வீடியோகான் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கத் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.
வீடியோகான் நிறுவனம் எண்ணெய் வணிகம் நடத்தியதில் பெரும் நட்டம் ஏற்பட்டது. அந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்தக் கடன் 47ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாததை அடுத்து வீடியோகான் நிறுவனத்தைத் திவாலானதாக அறிவிக்கத் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி மனு அளித்தது.
இந்நிலையில் திவாலானதாக அறிவிக்கும் நடவடிக்கைகளைத் தொடங்க வீடியோகானுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இடைக்கால அதிகாரியாக அனுஜ் ஜெயின் என்பவரையும் தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது. வீடியோகான் நிறுவனத்துக்கு ஐசிஐசிஐ வங்கி கடன் வழங்கியது குறித்து சிபிஐ ஏற்கெனவே விசாரித்து வருகிறது
No comments:
Post a Comment