Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

30 August 2019

Jio Set-Top-Box & ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது?

முதன்முறையாக, ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் எப்படி இருக்கும் என்பதற்கான ஆதாரம் தற்பொழுது வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. ஜியோஃபைபர் பயனர் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். ஜியோஃபைபர் கனெக்ஷனை எப்படி முன்பதிவு செய்வது? என்பதையும் பார்க்கலாம்.





ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ்
ட்ரீம் டிடிஎச் என்ற பயனர் பெயரின் வழியாக இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் இன் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள தகவலின்படி ரிலையன்ஸ் ஜியோவின் ஹைப்ரிட் செட் டாப் பாக்ஸ் நீல நிறத்தில், ஜியோ பிராண்டிங் லோகோவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய செட் டாப் பாக்சில் உள்ள போர்ட்கள்
இந்த புதிய செட் டாப் பாக்சில் MSO Coaxial cable, ஒரு HDMI போர்ட், ஒரு Ethernet RJ45 போர்ட் மற்றும் ஒரு USB 2.0 மற்றும் ஒரு USB-3 போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோ ஹைப்ரிட் செட் தாப் பாக்ஸ், Custom UI உடன் கூடிய ஆண்ட்ராய்டு OS இயங்குதளத்தின் கீழ் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 5 முதல்
புதிய Reliance Jio GigaFiber broadband, ஜியோஃபைபர் சேவை மக்களின் பயன்பாட்டிற்குச் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. இதன் மாதாந்திர சந்தாதாரர் திட்டம் துவக்க விலையாக ரூ.700 முதல் ரூ.10,000 வரையில் இருக்கும் என்று முகேஷ் அம்பானி நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.
இலவச 4K டிவி மற்றும் 4K செட்டாப் பாக்ஸ்
ரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் பயனர்களுக்கு இலவசமாக லேண்ட் லைன் கனெக்ஷன் மற்றும் செப்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் நீண்ட நாள் திட்டமான, வருடாந்திர திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு இலவச 4K டிவி மற்றும் இலவச 4K செட்டாப் பாக்ஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோஜிகாஃபைபர் சேவை முன்பதிவு
இந்த புதிய ஜியோ ஜிகாஃபைபர் சேவை செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவில்பயன்பாட்டிற்கு வருகிறது, அதற்கு முன்னால் முன்பதிவு செய்ய விரும்பும் பயனர்கள் இந்த முறைப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
ஜியோஃபைபர் முன்பதிவு செய்வது எப்படி?
Jio GigaFiber Online Registration என்ற வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்.

முன்பதிவு செய்ய மூன்று கட்ட பதிவுகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.

முதல் நிலை பிரிவில், உங்கள் வீட்டின் முகவரி அல்லது உங்கள் அலுவலகத்தின் முகவரியைப் பதிவு செய்ய வேண்டும்.

இரண்டாம் நிலை பிரிவின் கீழ் உங்கள் பெயர், தொலைப்பேசி எண் மற்றும் உங்கள் ஈமெயில் ஐடி விபரங்களைச் சரியாக என்டர் செய்ய வேண்டும்.

உங்கள் தகவல்களை என்டர் செய்த பின் Generate OTP கிளிக் செய்யவும்.

ஜியோ ஜிகாஃபைபர் OTP எண்
உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணைச் சரியாக என்டர் செய்யவும்.
அதற்குப் பின் நீங்கள் RWA/Society Developer Township போன்ற எந்த மாதிரியான குடியிருப்பில் உள்ளீர்கள் என்ற விபரத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
மூன்றாம் நிலை பிரிவின் கீழ், மீண்டும் ஒரு முறை உங்களின் முகவரி, பின் கோடு எண் விபரங்களை என்டர் செய்து ஜியோ ஜிகாஃபைபர் கனெக்ஷனிற்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.
ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரி
இதைச் சரியாகச் செய்தால் ஜியோ எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரி, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அழைத்துப் பேசுவார். உங்கள் தகவலைச் சரி செய்தபின், ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான தகவல்களை உங்களுடன் பகிரப்படும்.
ஜியோ ஜிகாஃபைபர் இன்ஸ்டாலேஷன்
உங்கள் அனுமதியுடன் உங்கள் வீட்டிற்கே ஜியோ அதிகாரிகள் வந்து ஜியோ ஜிகாஃபைபர் சேவைக்கான இன்ஸ்டாலேஷனை செய்து கொடுப்பார்கள்.

26 August 2019

தமிழக அரசு சார்பில் புதிய கல்வி தொலைக்காட்சி தொடக்கம்

     தமிழக அரசு சார்பில் ஒளிபரப்பாகவுள்ள கல்வி தொலைக்காட்சி சேனலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.


தமிழக அரசு சார்பில் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த கல்வி தொலைக்காட்சி பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பவும் வேலைவாய்ப்பு சம்பந்தமாகவும், சுய தொழில் வேலைகளை கற்பிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளது.
இந்த கல்வி தொலைக்காட்சி சேனல் அண்ட்ராய்டு மற்றும் ஐ ஓஎஸ் இயங்குதளங்களில் பார்க்க கிடைக்கும் கிடைக்கும் என்று அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர். மேலும், கடந்த சில மாதங்களாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் கேபிள் இணைப்புகள் கிடைக்க பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், குழந்தைகள் இந்த சேனலைப் பார்க்க முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி, கல்வி தொலைக்காட்சி தொடக்கவிழாவை அனைத்து பள்ளி மாணவர்களும் பார்க்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேபிள் இணைப்பு இல்லாத பள்ளிகள் கல்வி தோலைகாட்சியின் யூ டியூப் சேனலில் பதிவேற்றப்படும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 August 2019

ஜி ஹிந்துஸ்தான் தமிழ் செய்திகள் தொலைக்காட்சி தொடக்கம்

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு மற்றும் செய்திகள் தொலைக்காட்சி நிறுவனமான ஜி மீடியா தனது நிறுவனத்தில் இருந்து புதிய செய்திகள் தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை இணைத்துள்ளது.



இந்தியாவில் முதல்முறையாக தென்னிந்திய மொழிகளில் இந்தி செய்திகள் தொலைக்காட்சியில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இந்திய செய்திகளை வழங்கும் முதல் தொலைக்காட்சி என்ற பெருமையை ஹிந்துஸ்தான் பெற்றுள்ளது. முதல் முறையாக ஹிந்துஸ்தான் தொலைக்காட்சி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஜி மீடியா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கியது பின்பு சில வருடங்கள் கழித்து புதுப்பொலிவுடன் இந்திய பிராந்திய செய்திகளை தொகுத்து வழங்கும் தொலைக்காட்சி ஜி இந்துஸ்தான் என்ற பெயரில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டது. ஜி மீடியா நிறுவனத்தின் செய்திகள் தொலைக்காட்சியில் வாடிக்கையாளர்களை மாநில வாரியாக அதிகரிக்கும் நடவடிக்கையாக புதிய முயற்சியில் களமிறங்கியுள்ளது. விரைவில் மற்ற மாநில மொழிகளிலும் நிகழ்ச்சிகள் தொடங்கப்படும்.
ஜி ஹிந்துஸ்தான்தொலைக்காட்சியின் தமிழ் மொழிகள் நிகழ்ச்சியை காண கேபிள் டிவியில் வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ் ஆடியோ தமிழ் மொழியை தேர்வு செய்து காணலாம். ஜி ஹிந்துஸ்தான் தமிழ் தொலைக்காட்சியை காண கேபிள் டிவி அல்லது கட்டண டிடிஎச் நிறுவனங்கள் மாதாந்திர கட்டணம் தொலைக்காட்சி தொகுப்பு ஏற்றி கேட்டு தொலைக்காட்சியை காணலாம்.
அலைவரிசை எண்
Insat 4A at 83.0°E
4090 H 7500
MPEG4/ DVB -S2

21 August 2019

டாடா ஸ்கை DTH வீடியோ அமைப்பை மேம்படுத்துவதால் சேவையில் பாதிப்பு ஏற்படும்

டி.டி.எச் ஆபரேட்டர் தனது வீடியோ ச அமைப்பை மேம்படுத்துவதால் டாடா ஸ்கை வாடிக்கையாளர்கள் சேவையில் குறுக்கீடுகளை சந்திக்க நேரிடும் என்று ட்ரீம் டி.டி.எச் தெரிவித்துள்ளது.

டாடா ஸ்கை வழங்கும் அறிவிப்பின்படி, இந்த மேம்படுத்தல் ஆகஸ்ட் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பார்வையாளர்களின் தடங்கலைக் குறைக்க 00.30 முதல் 05.30 மணி வரை நடைபெறும்.  மேம்படுத்தலுக்குப் பிறகு சந்தாதாரர்கள் நீலத் திரை அல்லது சமிக்ஞை இல்லை, எனவே அந்த விஷயத்தில் கடின மறுதொடக்கம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த மேம்படுத்தல் டாடா ஸ்கை புதிய அலைவரிசையை சேர்க்க உதவும் மற்றும் எதிர்காலத்தில் புதிய சேனல்களை சேர்க்க அனுமதிக்கும்.  டாடா ஸ்கை அதன் தற்போதைய வளங்களை சிறப்பாகப் பயன்படுத்தவும் இது உதவும்.  மேம்படுத்தல் படம், ஆடியோ அல்லது சமிக்ஞை தரத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் எச்டி 1, மூவிஸ் நவ், அனிமல் பிளானட், டிஎல்சி எச்டி வேர்ல்ட், சோனி பிக்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 இந்தி மற்றும் சோனி டென் 1 எச்டி போன்ற சேனல்களை வழங்கும் INSAT4A TP23 மற்றும் GSAT10 TP-K7 செயற்கைக்கோள்களின் விஷயத்தில் இந்த மேம்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

16 August 2019

New Channel Update

Gsat 15 93.5'E Ku Band
DD FREE DISH
ADD NEW CHENNALS
FREE TO AIR FTA
Zingaat
TP: 11551 V 29500
Manoranjan_Grand
TP: 11090 v 29500
Mooranjan_Movies
TP: 11551 V 29500
FTA... 2FIT DISH

C Band LNB sale 12K & 17K






5 August 2019

டி.டி.எச் சந்தாதாரர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் சேவையை மட்டும் மாற்றும் வசதி

டிராய் தலைவர் ஆர்.எஸ். ஷர்மா இந்த யோசனையை முன்னெடுத்து வருவதால், செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் செட் டாப் பாக்ஸின் (எஸ்.டி.பி) சேவையை மட்டும் மாற்றிக் இயக்க வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஷர்மாவின் கூற்றுப்படி, 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என்று தொலைத் தொடர்பு பேச்சு தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெலிகாம் ரெகுலேட்டர் இந்த யோசனையை செயல்படுத்தி வருவதாகவும், இப்போது வாடிக்கையாளர்களுக்கு எஸ்.டி.பி செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் சேவையை மட்டும் மாற்றி தருவதற்கான சரியான நேரம் இது என்றும் சர்மா தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில், ஒரு வாடிக்கையாளர் தனது டி.டி.எச் ஆபரேட்டரை மாற்ற விரும்பினால், புதிய ஆபரேட்டரிடமிருந்து சேவைகளைப் பெறுவதற்கு செட் டாப் பாக்ஸையும் மாற்ற வேண்டிய கட்டாய சூழல் உள்ளது.  இது தேவையற்ற ரூ .1,000  முதல் ரூ .2,000 க்கும் அதிகமாக வாடிக்கையாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

அண்மைய மாதங்களில் டி.டி.எச் ஆபரேட்டர்கள் வழங்கிய சேவைகளின் தரத்தை அதிகரித்த தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டாளர் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்திய பின்னர் எஸ்.டி.பி இயங்குதன்மை தொடர்பான வளர்ச்சி வந்துள்ளது.

சேவை மாற்றம் என்பது உங்களிடம் உள்ள (சன் டைரக்ட், டாட்டா ஸ்கை, ஏர்டெல், வீடியோகான், டிஷ் டிவி) ஏதேனும் ஒரு செட்டப் பாக்ஸ் நீங்கள் விரும்பிய டிடிஎச் நெட்வொர்க்குக்கு மாறிக்கொள்ளலாம். இதற்கான முழு அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3 August 2019

Intelsat 17@66 °E அலைவரிசை எண்


TP: 3845 SR: 30000  Polarity: H or 18 DVB-S2
TP: 3845 SR: 28800  Polarity: V or 13 DVB-S2
TP: 3876 SR: 14300 Polarity: H or 18 DVB-S2
TP: 3885 SR: 30000 Polarity: V or 13 DVB-S2
TP: 3894 SR: 13840 Polarity: H or 18 DVB-S2
TP: 3914 SR: 11200 Polarity: H or 18 DVB-S2
TP: 3925 SR: 30000 Polarity: V or 13 DVB-S2
TP: 3932 SR: 18330 Polarity: H or 18 DVB-S2
TP: 3966 SR: 14400 Polarity: H or 18 DVB-S2
TP: 3980 SR: 7200   Polarity: V or 13 DVB-S2
TP: 3984 SR: 14400 Polarity: H or 18 DVB-S2
TP: 4006 SR: 14400 Polarity: H or 18 DVB-S2
TP: 4015 SR: 30000 Polarity: V or 13 DVB-S2
TP: 4024 SR: 14400 Polarity: H or 18 DVB-S2
TP: 4121 SR: 7200   Polarity: LH or 18 DVB-S2