Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

12 July 2018

எலக்ட்ரானிக் & எலக்ட்ரிக்கல் சாதனங்களை பயன்படுத்தும் முறை

எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரிக்கல் சாதனங்களை ஆபரேட் செய்ய  ரிமோட் வந்தப்பறம் மெயின் ஸ்விட்ச் ஆஃப் செய்யவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலா னோருக்கு வருவதே இல்லை. டிவி, டிவிடி ப்ளேயர், ஏசி, இப்படி எல்லாமே ரிமோட்மூல் அணைத்துவிட்டு அமைதியாகி விடுகின்றனர். ஒரு சிலர் ப்ரிஜ்ஜை திறந்து வைத்துக் கொண்டு நீண்ட நேரம் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பார்கள். இன்டக்ஷன் ஸ்டவ், வாஷிங் மெஷின், இன்டெர்நெட் மோடம் போன்றைவைகளுக்கு வரும் இணைப்புகள் இயக்கநிலை யிலேயே தயாராக இருக்கும் பலரது வீடுகளில். இப்படி ரிமோட் மூலம் அணைத்து விட்டால் அந்த சாதனம் ஸ்டேன்ட் பை மோடு போய்விட்டால் மின்பயன்பாடும் செலவும் இருக்காது என பலர் கருதுகின்றனர்.

முன்னர் பொருத்தப்பட்ட மீட்டர்களில் மேக்னடிக் மூலம் ஒரு சக்கரம் சுழலும். அது மிகச்சிறிய அளவு ‍செலவாகும் மின்சாரத்தை கணக்கில் கொள்ளாது. ஆனால் தற்போது எல்லா மின்இணைப்புகளும் ஸ்டேடிக் (Static) மீட்டர்கள் பொருத்தப்படுகின்றது. ஏற்கெனவே இருந்த பழைய மீட்டர்கள் எல்லாவற்யைும் மாற்றி கடந்த சிலவருடங்களாக இந்த மீட்டரை பொருத்துகின்றது மின்வாரியம்.

இந்த *மீட்டர்கள் மிகவும் துல்லியமாக மின்சார செலவினை கணக்கீடு செய்பவை. மொபைல் சார்ஜர் பயன்படுத்தினாலும், பயன்படுத்திய பின்னர் மறந்து ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் போனாலும் மின்கணக்கீடு என்பது இந்த மீட்டர்கள் துல்லியமாக செய்கின்றன.* ரிமோட்டில் ‍அணைக்கப்பட்ட சாதனங்களில் ஸ்டேன்ட்பை மோடில் செலவாகும் மின்சாரத்தையும் மிகச்சரியாக கணக்கில் எடுத்துக்கொள்ளும். அதே போன்று *ஜீரோ வாட் பல்புகள் மின்சாரம் செலவாகாது என பல வீடுகளில் இரவு முழுவதும் எரிய விடுவார்கள். அதற்கு 5 வாட்டிலிருந்து 10 வாட் மின்சாரம் செலவாகும்.* ஆனால் சொல்வது ஜீரோ வாட்.

ஒரு டியூப் லைட் 40 வாட் வரை மின்சாரம் செலவிடக்கூடியது. அதற்கு பதிலாக எல்.இ.டி பல்புகள் 20 வாட்டில் அதே அளவு வெளிச்சத்தை தரவல்லது. டியூப்லைட்டிற்கு பதிலாக இவற்றை மாற்றிக்கொண்டு மின்சாரத்தை சேமிக்கலாம்.
*ஏசிக்கு சீராக மின்வினியோகம் செய்யும் ஸ்டெபிலைசரை பலர் ஆஃப் செய்வதேயில்லை. ஏசியும் ஸ்டேன்ட் பை மோடில் வைத்து விடுவார்கள். இரண்டுமே மின்சாரத்தை உறிஞ்சக்கூடியது. பயன்படாத நேரங்களில் அணைத்து விடுவது நல்லது*

*இப்படி ரிமோட் மூலம் அணைக்கப்படும் எலக்ட்ரானிக் எலக்ட்ரிக் உபகரணங்கள் பயன்படுத்தும் மின்சாரம் 2 மாதங்களுக்கு குறைந்த பட்சம் 10 யூனிட்டுகள் வரை இருக்கலாம்.* இரண்டுமாதத்திற்கு ஒரு மு‍றை மின்கணக்கீடு செய்யும் போது 500 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும்போது அதற்கான கட்டணம் 1130 ரூபாய். அதில் 10 யூனிட்டுகள் கூடுதலாக பயன்படுத்தும்போது செலுத்தவேண்டிய மின்கட்டணம் ரூபாய் 1846. ஏறத்தாழ *அதிகப்படியான அந்த 10 யூனிட் என்பது ஒருவர் செலுத்தவேண்டிய மின்கட்டணத்தின் தொகையை 716 ரூபாய்க்கு கூடுதலாக்கிவிடுகின்றது.*

எனவே நமது தேவைக்கு பயன்படுத்திய பின்னர் அனைத்து மின்சாதனங்களையும் ரிமோட் மூலம் அணைக்காமல் நேரடியாக மெயின் இணைப்பினை துண்டித்து மின்சாரத்தை சேமிப்பதோடு நமது பணம் விரையமாவதை தடுக்கலாம். கோடைக்காலம் துவங்கிவிட்டது. இனி இதற்கு ஒரு பெரும் தொகையை எடுத்துவைக்கவேண்டியிருக்கும். இதனை தவிர்க்க கூடுமானவரை மின்சாரத்திற்கு ஆகும் செலவினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது அவசியமாகின்றது.

பட்ஜெட் போட்டு குடும்பம் நடத்துகின்ற மிடில் க்ளாஸ் மக்களுக்காக மட்டுமல்ல இந்தப்பதிவு. அதிகப்படியான மின்சாரத்தை அனாவசியமாக பயன்படுத்தும் ஹைக்ளாஸ் மக்களுக்கும் இது பொருந்தும். காரணம் இவர்களின் அதிகப்படியாக தேவையின் காரணமாக ஒட்டுமொத்தமாக மின்சார தயாரிப்பிற்காக ஆகும் செலவினங்கள் பொதுவில் வைக்கப்படுகின்றது. அந்த சுமையை சாமான்யர்களின் தலையிலும் வைக்கப்படுகின்றது என்பதை இவர்கள் உணரவேண்டும்.

பொதுநலன் கருதி.

No comments: