்கள் 2019 ஜனவரி 1-ம் தேதிக்குள் அதை வாங்குவது நல்லது.

மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.

இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும்,  வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

New channel update

New Channel
ZOOM TV
MeaSat-3A (91.5°E)
TP.12720 V 32700
MPEG-4/FTA

KADIRGA TV
TURKSAT4A@42East
TP.12685 V 30000
MPEG4 HD FTA Started