Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

29 May 2017

FOOD FOOD TVStarted onIntelSat-20 @68.5E

FOOD FOOD TV
Started Transmission
IntelSat-20 @68.5E
FREQ: 3742 V 7000
MPEG4/HD/FTA Running



24 May 2017

ஸ்டார் ஸ்போட்ஸ்  தமிழ்  மே 28 ம் தேதி தற்காலிகமாக தொடக்கம்

ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் செலக்ட் 1,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் எச்டி 4,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 4  மூன்று சேனல்களும்  மே மாதம் 28 தேதி முதல்  நிறுத்தப்பட உள்ளது.

எஃப்எக்ஸ் மற்றும் ஸ்டார் மூவிஸ் இடையே கொண்ட ஒப்பந்தப்படி  ஜூன் 15 முதல்  இணைந்து செயல்பட உள்ளது. இதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தேர்வு 2 நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக FX சேனல் வர உள்ளது.

ஸ்டார் ஸ்போட்ஸ்  தமிழ்  மே 28 ம் தேதி தற்காலிகமாக தொடக்கம். தமிழ் சேனல் தமிழ்நாடு பிரீமியர் லீக் நடத்துவதற்காக  தொடங்கப்படுகிறது. இந்த போட்டிகள் கடந்த ஆண்டின் ஸ்டார் விஜய்ன் (GEC)  நிறுவனத்தில் ஒளிபரப்பப்பட்டது.

TUNE 6 தமிழ் இசை சேனல் இப்பொழுது இன்டெல்சாட் 17 @ 66 °கி இல்

TUNE 6  தமிழ் இசை சேனல் இப்பொழுது
இன்டெல்சாட் 17 @ 66 °கி இல்

Sat: Intelsat 17 @ 66 ° E
Fr: 3968
SR: 8800
போல்: V
மோட்: Dvbs2-8psk / Mpeg4
Fec: 2/3

23 May 2017

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD4 மற்றும் SD4 தனது ஔிபரப்பு  நிருத்தம்

ஸ்டார் ஸ்போர்ட் HD4 மற்றும் SD4 மே 28 ஆம் தேதி முதல் தனது ஔிபரப்பை   நிரந்தரமாக  நிறுத்திக்   கொள்ளபடும் என அறிவித்துள்ளது.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ்ன் மற்ற சேனல்கள் எப்போதும் போல் ஔிபரப்பாகும்.

ICC சாம்பியன் டிராபி ஔிபரப்பாகும் சேனல்கள்

ICC சாம்பியன் டிராபி (CT 2017) 2017

ஆஸ்திரேலியா:
சேனல் 9,
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்

ஆப்கானிஸ்தான்:
லெமர் டிவி,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா

வங்காளதேசம்:
ஜிடிவி,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா

இந்தியா:
டிடி நேஷனல் (இந்திய போட்டிகளில் மட்டும்),
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD1,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD2,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD3

நியூசிலாந்து:
ஸ்கை ஸ்போர்ட்ஸ்,
ஸ்கை ஸ்போர்ட்ஸ் நியூஸ்

ஐக்கிய இராச்சியம்:
ITV 1 & 4,
ஸ்கைஸ்போர்ட்ஸ்

அமெரிக்கா:
ESPN3,
வில்லோ டிவி

இலங்கை:
SLRC சேனல் கண்,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா

பாகிஸ்தான்:
பி.டி.வி விளையாட்டு,
Ten ஸ்போட்ஸ்,
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா

கேரிபீன்ஸ், தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா:
ஈஎஸ்பிஎன்

தென் ஆப்பிரிக்கா:
சூப்பர்ஸ்போர்ட்ஸ்

மத்திய கிழக்கு:
OSN ஸ்போர்ட்ஸ்

கனடா:
ஸ்போட்ஸ் நெட்,
வில்லோடிவி

பசிபிக் தீவுகள், பப்புவா நியூ கினியா:
பிஜி டிவி,
SKY பசிபிக்

சிங்கப்பூர்:
ஸ்டார் கிரிக்கெட் ஸ்டார்ஹுப் & சிங்க்டெல்

ஹாங்காங்:
ஸ்டார் கிரிக்கெட் - PCCW

நெதர்லாந்து:
ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வேல்ஸ்,

ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து குடியரசு:
ஸ்கை ஸ்போர்ட்ஸ் 2

உலகின் மற்ற பகுதி: Hotstar

20 May 2017

New Channel Started on MEASAT-3 91.5E

New Channel
Travel XP
Fashion-ONE
MEASAT-3(91.5E)
TP.3920 V 30000
MPEG-4 HD 4K FTA STARTED.

19 May 2017

Chinasat 15@110.5 E Temp FTA

Chinasat 16@110.5° East
3520 V 30000
Asia Travel TV HD
Global News HD
MTV Asia HD
MPEG-4/HD/UHD/FTA
.
FTV
SET Taiwan
SET Internanional
CTS News
FTV News
ETTV Asia
ETTV News
CCTV 4 Europe
Arirang World
Bloomberg TV
Thrill
Kix
MPEG-4/SD/FTA

விரைவில் சினிமா டிவி சேனல் தொடக்கம்

தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் சினிமா டிவி சேனல் ஒன்றைத் தொடங்கத்  திட்டமிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெளிவரும் அத்தனை படங்களின் பாடல்கள், டிவி ரைட்ஸ் அனைத்தையும் சினிமா டிவி சேனல் மட்டுமே ஒளிபரப்பும். பிரபலமான வேறு சேனல்களுக்கு, புதுப்படங்களின் எந்த உரிமையும் வழங்கப்படமாட்டாது. சினிமா டிவி-யின் துணை சேனல்களாக ‘சினிமா மியூசிக் டிவி' திரைப்படப் பாடல்களை மட்டுமே 24 மணி நேரமும் ஒளிபரப்பும். அதேபோல ‘சினிமா ஃபங்ஷன் டிவி' என்ற சேனல் சினிமாவில் நடக்கும் விழாக்களை ஒளிபரப்பு செய்யும். சினிமா தொடர்புடைய நிகழ்ச்சிகளில் வேறு சேனல்கள் பங்குபெற அனுமதியில்லை. புதுப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், ஷூட்டிங் ஸ்பாட் என அனைத்து நிகழ்ச்சிகளுமே சினிமா டிவி சேனலில் மட்டுமே ஒளிபரப்பப்படும் என்பதில் தெளிவாகவும் தீவிரமாகவும் தீர்க்கமான முடிவெடுக்கத் தீர்மானித்துள்ளது. இனிமேல் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாள்களில் ‘சினிமா டிவி-யில் மட்டுமே நடிகர், நடிகைகளின் பேட்டிகள் இடம்பெறும் என்ற புதிய திட்டத்துடன் களம் இறங்கப்போவதக அறிவித்துள்ளனர்.

17 May 2017

16 May 2017

19 பாக்கிஸ்தான் சேனல்கள்புதிய துவக்கம் YahSat-1A @ 52.5E இல்

19 பாக்கிஸ்தான் சேனல்கள்
புதிய துவக்கம் YahSat-1A @ 52.5E
Yahsat-1A52° E
TP: 11862 H 27500
MPEG4 / எச்டி / இலவச சேனல்




Raavi tv
Zindgi tv
Gawahi tv
Uni tv
Hamara tv
As tv movies
Kay2
Khyber news
Avt khyber
Vibe
Apna channel
8xm
K21
Dhanak tv
Saboon tv
Pashto1
Abb takk
On tv
Azad tv

15 May 2017

HBO HD Scrambled on SUN Direct DTH


HBO HD
Scrambled Now After
Long Time FTA Running On
MeaSat-3A @91.5E
(SUN Direct DTH)
FREQ: 10970 V 32000

12 May 2017

புதிய தமிழ் செய்தி சேனல்  FX16  விரைவில்

 FX16 (ஃபஸ்ட் எக்ஸ்பிரஸ் நியுஸ்) என்ற பெயரில்  ஆகஸ்ட் மாதத்தில் தமிழில் புதிய செய்தி சேனலை துவங்குகிறது.





நம்பகமான உலக தமிழ் செய்திகளோடு தெளிவு, வெளிப்படை, விரைவு, என்ற புதிய கோணத்துடன் FX16 NEWS தொலைக்காட்சி துவங்கியுள்ளது.

8 May 2017

ஆசியா சாட் 5 @ 100.5 ° E புதிய டிபி இல் ஸ்டார் நெட்வொர்க்கின் சேனல்கள்

ஆசியா சாட் 5 @ 100.5 ° E
புதிய டிபிக்கு மாறி உள்ள ஸ்டார்  சேனல்கள்

டி.பி.: 4020 V 29720 5/6
DVB-S2 / 8PSK / எச்டி
எம்பெக் 4

ஸ்டார் பிளஸ் HD
லைப் ஓகே HD
ஸ்டார் கோல்ட் HD
ஸடார் வேல்டு HD
ஸ்டார் மூவிஸ் HD
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD1
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் HD2

புதியதாக இணைந்த சேனல்

YAHSAT@_52.5E
New_Channel
Panorama Action TV
FREQ:
12090 H 27500
MPEG 4 HD FTA

New Channel
Hope Channel (Ghana)
Badar-7 @26.0E
TP: 10970 V 27500
MPEG4/HD/FTA Started

INTELSAT@68.5E
New_Channel
CLUB_TV
FREQ:
3895 V 2500
MPEG 4 HD FTA

ASIASAT@105.5E
New_Channel
INDIA NEWS PUNJABI
FREQ:
3690 H 15000
MPEG 4 HD FTA

ஆஸ்டிரோ வெள்ளிதிரை சேனல் கட்டண சேனலாக மாற்றம்

மீசட் 3A@91.5 செயர்க்கைகோள்  இல் பவர் வியூவில்  வந்து காெண்டிருந்த ஆஸ்டிரோ வெள்ளிதிரை சேனல் இன்று முதல் கட்டண சேனலாக மாற்றியமைத்துள்ளது.


இந்த சேனல் காேனக்ஸ் (convex) என்ற கட்டண முறையில் விடப்பட்டுள்ளது.

சோனி யா இப்பொழுது Dish TV இல் Gsat 15@93.5 டிகிரி கி இனைப்பு.

சோனி யா இப்பொழுது Dish TV இல் Gsat 15@93.5 டிகிரி கி இனைப்பு.


SONY YAY சேனலின் விவரங்கள்:
சேனல் பெயர் : SONY YAY
டிஷ் டிவி
டிரானஸ்பாண்டர் : 11130
பாேலரிட்டி  : V
சிம்பல் ரேட்  : 30000
கட்டண சேனல்

7 May 2017

70 லட்சம் 'செட் - டாப் பாக்ஸ்' வாங்க முடிவு


தமிழகம் முழுவதும், 'டிஜிட்டல்' முறையில், கேபிள் இணைப்பு வழங்குவதற்காக, 70 லட்சம், 'செட் - டாப் பாக்ஸ்' கருவிகளை வாங்க, தமிழக அரசு, 'டெண்டர்' கோரிஉள்ளது. 

கேபிள், 'டிவி' ஒளிபரப்பை, டிஜிட்டல் முறையில் வழங்குவதற்கான உரிமத்தை, தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு, மத்திய தொலைத்தொடர்பு ஆணையமான, 'டிராய்' வழங்கியுள்ளது. மூன்று மாதங்களுக்குள், வாடிக்கையாளர்களுக்கு, செட் - டாப் பாக்ஸ்களை வழங்கி, டிஜிட்டல் ஒளிபரப்பை துவங்காவிட்டால், உரிமம் ரத்து செய்யப்படும் என, டிராய் எச்சரித்துள்ளது. 

கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் தமிழக அரசு, பல ஆண்டு போராட்டத்திற்கு பின் கிடைத்த உரிமத்தை, தக்கவைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், 60 லட்சம் செட் - டாப் பாக்ஸ்கள் மற்றும், 10 லட்சம் உயர் ரக செட் - டாப் பாக்ஸ் கொள்முதல் செய்ய, அரசு கேபிள் நிறுவனம், நேற்று டெண்டர் கோரியுள்ளது. அந்த கருவிகள், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக தரப்படும் என தெரிகிறது. 

2 May 2017

INTALSAT 20@68.E NEW CHANNEL

INTALSAT_68.E
New_Channels
Sanskarti_TV
Sarathi_TV
FREQ:
3792 H 7200
MPEG 4 HD FTA

INTALSAT_68.E
New_Channel
Subh_Cinema
FREQ:
4005 V 7200
MPEG 4 HD FTA





1 May 2017

அண்டை நாடுகளுக்கான செயற்கைக்கோள் - இந்தியாவின் விண்வெளி ராஜதந்திரமா?

பெரும்பாலான சார்க் நாடுகள் பயன்பெறும் வகையில் வரும், மே 5-ம் தேதி எஸ்ஏஎஸ் என்ற தெற்காசிய செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்தவுள்ளது.

''சப்கா சாத் சப்கா விகாஸ்'' எனப்படும் அனைவரும் இணைந்து அனைவருக்குமான முன்னேற்றம் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் விலைமதிப்பில்லா பரிசு இந்த செயற்கைக்கோள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது 'மன் கீ பாத்' என்ற நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாடும் நிகழ்ச்சியில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்த புதிய செயற்க்கைகோளின் திறன் மற்றும் வசதிகள் தெற்காசிய பகுதியின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியை முன்னுரிமையாக கொண்டு உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

''இயற்கை வளங்கள் ஒருங்கிணைப்பு, தொலை மருத்துவம், கல்வித்துறை , நுட்பமான தகவல்தொடர்பு இணைப்பு அல்லது தொடர்பு கொள்ள மக்களை ஊக்குவிப்பது ஆகிய அம்சங்களில் இந்த செயற்கைக்கோள் தெற்காசிய பிராந்தியத்துக்கு ஒரு வரமாக அமையும். ஒட்டுமொத்த தெற்காசிய பகுதியுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா எடுத்துள்ள முக்கியமான படி இது '' என்று மோதி தனது உரையில் குறிப்பிட்டார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விஞ்ஞானி சிவன் கூறுகையில், ''சார்க் நாடுகளுக்கு பயன்தரும் வகையில் செயற்கைக்கோளை இந்தியா பரிசளிப்பது பிரதமர் நரேந்திர மோதியின் முயற்சி மற்றும் ஆலோசனையாகும். வரும் 5-ஆம் தேதியன்று விண்ணில் இந்த செயற்கைக்கோள் ஏவப்படவுள்ள நிலையில், இது தொடர்பான இறுதி கட்ட ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகிறது'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ''தகவல் தொடர்பு மற்றும் வானிலை கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு இந்த ஜிசாட்-9 செயற்கைக்கோள் பயன்படும். மற்ற நாடுகளுக்கு இது பரிசளிக்கப்பட்டாலும், இந்தியாவுக்கும் இந்த செயற்கைக்கோள் பயன் தரும்'' என்று கூறினார்.

''பாகிஸ்தான் இந்த திட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆரம்பத்தில், இந்த செயற்கைக்கோள் சார்க் சாட் என்று பெயரிடப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இதில் இருந்து விலகிவிட்டதால் இதற்கு தெற்காசிய செயற்கைக்கோள் என்று தற்போது பெயரிடப்பட்டுள்ளேது'' என்று விஞ்ஞானி சிவன் குறிப்பிட்டார்.

செயற்கைக்கோள் பரிசு இந்தியாவின் விண்வெளி ராஜதந்திரமா?

ஆரம்பத்தில் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியாவுக்கு செயற்கைக்கோள் நிறுவிட உதவி செய்தன என்று நினைவுகூர்ந்த விஞ்ஞானி சிவன், தற்போது விண்வெளித்துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ள இந்தியா, விண்வெளித்துறையில் வலுவான அடித்தளம் இல்லாத மற்ற நாடுகளுக்கு பயன்தரும் வகையில் இந்த செயற்கைக்கோளை உருவாக்கி அதனை வழங்க எண்ணியுள்ளது ஒரு சிறந்த முயற்சி என்று கூறினார்.

மேலும், இந்த பரஸ்பர உதவியின் மூலம் மற்ற சார்க் நாடுகளில் இருந்த தகவல் பரிமாற்றம் போன்ற பயன்கள் இந்தியாவுக்கு கிடைக்கக்கூடும் என்று தெரிவித்த சிவன், இந்த முயற்சியை இந்தியாவின் விண்வெளி ராஜதந்திரம் என்று கூறலாம் என்று குறிப்பிட்டார்.

மே 5-ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ள தெற்காசிய செயற்கைக்கோளுக்கு விண்வெளித்துறையில் வைக்கப்பட்டுள்ள தொழிநுட்ப பெயர் ஜிசாட்-9 என்று சிவன் தெரிவித்தார்.

''இந்த செயற்கைகோளை மற்ற சார்க் நாடுகள் பயன்படுத்த முடிந்தாலும், இதன் Master control எனப்படும் மொத்த கட்டுப்பாடு இந்தியாவின் கையில்தான் இருக்கும்'' என்று தெரிவித்த சிவன் மேலும் குறிப்பிடுகையில், இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து ஏவப்படவுள்ளதாக தெரிவித்தார்.


தெற்காசிய செயற்கைக்கோள் மே 5-இல் ஏவப்படும்

தெற்காசிய செயற்கைக் கோள் மே 5-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் பரிசு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, அகில இந்திய வானொலியின் மனதின் குரல் (மன் கீ பாத்) நிகழ்ச்சியின் மூலம், நாட்டு மக்களுக்கு மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றியதாவது:
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற மத்திய அரசின் கோட்பாடானது, நமது நாட்டை மட்டும் உள்ளடக்கியதல்ல; இது உலகத்தையும் உள்ளடக்கியது. குறிப்பாக, நமது அண்டை நாடுகளை உள்ளடக்கியது.
வரும் 5-ஆம் தேதியன்று, தெற்காசிய செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தவுள்ளது. இந்த செயற்கைக்கோளால், இத்திட்டத்தில் இணைந்துள்ள அனைத்து நாடுகளும் பயனடையும். அண்டை நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் ஈடு இணையற்ற இந்தப் பரிசு, தெற்காசியா முழுமைக்கும் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகும்.
தெற்காசியா தொடர்பாக இந்தியா கொண்டுள்ள தீர்மானத்துக்கு இந்த செயற்கைக்கோள் ஒரு சிறந்த முன்னுதாரணம். தெற்காசியா முழுவதும் வளர்ச்சியடைய இந்த செயற்கைக்கோள் உதவியாக இருக்கும் என்று மோடி கூறினார்.
நாட்டின் பிரதமராக அவர் பதவியேற்றவுடன், தெற்காசியப் பிராந்தியத்தில் இருக்கும் நாடுகளுக்காக இந்தியா செயற்கைக்கோளை அனுப்பும் திட்டத்தை முன்வைத்தார். ஆனால், இந்தத் திட்டத்தில் பாகிஸ்தான் ஆர்வம் காட்டவில்லை. அந்நாட்டைத் தவிர, இத்திட்டத்தில் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 7 நாடுகள் இணைந்துள்ளன. இந்த செயற்கைக்கோளைத் தயாரிக்க ரூ.235 கோடியை இந்தியா செலவிட்டுள்ளது. ஆனால், செயற்கைக்கோளை ஏவுதல் உள்ளிட்டவற்றை கணக்கிட்டால், இதன் மொத்த செலவு ரூ.450 கோடியாகும். 2,230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், 3 ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 50 மீட்டர் நீளம் கொண்டது. விண்ணில் 12 ஆண்டுகள் பணியை மேற்கொள்ளும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.