Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

1 April 2019

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி - சி45

ராணுவப் பயன்பாட்டுக்கான எமிசாட் செயற்கைக் கோள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 28 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி-45 ராக்கெட் காலை 9.27 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதற்கான 27 மணி 3 நிமிடம் கொண்ட கவுண்ட்டவுன் நேற்று காலை 6.27 மணிக்கு தொடங்கியது. 

இந்த ராக்கெட் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புவியின் சுற்றுவட்டப் பாதையில் 3 வெவ்வேறு படிநிலைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். ராணுவப் பயன்பாட்டுக்கான எமிசாட் செயற்கைக் கோள் புவிவட்டப் பாதையில் 749 கி.மீல் நிலைநிறுத்தப்படடது. கண்காணிப்புப் பணிக்குப் பயன்படும் எமிசாட் 436 கிலோ எடை கொண்டது. இதன்மூலம் மின்காந்த அலைக்கற்றைகளைக் கண்காணிக்க முடியும்.


மொத்தம் 220 கிலோ எடைகொண்ட வெளிநாடுகளைச் சேர்ந்த செயற்கைக் கோள்கள் புவிவட்டப் பாதையில் 504 கி.மீல் நிலைநிறுத்தப்படுகிறது. இதில், 24 செயற்கைக்கோள்கள் அமெரிக்காவையும் லித்துவேனியாவைச் சேர்ந்த 2 செயற்கைக்கோள்களும் ஸ்பெயின் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு செயற்கைக்கோளும் இடம்பெற்றிருக்கின்றன. 


No comments: