ஃபிரெஞ்ச் கயானாவிலிருந்து இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
இந்தியாவில் தகவல் தொடர்பு சேவையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. தகவல் தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது. விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவைகளை மேம்பட்ட வகையில் வழங்கவும், கிராமப்புறப் பகுதிகளுக்கும் இந்தச் சேவைகள் துல்லியமாக கிடைக்க வேண்டும் என்ற வகையில் இந்த ஜிசாட்-31 உருவாக்கப்பட்டது.
இந்த செயற்கைகோள் இன்று அதிகாலை 2.31 மணியளவில் தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐரோப்பிய ராக்கெட்டான ஏரியன் 5 மூலம் ஏவப்பட்டது. 2,535 கிலோ எடை என்பதால், அதை இந்தியாவில் அனுப்ப இயலாது. எனவே, தென் அமெரிக்காவின் கூரு ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 5-ம் தேதி இந்தியாவின் அதிக எடைகொண்ட தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 11, இதே தென் அமெரிக்காவின் பிரெஞ்ச் கயானாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment