3ஜி சேவையை நிறுத்தியது ஏர்டெல்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!
இதுநாள் வரை 3ஜி சேவையை வழங்கி வந்த ஏர்டெல் நிறுவனம் தற்போது, 3ஜி சேவையை நிறுத்தியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.முதன் முதலில் கொல்கத்தாவில் மட்டும் 3ஜி சேவையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது ஏர்டெல்.
ஜியோ நிறுவனம் முதல் இடத்தில் உள்ளது. இதற்குப் போட்டியாக பி.எஸ்.என்.எல், ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்து உள்ளன. இவற்றில் பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கில் 4ஜி சேவை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
ஏர்டெல் 3ஜியை நிறுவனம் நிறுத்தியது:
தற்போது கொல்கத்தாவில் வழங்கி வந்த 3ஜி சேவையை அடியோடு முடக்கியுள்ளது. முதல்கட்டமாக நிறுத்தியுள்ளது பிறகு மற்ற பகுதிகளிலும் சேவையை நிறுத்த இருக்கின்றது.
தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது 3ஜி சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. 3ஜி சேவைக்கு வழங்கப்படும் 900 MHz அலைக்கற்றையை அப்படியே 4ஜிக்கு பலப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட உள்ளது.
2ஜி சேவை வழங்குப்படும்:
கொல்கத்தாவில் 3ஜி மட்டும் தான் நிறுத்தப்படுகிறது. 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்டும். 3ஜி சேவையை நிறுத்தப்படுவதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என ஏர்டெல் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி ரந்தீப் கூறியுள்ளார்.
4ஜியை ஊக்குவிக்க முயற்சி:
3ஜிக்கு செலவிடப்படும் 900 MHz-ஐ 4ஜிக்கு பயன்படுத்தி, 4ஜியை பலப்படுத்த முடியும். மேலும், 3ஜி வாடிக்கையாளர்கள் குறைவாகவே உள்ளனர். அவர் அப்படியே 4ஜிக்கு மாறிவிடுவார்கள். மேலும், பெரும்பாலான மக்கள் இன்னமும் பேசிக் மாடல் மொபைல் போன்களையே பயன்படுத்துகின்றனர். எனவே, 2ஜி சேவை தொடர்ந்து வழங்கப்படும். அதில் எந்தவித தங்குதடையும் இருக்காது என்று ரந்தீப் தெரிவித்துள்ளார்.
விரைவில் 4ஜி மாற்றுகின்றது:
ஜியோவின் வருகையால் ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வருவாயை இழந்து வருகிறது. 3ஜிக்கு செலவிடும் தொகையை 4ஜியை மேம்படுத்த முடிவு செய்கின்றது. தற்போது 35 ரூபாய் கட்டாய ரீசார்ஜ் என்ற நிபந்தனையின் காரணமாக ஏர்டெல் ஒரளவு வருவாயை தக்க வைத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் நெட்வொர்க்கை பொறுத்தவரையில் விரைவில் 4ஜி சேவை முழுமையாக கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment