Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

8 November 2017

டிடிஎச் வணிகத்தை வீகான் மீடியாக்கு விற்கும் அனில் அம்பானி!

டிடிஎச் வணிகத்தை வீகான் மீடியாக்கு விற்கும் அனில் அம்பானி!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அன்மையில் பிக் டிவி டிடிஎச் வணிகத்திற்கான உரிமையைப் புதுப்பிக்காமல் வெளியேற முடிவு செய்து இருந்தது. இதனால் வாடிக்கையாளர்களைப் பிற டிடிஎச் சேவை வழங்குநரை அணுகுமாறும் கேட்டுக்கொண்டது.

தற்போது அதில் திருப்பமான பிக் டிவியை வீகான் மீடியா & டெலிவிஷன் நிறுவனத்திற்கு விற்க இருப்பதாகும் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பிக் டிவி சேவையினை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளது.

பரிவர்த்தனை

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வீகான் மீடியா & டெலிவிஷன் நிறுவனத்திற்கு பிக் டிவியின் மொத்த பங்குகளை விற்க முடிவு செய்துள்ளது. இந்த பரிவர்த்தனையில் ஏற்கனவே உள்ள வர்த்தக கடன் மற்றும் பிற கடன் என அனைத்தும் அடங்கும் என்று டிராய்க்கு தாக்கல் செய்த அறிக்கையில் ஆர்காம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

டிடிஎச் சேவை தடைப்படாது

வீகான் மீடியா நிறுவனம் பிக் டிவி டிடிஎச் சேவைக்கான உரிமத்தினை புதுப்பித்து சேவை அளிக்கும் என்றும் பிக்டிவிய்ன் மீது ஆர்காம் வாங்கியுள்ள கடன்களுக்கும் பொறுப்பேற்கும் என்று அனில் அம்பானியின் ஆர்காம் தெரிவித்துள்ளது. 

ஊழியர்களின் வேலைக்குப் பாதிப்பில்லை

இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலான இந்த பரிவர்த்தனையினால் 500 ஊழியர்களின் வேலைக்கு எந்த பாதிப்பும் இருக்காது. பிக்டிவி டிடிஎச் சேவையினை 12 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடன் குறையும்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், வீகான் மீடியா & டெலிவிஷன் நிறுவனத்திற்கு இடையிலான இந்த பரிவர்த்தனையினால் கடனில் சிக்கி தவித்து வரும் ஆர்காம் நிறுவனத்திற்கு சிறிது சிக்கல் தீரும்.

கடனைச் செலுத்த முடிவு

சென்ற மாதம் கடனை திருப்பி செலுத்த கடன் வழங்கிய நிறுவனங்கள் கோரிய பரிசீலனையினை ஏற்று சில சொத்துக்களை விற்றதன் மூலம் 17,000 கோடி கடனை அடைக்க திட்டம் திட்டியுள்ளது.

ஆர்காம்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு மார்ச மாத கணக்கின் படி 44,300 கோடி ரூபாய் கடன் இருந்தது. இதனை ஏர்செல் இணைவின் மூலம் சரி கட்ட நினைத்த போது அது தோல்வி அடைந்ததை அடுத்து 2ஜி வணிகத்தினை விட்டு முழுமையாக வெளியேற ஆர்காம் முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments: