Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

1 May 2017

அண்டை நாடுகளுக்கான செயற்கைக்கோள் - இந்தியாவின் விண்வெளி ராஜதந்திரமா?

பெரும்பாலான சார்க் நாடுகள் பயன்பெறும் வகையில் வரும், மே 5-ம் தேதி எஸ்ஏஎஸ் என்ற தெற்காசிய செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தவுள்ளது.

''சப்கா சாத் சப்கா விகாஸ்'' எனப்படும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் விலைமதிப்பில்லா பரிசு இந்த செயற்கைக்கோள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது 'மன் கீ பாத்' என்ற நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த புதிய செயற்க்கைகோளின் திறன் மற்றும் வசதிகள் தெற்காசிய பகுதியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை முன்னுரிமையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

''இயற்கை வளங்கள் ஒருங்கிணைப்பு, தொலை மருத்துவம், கல்வித்துறை , நுட்பமான தகவல்தொடர்பு இணைப்பு அல்லது தொடர்பு கொள்ள மக்களை ஊக்குவிப்பது ஆகிய அம்சங்களில் இந்த செயற்கைக்கோள் தெற்காசிய பிராந்தியத்துக்கு ஒரு வரமாக அமையும். ஒட்டுமொத்த தெற்காசிய பகுதியுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா எடுத்துள்ள முக்கியமான படி இது '' என்று மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விஞ்ஞானி சிவன் கூறுகையில், ''சார்க் நாடுகளுக்கு பயன்தரும் வகையில் செயற்கைக்கோளை இந்தியா பரிசளிப்பது பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சி மற்றும் ஆலோசனையாகும். வரும் 5-ஆம் தேதியன்று விண்ணில் இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ள நிலையில், இது தொடர்பான இறுதி கட்ட ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''தகவல் தொடர்பு மற்றும் வானிலை கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு இந்த ஜிசாட்-9 செயற்கைக்கோள் பயன்படும். மற்ற நாடுகளுக்கு இது பரிசளிக்கப்பட்டாலும், இந்தியாவுக்கும் இந்த செயற்கைக்கோள் பயன் தரும்'' என்று கூறினார்.

''பாகிஸ்தான் இந்த திட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில், இந்த செயற்கைக்கோள் சார்க் சாட் என்று பெயரிடப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இதில் இருந்து விலகிவிட்டதால் இதற்கு தெற்காசிய செயற்கைக்கோள் என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளேது'' என்று விஞ்ஞானி சிவன் குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள் பரிசு இந்தியாவின் விண்வெளி ராஜதந்திரமா?

ஆரம்பத்தில் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு செயற்கைக்கோள் நிறுவிட உதவி செய்தன என்று நினைவுகூர்ந்த விஞ்ஞானி சிவன், தற்போது விண்வெளித்துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள இந்தியா, விண்வெளித்துறையில் வலுவான அடித்தளம் இல்லாத மற்ற நாடுகளுக்கு பயன்தரும் வகையில் இந்த செயற்கைக்கோளை உருவாக்கி அதனை வழங்க எண்ணியுள்ளது ஒரு சிறந்த முயற்சி என்று கூறினார்.

மேலும், இந்த பரஸ்பர உதவியின் மூலம் மற்ற சார்க் நாடுகளில் இருந்த தகவல் பரிமாற்றம் போன்ற பயன்கள் இந்தியாவுக்கு கிடைக்கக்கூடும் என்று தெரிவித்த சிவன், இந்த முயற்சியை இந்தியாவின் விண்வெளி ராஜதந்திரம் என்று கூறலாம் என்று குறிப்பிட்டார்.

மே 5-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள தெற்காசிய செயற்கைக்கோளுக்கு விண்வெளித்துறையில் வைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப பெயர் ஜிசாட்-9 என்று சிவன் தெரிவித்தார்.

''இந்த செயற்கைகோளை மற்ற சார்க் நாடுகள் பயன்படுத்த முடிந்தாலும், இதன் Master control எனப்படும் மொத்த கட்டுப்பாடு இந்தியாவின் கையில்தான் இருக்கும்'' என்று தெரிவித்த சிவன் மேலும் குறிப்பிடுகையில், இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்படவுள்ளதாக தெரிவித்தார்.


No comments: