Free To Informations

செல்வா சாட் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. SK ஆடியோஸ் (www.dolbyaudio.blogspot.com) எமது மற்றுமொரு இணையதளம்

சாப்ட்வேர் பதிவேற்றும் போது பழுதடைந்த செட்டப் பாக்ஸ் பழுது சரிசெய்து தரப்படும். டிஷ் பிட்டிங் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் தரப்படும். உங்கள் கருத்துக்களை என்னுடைய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

SOLID, WEZONE 8007, WEZONE 8785, 3G Dongle, WIFi Adapter Sale

30 November 2016

26 November 2016

இந்தியா சூப்பர் லீக் AsiaSat 5 @ 100.5E Feed


இந்தியா சூப்பர் லீக்
AsiaSat 5 @ 100.5E
TP: 3913 வி 9600
MPEG.4 / எச்டி Biss
SID.0001
26-11-2016
கீ:  A7 DA B2 33 DD AA 66 ED

கலைஞர் தொலைக்காட்சி அலைவரிசை மாற்றம்


கலைஞர் தொலைக்காட்சி
கலைஞர் seithigal
கலைஞர் Isai அருவி
கலைஞர் sirippoli
கலைஞர் சித்திரம்
கலைஞர் முரசு
News7 தமிழ்,
எம்.கே. ஆறு,
எம்.கே. ட்யூன்ஸ்,
சாய்ராம் டிவி
இந்த மாதம் 27 ஆம் இருந்து mpeg2 வில் இருந்து  DVBS2 க்கு மாற உள்ளது. 

அலைவரிசை விவரங்கள்

செயற்கைக்கோள்: IS7-66 ° கிழக்கு.
Freq: 3845mhz,
எஸ் / ஆர்: 28800 maps
Pol: செங்குத்து,
FEC: 5/6,
மாடுலேஷன்: டிவிபி S2 / 8PSK

23 November 2016

Solid 6159 HDS2 For sale 1500/-









Tatasky தமிழில் புதிதாக 8 சேனல் இணைக்க உள்ளது

Tatasky தமிழில் புதிதாக 8 சேனல் இணைக்க உள்ளது. இந்தியாவிலேயே மிக அதிக தமிழ் கொண்ட டிடீஎச்  இது மட்டுமே

சேனல் எண்கள் மற்றும் பெயர்கள்

1570 எம்.கே. ட்யூன்ஸ்
1571 எம்.கே. ஆறு
1572 மெகா Musiq
1573 மெகா 24
1574 ம் Sahana

1642 சரல் ஜீவன்
1642 Suddi டிவி
1643 பாலிமர் கன்னடம்

21 November 2016

உலக தொலைக்காட்சி தினம்


உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தொலைக்காட்சியின் முக்கியத்துவம் எடுத்து சொல்லப்படுகிறது.

1996 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துலக தொலைகாட்சி கருத்தரங்கின் விதந்துரைப்பின் படி ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 21 ஆம் தேதியை உலக தொலைக்காட்சி தினமாக அறிவித்தது. இதன்படி முதல் தொலைக்காட்சி தினம் 1997ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி கொண்டாடப்பட்டது.

உலகின் தொழிநுட்ப வளர்ச்சியின் பரிமாணத்தில் பல மின்சாதனப் பொருட்கள் மனிதர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் அவை ஒவ்வொன்றும் மனிதனின் ஒவ்வொரு தேவையை பு+ர்த்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. அந்த வகையில் மனிதனை ஓரிடத்திலிருந்து உலகில் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்று தொழில்நுட்ப சாதனம் மூலம் கண் முன்னே காட்டுவதே தொலைக்காட்சி ஆகும்.

பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவரையும் தன்பால் ஈர்த்து அவர்களை அணுகக்கூடிய ஒரே தொலைத்தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சி தான் முன்னிலை வகிக்கின்றது.

Videocon D2H ல் இரண்டு புதிய  HD சேனல்கள்

Videocon D2H ல் இரண்டு புதிய   HD சேனல்கள் சேர்க்கப்பட்டது

ஜீ மராத்தி எச்டி (Zee Marathi HD)
ஜீ பங்களா எச்டி (Zee Bangala HD)

18 November 2016

Sony Network ன் லோகோக்கள் மாற்றம்

Sony Network  ன்  அனைத்து சேனல்களும் இன்று  இரவு முதல் லோகோக்கள் மாற்ற போகிறது
12:00 AM PST
சோனி நெட்வொர்க்கில் புதிய லோகோக்கள் சேர்த்துள்ளார்.

My dish setup





11 November 2016

டிஷ் டிவி DTH உடன் இணைந்தது – வீடியோகான் D2H

பேச்சு வாக்கில் இருந்த செய்தி,  தற்போது அதிகாரப்பூர்வமாகியுள்ளது. 45 சதவீதத்தை நெருங்கிய ஒரு சந்தை பங்களிப்பை கொண்டதாக மாறியுள்ளது தற்போதை செய்தி…  Videcon D2H  மற்றும் டிஷ் டிவி இரு பிராண்ட் DTHகளும் தற்போது இணைந்து ஒன்றாகியுள்ளது

டிஷ் டிவி மற்றும் வீடியோகான் d2h  நிறுவனங்களின் டையரக்டர்களின் கூட்டத்தில் இந்த இரு நிறுவனங்களின் இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்கபட்டது. ஒவ்வொரு வீடியோகான் பங்கிற்கும் 2.021 அளவில் புதிய டிஷ் டிவி வீடியோகான்னுடன் பங்குகளை பெறுகின்றனர் எனவும். டிஷ் டிவி  பங்குதாரர்களுக்கு 55.4% எனவும் மீதம் உள்ள பங்குகள் வீடியோகான் பங்குதாரர்களுக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

டிஷ் டிவியில் இருந்து வெளியிட்ட செய்தி படி, டிஷ் டிவி  வீடியோகான்னுக்கு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குராக ஜவஹர்லால் கோயல் இருப்பார். இந்த இணைப்பின் மூலம் இந்தியாவில் உள்ள ஒரு முதன்மையான கேபிள் மற்றும் செயற்கைக்கோள் விநியோகம் தளம் உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

டிஷ் டிவி, வீடியோகான்னுக்கு இந்தியாவில் மொத்தமுள்ள  175 மில்லியன் டிவிகளில்,  27.6 மில்லியன் நிகர சந்தாதாரர்களை கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த நிறுவனத்தின் வருவாய், மார்ச் 31, 2016 வரை, ரூ. 5,915 கோடி எனவும் மேலும் செயல்பாட்டு லாபம். ரூ .1,826 கோடி எனவும் தெரிவித்துள்ளனர்.

“இந்தியாவில் நாங்கள் கேபிள் மற்றும் செயற்கைக்கோள் தொழில் வேகமாக டிஜிட்டல் மயமான பாதையில் முன்னேறி வருகிற, இந்த தருணத்தில் இந்த இணைப்பை அறியத்தருகிறோம். இந்தப் பரிவர்த்தனை, கேபிள் மற்றும் செயற்கைக்கோள் தொழிலில்  இரண்டு அதிகாரமுள்ள பிராண்டுகள் சேர்ந்துள்ளது, ” என திரு.கோயல் தெரிவித்துள்ளார்.

சவுரப் தூத் , Vd2h  நிறுவனத்தின் செயல் தலைவர் கூறுகையில்: “ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வீடியோகான் d2h வர்த்தகத்தை துவக்கினோம் என்பதால், நாம் ஒரு திட அடித்தளத்தை கொண்டு மிகவும் வெற்றிகரமான, உயர் வளர்ச்சியை DTH வணிகத்தில்  உருவாக்கியுள்ளது. இதை நாம் அடுத்த கட்டத்திற்கு எடுத்து ஒரு முன்னணி, புதுமையான மற்றும் மிகவும் இலாபகரமான இந்திய ஊடகத்துறை அரங்கை வெளிப்படுத்த ஒரு பார்வையாக NASDAQ சென்றோம். இன்று நம் முன் தீர்க்கமான மற்றும் நிரூபிக்கப்பட்ட தலைமையுடன் ஒரு திட தளம் உருவாக்க அனைத்து பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், மற்றும் எங்கள் பங்குதாரர்களின் பெறுமதியை உருவாக்க வழிவகுக்கும் டிஷ் டிவியுடன்  வீடியோகான் இணைந்தது மிகவும் உற்சாகமாக உள்ளது என கூறினார்.

போட்டிகள் நிறைந்த இந்திய DTH துறை இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறதோ…!!?     

10 November 2016

3 ஆம் கட்ட டிஜிட்டலாக்க காலக்கெடு தடையை நீக்கியது – டில்லி உயர்நீதிமன்றம்…!!

டில்லி உயர் நீதிமன்றம்… கட்டாய டிஜிட்டலாக்கம் DAS 3 வது கட்ட அமலாக்கத்திற்கு வெவ்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் விதித்த தடை ஆணையை ரத்து செய்து டிஜிட்டலாக்கத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.  4 மாநிலங்களில், தொடுக்கப்பட்ட 9 வழக்குகளுக்கு தடை ஆணையை விலக்கி டிஜிட்டலாக்கத்திற்கான தடை உத்தரவை நீக்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31, 2015 டிஜிட்டலாக்கம் 3ஆம் கட்ட அமலாக்க காலக்கெடுவை எதிர்த்து  பல்வேறு மாநில உயர் நீதி மன்றங்களின் மூலம் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவுகளினால் டிஜிட்டலாக்கம் அமல்படுத்துவது மிகுந்த பாதிபிற்கு உள்ளானது. பின்னர், ஏப்ரல் மாதம் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் (MIB) பரிந்துரையின் மீது, உச்ச நீதிமன்றம் DAS 3 ஆம் கட்ட அமலாக்கம் காலக்கெடு நீட்டிப்பு குறித்து பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளையும் டில்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றிவிட்டது. இதனால் டிஜிட்டலாக்கம் தொடர்பான அனைத்து வழக்குகளுக்கும் ஒரு நியமிக்கப்பட்ட நீதிமன்றமாக செயல்படும்.

நவம்பர் 3 தேதியில் பிறப்பித்த தனது உத்தரவில், தில்லி உயர் நீதிமன்றத்தின் ஒற்றை பெஞ்ச் நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, டிஜிட்டலாக்கம் பற்றி தங்கள் நெட்வொர்க்குகளில் அனலாக் சிக்னல்களை நிறுத்தப்படுவது குறித்து ஒரு ஸ்க்ரோலிங் விளம்பரத்தை 3 வாரங்களுக்கு ஒளிபரப்ப வேண்டும்.. எனவும் குறிப்பிட்ட நீதிபதி…  அனைத்து 9 மனுதாரர்களும் நீட்டிப்பு தேடினார்கள்… அவர்களுக்கான நேரம் கொடுக்கப்பட்டுவிட்டது மேலும் நீட்டிப்பு அந்த தேதிகளில் நிறைவேற்றப்பட்டது எனவே இந்த வழக்குகள் பலனளிக்காத ஒன்று என கூறினார்.

9 வழக்குகளுக்கு இந்த கட்டளை வழங்கப்பட்டது …4 மாநிலங்களில், – கர்நாடகா (Riddhi Vision, Victory Digital, Sri Chowdeshwary Cable Network, Yogesh Cable Networks, Amma TV), கேரளா (Athulay Infomedia), ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா (Panchajanya Media) , உத்தரப் பிரதேசம் (Sai Cable TV Network, Sunil Kr Singh).

VD வாத்வா, தலைமை செயல் அதிகாரி ,சிட்டி நெட்வொர்க்ஸ் லிமிடெட் கூறுகையில், ” மாண்புமிகு டில்லி உயர் நீதிமன்றம் டிஜிட்டலாக்கத்திற்கான பாதை வகுத்து, 9 வழக்குகளை தள்ளுபடி செய்துள்ளது என்பது ஒரு மிக முக்கியமான தீர்ப்பு. இந்த உத்தரவு வெறும் DAS 3ஆம் கட்ட  பகுதிகளுக்கு மட்டுமல்லாமல்,  டிஜிட்டலாக்கத்தின் 4ஆம் கட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது” என குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில் டிஜிட்டல் மயம் என்பது குறிப்பாக தரமான சேவை சேனல் தொகுப்புகளில் இன்னும் அதிக தேர்வு கிடைக்கும்.. என சந்தாதாரர்களுக்கு மட்டும்மல்லாமல். உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், MSO மற்றும் ஒளிபரப்பாளர்கள் என அனைவருக்கும் மிக முக்கியமானது என்றும் கூறியவர். “இது டிராய் வழிகாட்டுதலின் படி வருவாய் பகிர்வு செய்தலை அனுமதிக்கும். மேலும் இந்த வகையில் இணைய ஊடுருவல் அதிகரித்து இதனால் டிஜிட்டல் இந்தியா கனவு நிறைவேற்றுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும். நான் அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்ககின்றேன்… கெளரவமான நீதிமன்றத்தின் உத்தரவுகளை பின்பற்றி டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ்களை உடனடியாக நிறுவுங்கள்… மேலும் 3 வார காலத்தில் அனலாக் சிக்னல்களையும் நிறுத்த வேண்டும், “எனவும் அவர் தெரிவித்தார்.

     

சன் டிவி உள்ளிட்ட விளம்பர வரையறையை மீறிய 137 சேனல்கள் பட்டியல் வெளியிட்டது – TRAI…!!



இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 137 சேனல்கள் (112 செய்தி அல்லாத சேனல்கள் மற்றும் 25 செய்தி சேனல்கள்) மார்ச் 28, 2016 முதல் ஜூன் 26, 2016 இடையிலான காலகட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட விளம்பரம் என்ற TRAI யின் வரையறை மீறியுள்ளதாக அறிவித்துள்ளது.

செய்தி அல்லாத சேனல்களில் B4U மூவிஸ் சேனல் (B4U பிராட்பேண்ட் இந்தியா பிரைவேட். லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது) பிரைம் டைம் நேரமான (இரவு 7 மணி மற்றும் இரவு 10 மணி) அதிகபட்சமாக சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு விளம்பரங்களை 24.54 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்யபப்பட்டதாக டிராய் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து தரவு வெளியிட்டுள்ளது. 

செய்தி சேனல்களில், ETV ராஜஸ்தான் (பனோரமா தொலைக்காட்சி லிமிடட்.நிறுவனத்திற்கு  சொந்தமான) சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 21.96 நிமிடங்கள் என்ற அளவில் விளம்பரங்களை ஒளிபரப்பு செய்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

மேலும் இந்த பட்டியலில் சன் டிவி, ஸ்டார் பிளஸ்,SAB மற்றும் Colors சேனல்களும் NDTV Profit மற்றும் CNN IBN போன்ற ஆங்கில கட்டண செய்தி சேனல்கள் உள்ளிட்ட  பிரபலமான GECs  சேனல்களும் பட்டியலில் உள்ளது

மேலும் இந்த அட்டவணையில் Movies Now,Star Movies, Zee Cinema மற்றும் SET MAX  போன்ற சேனல்களும் ஒரு மணி நேரத்திற்கு 12 நிமிட விளம்பரம் என்ற வரையறைக்கு இணங்கவில்லை என்பதை தனது வலைதளத்தில் தரவுகளுடன் குறிப்பிட்டுள்ளது. 

 

டிராய் மற்ற பிற கட்டண சேனல்கள் (Non NEWS மற்றும் News சேனல்கள் ) பிரைம் டைம் எனப்படும் 7 pm-10pm வரையிலான காலத்தில் விளம்பரங்களை ஒரு மணிக்கு 12 நிமிடங்கள் (10 நிமிடம் வணிகவிளம்பரம் மற்றும் 2 நிமிடம் நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரம்) என சராசரி கால அளவவிற்கு குறைவாக கொண்டுவருகின்றனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் செய்தி அல்லாத சேனல்களில் ஒரு மணிநேரத்திற்கு 12 நிமிடங்கள் விளம்பரம் என்ற வரையறையை.. தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI 2013 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களின் சவாலுக்குட்படுத்தப்பட்ட பிறகு, விளம்பரம் வரையறை விஷயம் டில்லி உயர் நீதிமன்றத்த்தின் விசாரணையில் உள்ளது.

9 November 2016

ரிலையன்ஸ் RJio டிடிஎச் சேவையில் நுழைய தயாராகி வருகிறது

ரிலையன்ஸ் RJio டிடிஎச் சேவையில் நுழைய தயாராகி வருகிறது.


நாட்டில் டிடிஎச் சேவையை  வாழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்
டிடிஎச் சேவை மலிவாக RJio வழங்க முடியும் என தெறிவித்துள்ளது.
பிற நிறுவனங்களைக் காட்டிலும் சிறப்பாக RJio, டிடிஎச்   திட்டமிட்டுள்ளது.
ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டிஷ் டிவி, டாடா ஸ்கை, வீடியோகான் d2h போன்ற நிறுவனங்களுக்கு  சிரமமாக இருக்கும்.

8 November 2016

Telstar 18@138 History Tv கட்டண சேனல் தற்காளிகமாக இலவச ஔிபரப்பு....

Telstar 18@138 டிகிரி
செயற்கைக்கோள் Ku பேண்ட் வழியாக ஒலிபரப்படும் ஹிஸ்டரி டீவி     (History  Tv )  கட்டண சேனல் இப்பொழுது தற்காளிகமாக இலவச ஔிபரப்பு....
டி.பி : 12272 H 33333



6 November 2016

2 புதிய சேனல்கள் AsiaSat 7 @ 105.5E ல்  இனணப்பு

2 புதிய சேனல்கள் AsiaSat 7 @ 105.5E ல்  இனணப்பு

சேனல்கள் பெயர்:
AXN பாக்கிஸ்தான்
Filmax பாக்கிஸ்தான்
சேனல்கள் வகை: கட்டணம்
அதிர்வெண்: 4166 H 5040

5 November 2016

NDTV ஒரு நாள் ஒளிபரப்பு தடை

NDTV இந்தியா, பழமையான மற்றும் பெருமதிப்பு வாய்ந்த இந்தி செய்தி சேனல்களில் ஒன்றாக திகழும் சேனல், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது அதற்கு காரணம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை (I&B) அமைச்சகம்… கேபிள் டிவி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் நவம்பர் 9 ஆம் நாளன்று 00:01 மணி முதல், 10 நவம்பர் 2016 00:01 மணி வரை தடை ஒளிபரப்பை தடை செய்து உத்தரவை பிறப்பித்துள்ளது .இந்த தடை அமுலுக்கு வரும் பட்சத்தில் இந்தியா முழுவதுதிலும் கேபிள்டிவி, DTH, IPTV, HITS என அனைத்து தளத்திலும் NDTV இந்தியா சேனலின் ஒரு நாள் ஒளிபரப்பு மற்றும் மறு ஒளிபரப்பு தடை செய்யப்படும்.

எடிட்டர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா அமைப்பு இதற்கு கடுமையாக கண்டித்ததுடன், பத்திரிகை சுதந்திரத்தை “நேரடியாக மீறும் வகையில் உள்ளது என தெரிவித்தனர். இதற்கிடையே NDTV தகவல் அமைச்சகம் இந்த முடிவை கைவிடவேண்டும் என தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இதனிடையே ஒரு சில விளம்பரத்துறை நிபுணர்களிடம் பேசுகையில்… NDTV இந்தியா ஒரு நாள் ஒளிபரப்பு ரத்து செய்வதால் எவ்வளவு விளம்பர வருவாய் நஷ்டம் ஆகும் என கேட்கையில்…..

நிபுணர்கள் கூறியது  NDTV இந்தியா சேனல் ஒரு நாள் ஒளிபரப்பு ரத்து செய்தால் சுமார் ரூ 18-20 லட்சம் வரையிலான விளம்பர வருவாயை இழக்க நேரிடும் என தெரிவித்தனர். “இது ஒரு உத்தேச தொகை ஆகும். NDTV இந்தியா சேனலில் சுமார் 30% அளவிலான விளம்பரம் நேரங்கள் காலியாக செல்கிறது. அதனால் அவர்களின் ஒரு நாள் ஒளிபரப்பு ரத்தை , அவர்கள் பின்வரும் நாட்களில் விளம்பரதாரர்களுக்கு கூடுதல் நேரத்தை கொடுத்து அவர்களால் ஈடு செய்ய முடியும் எனவும்… தெரிவித்துள்ளனர்.

மதிப்பீடுகளின் விவரங்கள் படி NDTV இந்தியா சேனலின் ஒரு 10 விநாடி விளம்பர கட்டணம் சுமார் ரூ 1000-1500 என  வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் இந்த ஒளிபரப்பு ரத்து அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என நம்புவதாகவும்   தெரிவித்தனர்.

3 November 2016

விரைவில் வீடியோகான் d2h டிஷ் டிவி இணைய உள்ளது

விரைவில் வீடியோகான் d2h டிஷ் டிவி இணைய உள்ளது

டிஷ் டிவி இந்தியாவில் கிட்டத்தட்ட 45 சதவீதம் பயனாளர்களை பெற்று மிகப்பெரிய வளர்ச்சி பெற்றுள்ளது. வீடியோகான் d2h ன் 45% பங்குகளை பெற  டிஷ் டிவி இறுதி கட்ட ஒப்பந்த்தில் கையொப்பம் இட உள்ளது.

Apstar 7@76.5 ° கி யுனிவர்சல் நெட்வொர்க்ஸ் பவர் வியு கீ

Apstar 7@76.5 ° கி
யுனிவர்சல் நெட்வொர்க்ஸ்
3720 29620
சாவி 0: 01 23 45 67 89 AB CD
சாவி 1: 82 C0 EF D8 2E AF 93

சோனி சேனல்கள் தற்காளிகமாக இலவசம்

சோனி  சேனல்கள் தற்காளிகமாக இலவசம்
 இண்டல்ஸட் 20 இருந்து 68.5 ° கிழக்கு

Intelsat20@68.5 °E

Temporary FTA sank group channel

1 November 2016

கேபிள் 'டிவி' சந்தாதாரர்கள் டி.டி.எச்.,க்கு மாறும் அபாயம்! 'டிராய்' கிடுக்கிப்பிடியால் அரசுக்கு பல கோடி நஷ்டமாகும்

கேபிள் 'டிவி' சந்தாதாரர்கள் டி.டி.எச்.,க்கு மாறும் அபாயம்! 'டிராய்' கிடுக்கிப்பிடியால் அரசுக்கு பல கோடி நஷ்டமாகும்

'டிசம்பர் இறுதிக்குள், 'டிஜிட்டல்' தொழில்நுட்பம் அடிப்படையிலான ஒளிபரப்பிற்கு, கேபிள் ஆபரேட்டர்கள் மாற வேண்டும்' என, மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனால், தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 40 லட்சம் சந்தாதாரர்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஒரு சில தனியார் நிறுவனங்கள், கேபிள் தொழிலில் ஆதிக்கம் செலுத்தியதுடன், பொதுமக்கள் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்தன. பொதுமக்கள், மாதக் கட்டணமாக, 150 முதல், 250 ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.
கட்டாயமக்கியது

இதை தடுக்கும் பொருட்டு, அரசு கேபிள் நிறுவனம், 100 இலவச மற்றும் கட்டண சேனல்களை, மாதம், 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது.இதற்கிடையில், சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில், 'செட்டாப் பாக்ஸ்' அடிப்படையிலான, 'டிஜிட்டல்' ஒளிபரப்பை, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' 2012 முதல் கட்டாயமக்கியது. அதற்கான உரிமங்களை, எம்.எஸ்.ஓ., எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியது.

ஆனால், 'அரசு கேபிள் நிறுவனம், அரசுக்கு சொந்தமானது என்பதால் டிஜிட்டல் உரிமம் வழங்க முடியாது' என, டிராய் மறுத்தது; இதை எதிர்த்து, தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், 'டிச., 31 முதல் அனைத்து கிராம பகுதிகளிலும் டிஜிட்டல் ஒளிபரப்பு மட்டுமே இருக்க வேண்டும்' என, டிராய் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால், கிராம பகுதிகளில் அரசு கேபிள் வழங்கி வரும், 'அனலாக்' அடிப்படையிலான சாதாரண ஒளிபரப்பு சேவை பாதிக்கப்படும்.அதற்கு, தங்களது முக்கிய சேனல்களை, தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் வழங்கமறுக்கும் நிலையும் ஏற்படும். இதன் காரணமாக, டி.டி.எச்., என்ற, 'டிஷ் ஆன்டெனா' மூலமான நேரடி ஒளிபரப்பு சேவையை மக்கள் நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக கேபிள் ஆபரேட்டர்கள் நலச் சங்க தலைவர் தாமோதரன் கூறியதாவது:

தமிழகத்தில், 1.7 கோடி முதல், 2 கோடி கேபிள் சந்தாதாரர்கள் உள்ளனர். அவர்களில், 60 முதல், 70 லட்சம் பேர், ஏற்கனவே, டி.டி.எச்.,க்கு மாறி விட்டனர். மேலும், 20 லட்சம் பேர், சில தனியார் எம்.எஸ்.ஓ.,க்களிடம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான, 'செட்டாப் பாக்ஸ்'களை பெற்றுள்ளனர்.

அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்திடம், 70 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். 'அந்நிறுவனம் தரும் சேவையை நாங்கள் தருகிறோம்; டிச., 31க்குள், அனைத்து சந்தாதாரர்களும் செட்டாப் பாக்ஸ் முறைக்கு மாற வேண்டும்' என, டிராய் கூறிவிட்டது.
அதனால், ஜனவரி முதல், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், பெரும்பாலான சேனல்களை எங்களுக்கு வழங்காது என தெரிகிறது. எனவே, அரசு கேபிள் நிறுவனத்தில் இருந்து, 40 லட்சத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள்,டி.டி.எச்.,க்கு மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்படி மாறினால், தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். மேலும் இத்தொழிலை நம்பியுள்ள, 40 ஆயிரம் ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். எனவே, தமிழக அரசு, நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசுக்கு இழப்பு!

தமிழகத்தில் தற்போது, 70 லட்சம் பேர், அரசு கேபிள் சந்தாதாரர்களாக உள்ளனர். ஒவ்வொருவரும் மாதக் கட்டணமாக, 70 ரூபாய் செலுத்துகின்றனர். இதில், கேபிள் ஆபரேட்டர்கள், ஒரு இணைப்புக்கு, 20 ரூபாய் வீதம் அரசுக்கு செலுத்துகின்றனர். இதன் வாயிலாக, அரசுக்கு மாதந்தோறும் கணிசமான வருவாய் கிடைக்கிறது.ஜனவரிக்கு பின், இவர்கள் அனைவரும் அரசு கேபிள், 'டிவி'யை விட்டு விலகினால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
எதிர்பார்ப்பு!

சென்னையில், 'எஸ்.சி.வி., - டி.சி.சி.எல்., அக் ஷயா என, 10 எம்.எஸ்.ஓ.,க்கள், டிஜிட்டல் ஒளிபரப்பை வழங்கி வருகின்றன. ஆனால், தமிழகத்தில், 250 பேர் இதற்கான உரிமத்தை மத்திய அரசிடம் பெற்றுள்ளனர். அவர்களில் பலர், அரசு கேபிள் நிறுவனத்துடன் இணைந்து சாதாரண ஒளிபரப்பை வழங்கி வருகின்றனர்.'ஒருவேளை, தமிழக அரசுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டால், எம்.எஸ்.ஓ., உரிமம் வாங்கி இருக்கும் எங்களை விடுவித்து, எங்கள் குடும்பங்களை வாழ வைக்க வேண்டும்' என, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-தினமலர் நிருபர் - 01-11-16